வலைவாசல்:கணினி நிரலாக்கம்/தேர்ந்தெடுக்கப்பட்ட சுயசரிதை/3
பவுல் கார்டினர் ஆல்லென் (Paul Gardner Allen, பிறப்பு சனவரி 21, 1953) அமெரிக்க பெரும்வணிகரும் முதலீட்டாளரும் வள்ளலும் ஆவார். பில் கேட்சுடன் இணைந்து இவர் நிறுவிய மைக்ரோசாப்ட் மூலம் பெரிதும் அறியப்படுகிறார். மார்ச்சு 2013 நிலவரப்படி, $15 மில்லியன் செல்வத்திற்கு உரிமையாளராக உலகின் 53வது செல்வமிக்க நபராக மதிப்பிடப்பட்டுள்ளார். தமது பல்வேறு வணிக முயற்சிகளையும் ஈதல் திட்டங்களையும் மேலாள வல்கன் இன்க் என்ற நிறுவனத்தை உருவாக்கி அதன் தலைவராக உள்ளார். ஆல்லென் தொழில் நுட்ப நிறுவனங்களிலும் நிலச்சொத்து நிறுவனங்களிலும் ஊடகம், உள்ளுரை நிறுவனங்களிலும் பல பில்லியன் பணத்தை முதலீடு செய்துள்ளார். மேலும் இரு தொழில்முறை விளையாட்டு அணிகளுக்கு உரிமையாளராக உள்ளார்; என்எஃப்எல்லில் சியாட்டில் சீஹாக்குகள் மற்றும் என்.பி.ஏ.வில் போர்ட்லன்ட் டிரயில் பிளேசர்ஸ். ஆல்லென் ஏப்ரல் 19, 2011 அன்று தமது நீங்காநினைவுகளை ஐடியா மேன்: எ மெமோய்ர் பை தி கோபவுண்டர் அஃப் மைக்ரோசாப்ட் என்ற நூலாக வெளியிட்டார். இதன் சாதாரண பதிப்பு அக்டோபர் 30, 2012இல் வெளியானது.