வலைவாசல்:கிறித்தவம்/உங்களுக்குத்தெரியுமா
உங்களுக்குத் தெரியுமா.. பெட்டகம்
தொகுஇங்கு உங்கள் பரிந்துரைகளைத் தரலாம்.
- ...திருத்தந்தை 13ஆம் கிறகோரி அறிமுகம் செய்த நாட்காட்டி அவரது பெயராலேயே கிரெகொரியின் நாட்காட்டி என அழைக்கப்படுகின்றது
- ...இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவரான புனித அந்திரேயா 'X' வடிவ சிலுவையில் (படம்) அறையப்பட்டு கொல்லப்பட்டார்.
- ...விவிலிய இறை ஏவுதல் என்பது கிறித்தவர்களின் திருநூலாகிய விவிலியம் கடவுளிடமிருந்து வந்தது என்றும், அதை விவிலிய பாடத்திலிருந்தும், கிறித்தவ மரபிலிருந்தும், திருச்சபைப் போதனையிலிருந்தும் நிரூபிக்க இயலும் என்றும் கூறுகின்ற இறையியல் கொள்கை ஆகும்.
- ...உலகிலேயே மிகப்பெரிய கிறித்தவ தேவாலயம் புனித பேதுரு பேராலயம் ஆகும்
- ...இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவரான புனித புனித தோமாவின் உடல், சென்னை சாந்தோம் தேவாலயத்தில் உள்ளது.
- ...புரட்டஸ்தாந்தத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் மார்ட்டின் லூதர் (படம்). இவரது கருத்துக்கள் புரட்டஸ்தாந்த சீர்திருத்தத்தில் செல்வாக்குச் செலுத்தி மேல்நாட்டு நாகரிகத்தின் போக்கையே மாற்றியது.
- ...உலகின் 238 நாடுகளில் மொத்தம் 33 000 சீர்திருத்தத் திருச்சபைகள் உள்ளன
- ...இயேசு தம் 30-ஆவது வயது வரை தச்சு தொழில் செய்து வந்தார்
- ...பாரம்பரியமாக திருத்தந்தையரின் ஆட்சி முத்திரைகளில் தங்கம் மற்றும் வெள்ளியாலான இரு சாவிகள் (படம்) இருக்கும். இவை விண்ணுலகிலும் (தங்கம்) மற்றும் மண்ணுலகிலும் (வெள்ளி) அனுமதிக்கவும், தடைசெய்யவும் திருத்தந்தைக்கு உள்ள அதிகாரத்தைக் குறிக்கும்.
- ...இயேசு சபையைச் சேர்ந்த குருவான வீரமாமுனிவர், கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில் 1710 ஆம் ஆண்டு தமிழகத்துக்கு வந்தார். இவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு சிறப்பான பணிகளைச் செய்துள்ளார். இவர் இயற்றிய "தேம்பாவணி" என்ற பெருங்காவியம் இவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்றாகும்.
- ...மாண்டரின் மொழியில் கிறித்து என்னும் சொல்லினை ஜித்து (基督) என மொழிபெயர்க்கின்றனர்.
- ...இயேசு ஏற்படுத்திய பன்னிரு திருத்தூதர்கள் குழுவுக்குத் தலைவர் என்று கத்தோலிக்கரால் ஏற்றுக்கொள்ளப்படும் புனித பேதுரு (படம்) தலைகீழாக சிலுவையில் அறையப்பட்டார்.
- ...74% கத்தோலிக்கரும், 15.4% சீர்திருத்தத் திருச்சபையினரையும் கொண்ட பிரேசில் நாடே உலகில் அதிக கிறித்தவர்களைக் கொண்ட நாடாகும்.
- ...ரனாக் என்பது யூதர்களுக்கும் கிறித்தவர்களுக்கும் புனித நூலாகிய விவிலியத்தின் பழைய ஏற்பாடு என்னும் தொகுப்பைக் குறிக்கும் சுருக்கப் பெயர் ஆகும்.
- ...விவிலிய சிலுவைப் பாதை என்பது இயேசு துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில் உயிர்துறந்த நிகழ்வை, முற்றிலுமாக விவிலியத் தகவல்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தியானித்து இறைவேண்டல் செய்யும் கிறித்தவ பக்தி முயற்சி ஆகும்
- ...இந்திய கத்தோலிக்க திருச்சபை இந்திய நாட்டுக்கே உரிய சிறப்புக் கொண்டாட்டங்களை உள்ளடக்கிய நாள்காட்டியை பயன்படுத்துகின்றது
- ...எஸ்தாக்கியார் நாடகம் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ்க் கத்தோலிக்க மக்களிடையே மிகப் பெரும் வரவேற்பைப் பெற்ற புனித எஸ்தாக்கியாரின் (படம்) வரலாற்றை எடுத்துக் கூறுகின்ற நாடகம் ஆகும்.
- ...திருத்தந்தையின் மறைவாலோ, அல்லது பணித்துறப்பாலோ ஆட்சிபீடம் காலியாகும் போது புதியதொரு திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு கர்தினால்களின் மிக முக்கிய பணி ஆகும்.
- ...திருத்தப்பட்ட கத்தோலிக்கமாக தன்னை என்னும் இங்கிலாந்து திருச்சபையின் தலைவர் ஐக்கிய இராச்சித்தின் அரசியான இரண்டாம் எலிசபெத் ஆவார்
- ... கிறித்தவர்களது புனித நூலான விவிலியம் பல தனித்தனி நூல்களை உள்ளடக்கிய ஒரு நூல்தொகுப்பாகும்
- ...ரோமன் கத்தோலிக்க அருட்சகோதரியான அன்னை தெரேசா (படம்) பாரத ரத்னா விருது மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் ஆவார்
- ...யோவான் 3:16 என்பது விவிலியத்தில் மிகவும் அதிகமாகக் கையாளப்படும், மிகவும் புகழ்பெற்ற வசனமாகும். இது கிறித்தவத்தின் கருப்பொருளைச் சுருக்கமாக எடுத்தியம்புவதால் நற்செய்தியின் சுருக்கம் என அழைக்கப்படுகின்றது.
- ...முதல் மூன்று நற்செய்தி நூல்களான மத்தேயு, மாற்கு, லூக்கா என்பன தமக்குள் மிகப் பெரும் அளவில் ஒத்திருப்பதால் அவை ஒத்தமை நற்செய்தி நூல்கள் என்று அழைக்கப்படுகின்றன
- ...கத்தோலிக்க திருச்சபையின் வரையறையின்படி நற்கருணை (படம்) என்பது கோதுமை அப்பம், திராட்சை இரசம் ஆகியவற்றின் குணங்களில் இயேசுவின் திருஉடலும், திருஇரத்தமும், ஆன்மாவும், கடவுள் தன்மையும் அடங்கியிருக்கும் அருட்சாதனம் ஆகும்.
- ...கிழக்கு மரபுவழி திருச்சபை உலகில் இரண்டாவது பெரிய கிறிஸ்தவ சபையாகும்.
- ...தேம்பாவணி, இயேசு பிரான் மீது தமிழில் இயற்றப்பட்ட முதற் பெரும் செய்யுள் வகை நூலாகும். இதன் பாட்டுடைத் தலைவர் இயேசுவின் வளர்ப்புத் தந்தையான யோசேப்பு ஆவார்