வலைவாசல்:கிறித்தவம்/உங்களுக்குத்தெரியுமா/ஞாயிறு
- ...முதல் மூன்று நற்செய்தி நூல்களான மத்தேயு, மாற்கு, லூக்கா என்பன தமக்குள் மிகப் பெரும் அளவில் ஒத்திருப்பதால் அவை ஒத்தமை நற்செய்தி நூல்கள் என்று அழைக்கப்படுகின்றன
- ...கத்தோலிக்க திருச்சபையின் வரையறையின்படி நற்கருணை (படம்) என்பது கோதுமை அப்பம், திராட்சை இரசம் ஆகியவற்றின் குணங்களில் இயேசுவின் திருஉடலும், திருஇரத்தமும், ஆன்மாவும், கடவுள் தன்மையும் அடங்கியிருக்கும் அருட்சாதனம் ஆகும்.
- ...கிழக்கு மரபுவழி திருச்சபை உலகில் இரண்டாவது பெரிய கிறிஸ்தவ சபையாகும்.
- ...தேம்பாவணி, இயேசு பிரான் மீது தமிழில் இயற்றப்பட்ட முதற் பெரும் செய்யுள் வகை நூலாகும். இதன் பாட்டுடைத் தலைவர் இயேசுவின் வளர்ப்புத் தந்தையான யோசேப்பு ஆவார்