என். பி. ஏ. (தேசிய கூடைப்பந்தாட்டச் சங்கம்)

(என்.பி.ஏ. இலிருந்து வழிமாற்றப்பட்டது)

என். பி. ஏ. (NBA) என்று பொதுவாக அழைக்கப்படும் நேஷனல் பாஸ்கெட்பால் அசோசியேஷன் (National Basketball Association), தமிழ் மொழிபெயர்ப்பு தேசிய கூடைப்பந்தாட்டச் சங்கம், அமெரிக்காவிலும் கனடாவிலும் செயற்படும் கூடைப்பந்துச் சங்கம் ஆகும். வட அமெரிக்காவில் நான்கு மிகப்பெரிய விளையாட்டு சங்கங்களுள் ஒன்றாகும். இந்தச் சங்கத்தில் 30 அணிகள் உள்ளன.

தேசிய கூடைப்பந்தாட்டச் சங்கம்
தற்போதைய பருவம், போட்டி அல்லது பதிப்பு:
2014 என்.பி.எ இறுதிகள்
விளையாட்டுBasketball
நிறுவல்June 6, 1946 (as BAA),
நியூயார்க் நகரம், நியூ யோர்க் மாநிலம், அமெரிக்க ஐக்கிய நாடு
ஆணையர்Adam Silver
துவக்கப் பருவம்1946–47
அணிகளின் எண்ணிக்கை30
நாடுகள்United States (29 teams)
Canada (1 team)
கண்டம்FIBA Americas
மிக அண்மித்த வாகையாளர்(கள்)மயாமி ஹீட் (3rd title)
மிகுந்த வாகைகள்பாஸ்டன் செல்டிக்ஸ் (17 titles)
தொ.கா. பங்காளி(கள்)ABC/ESPN, NBA TV, TNT
அலுவல்முறை வலைத்தளம்www.nba.com

வரலாறு

தொகு

என்.பி.ஏ. வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற எதிரிடை லேகர்ஸ்-செல்டிக்ஸ் எதிரிடை ஆகும். மொத்தத்தில் இந்த இரண்டு அணிகல் 31 தடவை இறுதிப்போட்டிகளை வெற்றிபெற்றுள்ளன. 1960களில் பில் ரசல், பாப் கூசி இருக்கும் செல்டிக்ஸ் அணிகள் மற்றும் எல்ஜின் பெய்லர், ஜெரி வெஸ்ட் இருக்கும் லேகர்ஸ் அணிகள் ஆறு தடவை இறுதிப்போட்டிகளில் மோதி ஆறும் செல்டிக்ஸ் வெற்றிபெற்றது. 1980களில் லேகர்ஸ் அணியின் மேஜிக் ஜான்சன் மற்றும் செல்டிக்ஸ் அணியின் லாரி பர்ட் என்.பி.ஏ.இல் தலைசிறந்த வீரர்களாக இருந்தார்கள். இப்பத்தாண்டில் மூன்று இறுதிப்போட்டிகளில் இந்த இரண்டு அணிகளும் மோதின; இதில் லேகர்ஸ் இரண்டு தடவை வெற்றிபெற்றன.

2008 பருவத்துக்கு முன் செல்டிக்ஸ் அணி சானிக்ஸ் மற்றும் டிம்பர்வுல்வ்ஸ் அணிகளுடன் வியாபாரம் செய்து தலைசிறந்த புள்ளிபெற்ற பின்காவல் ரே ஏலன் மற்றும் வலிய முன்நிலை கெவின் கார்னெட் செல்டிக்ஸ் அணியுக்கு கூட்டல் செய்தன. லேகர்ஸ் அணி நடு பருவத்தில் கிரிசிலீஸ் அணியுடன் வியாபாரம் செய்து வலிய முன்நிலை பாவ் கசோலை கூட்டல் செய்தன. இதனால் இரண்டு அணியில் ஒரு "பெரிய மூன்று" தலைசிறந்த வீரர்கள் உள்ளன—செல்டிக்ஸில் கார்னெட், ஏலன், மற்றும் பால் பியர்ஸ்; லேகர்ஸில் கசோல், கோபி பிரயன்ட் மற்றும் லமார் ஓடம்.

இதுவரை போஸ்டன்செல்டிக்ஸ் அணி அதிகமுறை (17) சாம்பியன் பட்டம் வென்றுள்ளது, இதற்கு அடுத்தபடியாக லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ் (15) சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

ஜூன் 6, 1946 நியூயார்க் நகரில் அமெரிக்கக் கூடைப்பந்தாட்டச் சங்கம் என்று தொடங்கப்பட்ட இச்சங்கத்தின் அலுவலகங்கள் நியூயார்க் நகரில் அமைந்துள்ளன. 1984 முதல் இன்று வரை என்.பி.ஏ.-இன் ஆணையர் டேவிட் ஸ்டர்ன் ஆவார்.

அணிகள்

தொகு

என்.பி.ஏ. ஆனது 1946 இல் ஆரம்பிக்கப்படும் போது 11 அணிகளைக் கொண்டிருந்தது. தற்போது 30 அணிகளைக் கொண்டுள்ளது. இவற்றுள் 29 அணிகள் அமெரிக்காவிலும் ஒரு அணி கனடாவிலும் அமைந்துள்ளன. பாஸ்டன் செல்டிக்ஸ் அணியே 17 என்.பி.ஏ. வெற்றிகளுடன் அதிக வெற்றிகளை பெற்ற அணியாக விளங்குகின்றது. லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ் அணி 11 வெற்றிகளுடன் 2 ஆவது இடத்தில் உள்ளது.

கிழக்குக் கூட்டம்

தொகு
பகுதி அணி ஊர் நிறங்கள் விளையாட்டு மைதானம் ஏற்படுத்த ஆண்டு
அட்லான்டிக் பாஸ்டன் செல்டிக்ஸ் பாஸ்டன், மஸ்ஸாசூசெட்ஸ் பச்சை, வெள்ளை டி.டி. பாங்க்நார்த் கார்டன் 1946
நியூ ஜெர்சி நெட்ஸ் கிழக்கு ரதர்ஃபோர்ட், நியூ ஜெர்சி நீலம், சிவப்பு, வெள்ளை ஐசாட் சென்டர் 1967*
நியூ யோர்க் நிக்ஸ் நியூயார்க் நகரம், நியூ யோர்க் ஆரஞ்ஜ், நீலம், வெள்ளை மேடிசன் ஸ்குவேர் கார்டன் 1946
ஃபிலடெல்ஃபியா 76அர்ஸ் ஃபிலடெல்ஃபியா, பென்சில்வேனியா கறுப்பு, சிவப்பு, தங்கம், நீலம் வகோவியா சென்டர் 1939*
டொராண்டோ ராப்டர்ஸ் டொராண்டோ, கனடா சிவப்பு, கறுப்பு, வெள்ளி, வெள்ளை ஏர் கனடா சென்டர் 1995
மத்திய சிகாகோ புல்ஸ் சிகாகோ, இலினொய் சிவப்பு, கறுப்பு, வெள்ளை யுனைடெட் சென்டர் 1966
கிளீவ்லன்ட் கேவலியர்ஸ் கிளீவ்லன்ட், ஒகைய்யோ கள் நிறம், தங்கம், சிவப்பு குயிகன் லோன்ஸ் அரீனா 1970
டிட்ராயிட் பிஸ்டன்ஸ் ஆபர்ன் ஹில்ஸ், மிச்சிகன் சிவப்பு, வெள்ளை, நீலம் த பேலஸ் அட் ஆபர்ன் ஹில்ஸ் 1941*
இந்தியானா பேசர்ஸ் இண்டியானபொலிஸ், இந்தியானா நீலம், மஞ்சள், வெள்ளை கன்சிகோ ஃபீள்ட் ஹவுஸ் 1967
மில்வாகி பக்ஸ் மில்வாகி, விஸ்கொன்சின் பச்சை, சிவப்பு, வெள்ளை ப்ராட்லி சென்டர் 1968
தென்கிழக்கு அட்லான்டா ஹாக்ஸ் அட்லான்டா, ஜோர்ஜியா சிவப்பு, நீலம், வெள்ளை ஃபிலிப்ஸ் அரீனா 1946*
ஷார்லட் பாப்கேட்ஸ் ஷார்லட், வட கரோலினா ஆரஞ்ஜ், நீலம், கறுப்பு, வெள்ளி ஷார்லட் பாப்கேட்ஸ் அரீனா 2004
மயாமி ஹீட் மயாமி, புளோரிடா கறுப்பு, சிவப்பு, மஞ்சள் அமெரிக்கன் எயர்லைன்ஸ் அரீனா 1988
ஒர்லான்டோ மேஜிக் ஒர்லான்டோ, புளோரிடா நீலம், கறுப்பு, வெள்ளி ஏம்வே அரீனா 1989
வாஷிங்டன் விசர்ட்ஸ் வாஷிங்டன், டி. சி நீலம், கறுப்பு, தங்கம் வெரைசன் சென்டர் 1961*

மேற்கு கூட்டம்

தொகு
பகுதி அணி ஊர் நிறங்கள் விளையாட்டு மைதானம் ஏற்படுத்த ஆண்டு
தென்மேற்கு டாலஸ் மேவரிக்ஸ் டாலஸ், டெக்சாஸ் நீலம், வெள்ளி, கறுப்பு அமெரிக்கன் எயர்லைன்ஸ் சென்டர் 1980
ஹியூஸ்டன் ராகெட்ஸ் ஹியூஸ்டன், டெக்சாஸ் சிவப்பு, வெள்ளை டொயோடா சென்டர் 1967*
மெம்ஃபிஸ் கிரிச்லீஸ் மெம்ஃபிஸ், டென்னசி காளிக்கம், வான நீலம், தங்கம், வெள்ளை ஃபெடெக்ஸ் ஃபோரம் 1995*
நியூ ஓர்லியன்ஸ் ஹார்னெட்ஸ் நியூ ஓர்லியன்ஸ், லூசியானா ஊதா, பச்சை, தங்கம், வெள்ளை நியூ ஓர்லியன்ஸ் அரீனா 1988*
சான் அன்டோனியோ ஸ்பர்ஸ் சான் அன்டோனியோ, டெக்சாஸ் வெள்ளி, கறுப்பு ஏடி&டி சென்டர் 1967*
வட மேற்கு டென்வர் நகெட்ஸ் டென்வர், கொலராடோ வான நீலம், தங்கம், வெள்ளை பெப்சி சென்டர் 1967
மினசோட்டா டிம்பர்வுல்வ்ஸ் மினியாபோலிஸ், மினசோட்டா நீலம், பச்சை, கறுப்பு, வெள்ளி டார்கெட் சென்டர் 1989
போர்ட்லன்ட் டிரயில் பிளேசர்ஸ் போர்ட்லன்ட், ஒரிகன் கறுப்பு, சிவப்பு, வெள்ளி ரோஸ் கார்டன் 1970
ஓக்லஹோமா நகரின் என்.பி.ஏ. அணி ஓக்லஹோமா நகரம், ஓக்லஹோமா இன்று வரை தெரியவில்லை ஃபோர்ட் சென்டர் 2008
யூட்டா ஜேஸ் சால்ட் லேக் நகரம், யூட்டா காளிக்கம், வான நீலம், ஊதா, வெள்ளி எனர்ஜி சொல்யூஷன்ஸ் அரீனா 1974*
பசிஃபிக் கோல்டன் ஸ்டேட் வாரியர்ஸ் ஓக்லன்ட், கலிஃபோர்னியா நீலம், ஆரஞ்ஜ், மஞ்சள் ஓரகில் அரீனா 1946*
லாஸ் ஏஞ்சலஸ் க்ளிப்பர்ஸ் லாஸ் ஏஞ்சலஸ், கலிஃபோர்னியா சிவப்பு, நீலம், வெள்ளை ஸ்டேபிள்ஸ் சென்டர் 1970*
லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ் லாஸ் ஏஞ்சலஸ், கலிஃபோர்னியா ஊதா, தங்கம், வெள்ளை ஸ்டேபிள்ஸ் சென்டர் 1946*
ஃபீனிக்ஸ் சன்ஸ் ஃபீனிக்ஸ், அரிசோனா ஊதா, ஆரஞ்ஜ், வெள்ளை யூ. எஸ். எயர்வேய்ஸ் சென்டர் 1968
சேக்ரமெண்டோ கிங்ஸ் சேக்ரமெண்டோ, கலிஃபோர்னியா ஊதா, வெள்ளை, வெள்ளி, கறுப்பு ஆர்கோ அரீனா 1945*

வெளி இணைப்புகள்

தொகு