வலைவாசல்:சமணம்/சமண அறிஞர்/7
நேமிசந்திரர் சமணத்தின் திகம்பர சமயப் பிரிவின் அறிஞராவார். இவர் திரவியசங்கிரகம், கோமத்சாரம், சீவகாண்டம், கர்மகாண்டம், திரிலோகசாரம், லப்திசாரம் மற்றும் கச்சபனசாரம் போன்ற சமணத் தத்துவ நூல்களை இயற்றியுள்ளார். திகம்பர சமண ஆச்சாரியர் நேமிசந்திரர் கிபி 10-ஆம் நூற்றாண்டில் புகழுடன் விளங்கியவர். பொதுவாக இவரைச் சித்தாந்தச் சக்கரவர்த்தி என்றே அழைப்பர்.
இவர் சவுந்தரய்யாவின் ஆன்மீக குருவாக விளங்கியதோடு இவர்களின் தொடர்புகள் பற்றி, கர்நாடகாவின் சிமோகோ மாவட்டத்த்தின், நகர் தாலுக்காவில் உள்ள பத்மாவதி கோயில் கல்வெட்டுக் குறிப்புகள் மூலம் அறியக்கூடியதாயுள்ளது.