நியூ செர்சி

ஐக்கிய அமெரிக்க நாடுகளின் ஒரு மாநிலம்
(நியூ ஜெர்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நியூ செர்சி (நியூ ஜெர்சி, New Jersey(ஆங்கில மொழியில்)), ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் இட்ரென்டன், மிகப்பெரிய நகரம் நியூவர்க்.

நியூ செர்சி மாநிலம்
Flag of நியூ செர்சி State seal of நியூ செர்சி
நியூ செர்சியின் கொடி நியூ செர்சி மாநில
சின்னம்
புனைபெயர்(கள்): தோட்டம் மாநிலம்[1]
குறிக்கோள்(கள்): விடுதலையும் பொருளும்
நியூ செர்சி மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
நியூ செர்சி மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்) இல்லை
தலைநகரம் இட்ரென்டன்
பெரிய நகரம் நியூவர்க்
பரப்பளவு  47வது
 - மொத்தம் 8,729 சதுர மைல்
(22,608 கிமீ²)
 - அகலம் 70 மைல் (110 கிமீ)
 - நீளம் 150 மைல் (240 கிமீ)
 - % நீர் 14.9
 - அகலாங்கு 38° 56′ வ - 41° 21′ வ
 - நெட்டாங்கு 73° 54′ மே - 75° 34′ மே
மக்கள் தொகை  11வது
 - மொத்தம் (2000) (8,724,560
 - மக்களடர்த்தி 1,134/சதுர மைல் 
438/கிமீ² (1வது)
 - சராசரி வருமானம்  $56,772 (2வது)
உயரம்  
 - உயர்ந்த புள்ளி உயர் திக்கு[2]
1,803 அடி  (550 மீ)
 - சராசரி உயரம் 246 அடி  (75.2 மீ)
 - தாழ்ந்த புள்ளி அட்லான்டிக் பெருங்கடல்[2]
0 அடி  (0 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
டிசம்பர் 18, 1787 (3வது)
ஆளுனர் கிரிஸ் கிரிஸ்டி
செனட்டர்கள் ஃப்ராங்க் லாவ்டென்பர்க் (D)
பாப் மெனென்டெஸ் (D)
நேரவலயம் கிழக்கு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-5/-4
சுருக்கங்கள் NJ N.J. US-NJ
இணையத்தளம் www.state.nj.us

ஐக்கிய அமெரிக்கா உருவாகிய நாட்களில் இது 3 ஆவது மாநிலமாக 1787 இல் இணைந்தது.

புவியமைப்பு

தொகு

நியூ செர்சி மாநிலம் அமெரிக்காவின் வடகிழக்கு மற்றும் மத்திய அட்லாண்டிக் பிரதேசங்களுக்கு இடையில் அமைந்துள்ளது. இம்மாநிலத்திற்கு கிழக்கில் அட்லாண்டிக் பெருங்கடல், மேற்கில் பென்சில்வேனியா, தெற்கில் டெலவேர், வடக்கில் நியூ யார்க் ஆகியன எல்லையாக அமைந்துள்ளன.

வரலாறு

தொகு

தற்பொழுது "நியூ செர்சி" என அழைக்கப் படும் இடத்தில் அமெரிக்கப் பழங்குடி மக்கள் - குறிப்பாக டெலவேர் இன மக்கள் 2800 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்தனர். பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அதன் ஆதிக்கம் ஆலந்து மற்றும் ஸ்வீடன் நாட்டினர் கைகளுக்கு மாறியது. ஆனால் வெகு விரைவிலேயே ஜேம்ஸ் டவுன் மற்றும் வர்சீனியாவில் வெற்றி வாகை சூடிய ஆங்கிலேயர் இந்த இடத்தையும் டச்சு நாட்டினரிடம் இருந்து கைப்பற்றினர்; ஆங்கிலக் கால்வாய்த் தீவுகளில் பெரிய தீவின் நினைவாக "நியூ செர்சி பிராந்தியம்" என்று பெயரும் இட்டனர். சர் ஜார்ஜ் கார்டரெட் மற்றும் ஜான் பெர்க்லி (அச்சமயத்தில் அவர் ஸ்ட்ராட்டனின் முதல் சீமான் பெர்க்லி என அழைக்கப்பட்டார்). இருவருக்கும் இணைந்த குடியேற்ற நாடாகப் பரிசாக வழங்கப்பட்டது. அப்பொழுது மட்டும் இல்லாமல், அமெரிக்க சுதந்திரப் போரிலும், பல யுத்தங்களுக்குக் களமாக நியூ செர்சி திகழ்ந்தது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் வேறொரு விதமான புரட்சி நியூ செர்சியில் பரவியது; ட்ரென்டன், எலிசபெத்து, பாட்டர்சன் உள்ளிட்ட நகரங்களில் தொழிற்சாலைகள் அமைந்ததும், தொழிற்புரட்சி விரைவாக பரவியதும் வளர்ந்து வந்து கொண்டிருந்த நியூ செர்சியின் பொருளாதாரத்திற்கு ஊக்கமூட்டி வளர்த்தன.

மேற்கோள்கள்

தொகு
  1. The Garden State and Other New Jersey State Nicknames பரணிடப்பட்டது 2007-12-22 at the வந்தவழி இயந்திரம், Robert Lupp, New Jersey Reference Services, New Jersey State Library, October 12, 1994
  2. 2.0 2.1 "Elevations and Distances in the United States". U.S Geological Survey. ஏப்ரல் 29 2005. Archived from the original on 2008-10-06. பார்க்கப்பட்ட நாள் 2008-04-16. {{cite web}}: Check date values in: |year= (help); Unknown parameter |accessmonthday= ignored (help); Unknown parameter |accessyear= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நியூ_செர்சி&oldid=3560722" இலிருந்து மீள்விக்கப்பட்டது