வலைவாசல்:சமணம்/சமண அறிஞர்கள்
இப்பகுதியிலுள்ளவை விக்கிப்பீடியாவின் சமண வலைவாசலின் ஒரு பிரிவான சமண அறிஞர் என்ற பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டவை.
தாங்களும் சமண வலைவாசலில் காட்சிப்படுத்துவதற்கான சமண அறிஞர்களைப் பற்றிய பக்கங்களைப் பரிந்துரைக்கலாம். (காப்பகமானது காட்சிப்படுத்தப்பட்டதன் அடிப்படையில் அடுக்கப்பட்டுள்ளது.)
- வடிவமைப்பு
{{வலைவாசல்:சமணம்/சமண அறிஞர்/வடிவமைப்பு |படிமம் = |படிம தலைப்பு = |உரை = |இணைப்பு = |முகப்பு = வலைவாசல்:சமணம்/சமண அறிஞர்கள் }}
காப்பகம்
தொகு1 கட்டுரை
தொகுஆச்சாரியர் குந்தகுந்தர், சமணத்தின் பிரிவான திகம்பரத் துறவியும், ஆச்சாரியரும் மற்றும் மெய்யியல் அறிஞரும் ஆவார். இவர் சமயச்சாரம், நியாயசாரம், பஞ்சசுதிதிகாயசாரம், பிரவசனசாரம் போன்ற சமண சமயத் தத்துவ நூல்களை இயற்றியவர். இவர் ஆந்திரப்பிரதேசத்தின் கொண்டகுந்தா கிராமத்தில் பிறந்தவராக கருதப்படுகிறார்.
2 கட்டுரை
தொகுஆச்சாரிய வீரசேனர் 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்திய கணித மேதை. இவர் சமண மெய்யியல் அறிஞர் மற்றும் ஆச்சார்யருக்குத் தகுந்த வரிசையைச் சேர்ந்த ஒரு திகம்பர சாதுவும் ஆவார். இவர் ஒரு சிறந்த சொற்பொழிவாளர் மற்றும் கவிஞரும் ஆவார். வீரசேனர், தென்னகத்தில் சைன இலக்கிய மறுமலர்ச்சிக்கு காரணமாக இருந்தவர்களுள் தலையாயவரான குந்தகுந்தர் ஆச்சாரிய பரம்பரையைச் சேர்ந்தவர். இவரது மாணவர் ஜினசேனர் ஆவார்.
3 கட்டுரை
தொகுஜினசேனர் (Jinasena) கிபி 9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திகம்பர சமணத் துறவியும், வட மொழி அறிஞரும் ஆவார். இவர் ஆதிபுராணம், மகாபுராணம் மற்றும் அரிவம்ச புராணம் ஆகிய மூன்று சமணப் புராணங்களை சமஸ்கிருத மொழியில் இயற்றியவர் ஆவார்.
திகம்பர சமணப் பிரிவின் அறுகோணம் (Shatkhandagama) எனும் முக்கியத் தத்துவ நூலுக்கு விளக்க உரை எழுதிய வீரசேனரின் மாணவர் சினசேனர் ஆவார். மேலும் சினசேனர் அரிவம்ச புராணத்தையும் இயற்றியுள்ளார். மேலும் எளிய மக்களுக்கான தர்மசாஸ்திரம் எனும் நீதி நூலை இயற்றியுள்ளார். இராஷ்டிரகூடர் மன்னர் அமோகவர்சன் இவரது சீடர் ஆவர்.
4 கட்டுரை
தொகுஆச்சாரிய பத்திரபாகு (பொ.ஊ.மு. அண். 367 - அண். 298) என்பவர் சமணத்தின் திகம்பரப் பிரிவின் படி, சமணத்தின் இறுதி சுருதகேவலின் (கேள்வி வழியில், அதாவது மறைமுகமாக எல்லாம் அறிந்தவர்) ஆவார். ஆயினும், சுவேதாம்பரப் பிரிவினர், இறுதிச் சுருதகேவலின் ஆச்சாரிய தூலபத்திரர் எனவும் பத்திரபாகு இதனை வெளிப்படுத்துவதைத் தடுத்துவிட்டார் எனவும் கருதுகின்றனர். பிளவுபடாத சைன சங்கத்தின் இறுதி ஆச்சாரியர் ஆவார். இவர் மௌரியப் பேரரசை நிறுவிய சந்திரகுப்த மௌரியனின் அகநிலைசார் ஆசிரியராக விளங்கினார்.
பத்திரபாகு புண்டராவர்த்தனத்தில் பிறந்தார். (இப்பகுதி இன்றைய மேற்கு வங்காளத்தின் வட பகுதி மற்றும் வங்காளத்தேசத்தின் வடமேற்குப் பகுதிகளை உள்ளடக்கிய வடக்கு வங்காளப் பகுதியில் அமைந்துள்ளது.) இக்காலப்பகுதியில், மௌரியர்களின் இரண்டாம் தலைநகராக உச்சைனி விளங்கியது. இவருக்கு ஏழு அகவையாக இருக்கும்போது, கோவர்த்தன மகாமுனி இவரே இறுதி சுருத கேவலியாக இருப்பார் எனக் கண்டு, இவரது துவக்கக் கல்வியை வழங்கும் பொருட்டு இவரைத் தம்முடன் அழைத்துச் சென்றார். சுவேதாம்பரப் பிரிவின் படி, இவர் பொ.ஊ.மு. 433 இலிருந்து பொ.ஊ.மு. 357 வரை வாழ்ந்துள்ளார். திகம்பரப் பிரிவினர், இவர் பொ.ஊ.மு. 365ல் இறந்தாக முடிவு செய்துள்ளது. நட்டுபாய் சா என்பவர், இவர் பொ.ஊ.மு. 322 இலிருந்து 243 வரை வாழ்ந்ததாக முடிவு செய்துள்ளார்.
மகாவீரரால் மீள ஒழுங்கமைக்கப்பட்ட சமயப் பிரிவின் தலைவரான யசோபத்திரருக்கு (பொ.ஊ.மு. 351-235) இரு முதன்மைச் சீடர்கள் இருந்தனர். ஒருவர் சம்பூதவிசயரும் (பொ.ஊ.மு. 347-257) மற்றையவர் பத்திரபாகுவும் ஆவார். யசோபத்திரரின் மறைவுக்குப் பின், இச் சமயப்பிரிவு இவ்விரு சீடர்களின் தலைமையின் கீழ் இரண்டாகப் பிளவுற்றது.
5 கட்டுரை
தொகுதூலபத்திரர் (பொ.ஊ.மு. 297-198) என்பவர் சமணத்தின் சுவேதாம்பரப் பிரிவை நிறுவியவராவார். பொ.ஊ.மு. நான்காம் அல்லது மூன்றாம் நூற்றாண்டில் மௌரியப் பேரரசில் நிலவிய 12-ஆண்டு நீண்ட பஞ்சத்தின் போது இப்பிரிவு நிறுவப்பட்டது. இவர் பத்திரபாகு மற்றும் சம்பூதவிசயர் ஆகியோரின் சீடராவார். இவரது தந்தையான சகடால என்பவர், சந்திர குப்த மௌரியரின் வருகைக்கு முன்னரான நந்தப் பேரரசில் அமைச்சராக இருந்தார். இவரது சகோதரர் அரசின் முதன்மை அமைச்சராக ஆகிய வேளையில், தூலபத்திரர் சமணத் துறவியானார். ஏமச்சந்திரரால் 12-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சமண நூலில் இவரைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
தூலபத்திரர், தன நந்தனின் அமைச்சரான சகடாலவின் மகனும், சிறீகயனின் உடன்பிறப்புமாவார். மரபு முறைப்படி இவரது காலம் பொ.ஊ.மு. 297 இலிருந்து 198 வரையாகும். தன நந்தனின் அரசவை நாட்டியக்காரியான ரூபகோசாவைக் காதலித்து அவளோடு வாழ்ந்து வந்தார். தனது தந்தையின் இறப்புக்குப் பின் அமைச்சுப் பொறுப்பை மறுதலித்து சமணத் துறவியானார். இவரது சகோதரர், பிற்காலத்தில் நந்தப் பேரரசின் முதன்மை அமைச்சரானார். இவர் சம்பூதவிசயர் (பொ.ஊ.மு. 347-257) மற்றும் பத்திரபாகு (பொ.ஊ.மு. 322-243) ஆகியோரின் சீடரானார். இவர் 12 ஆண்டுகள் துறவு வாழ்க்கை வாழ்ந்தார். இவர் தனது சாதுர்மாச காலப்பகுதியை ரூபகோசாவின் வீட்டில் கழித்தார். இக்காலப்பகுதியில் ரூபகோசா இவரைத் தமது துறவு வாழ்வினின்றும் வழுவச்செய்து தன்வசப்படுத்த முயன்று தோற்றுப்போனாள். அதற்கு மாறாக, தூலபத்திரர் அவளை சிராவிகையாக (சமண இல்லறப் பெண்) உறுதிமொழி ஏற்கச்செய்தார்.
6 கட்டுரை
தொகுசமந்தபத்திரர் என்பவர் பொ.ஊ. 2ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த திகம்பர ஆச்சாரியர் (துறவிக் குழுத் தலைவர்)ஆவார். இவர் சமணக் கொள்கையான அநேகாந்தவாதத்தின் முன்னோடியாவார். ரத்னகரந்த சிராவகாசாரம் என்பது சமந்தபத்திரரின் புகழ்பெற்ற நூலாகும். சமந்தபத்திரர், உமாசுவாமிக்குப் பின்னரும், பூச்சியபாதருக்கு முன்பும் வாழ்ந்துள்ளார்.
சமந்தபத்திரர் பொ.ஊ. 150இலிருந்து 250 வரை வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இவர், தென்னிந்தியாவில் சோழர் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்துள்ளார். இவர் ஒரு கவிஞரும், அளவையியலாளரும் (logician), புகழ்பாடுனரும் (eulogist), தேர்ந்த மொழியியலாளரும் ஆவார். இவரே தென்னிந்தியாவில் சமண மதத்தைப் பரப்பியவராகக் குறிப்பிடப்படுகிறார்.
சமந்தபத்திரர், தனது துறவு வாழ்வின் முற்பகுதியில் பசுமக (அடங்காப்பசி) என அறியப்பட்ட நோயினால் தாக்கப்பட்டார். திகம்பரத் துறவிகள் ஒருநாளைக்கு ஒருவேளைக்கு மேல் சாப்பிடக் கூடாது என்பதால், இவர் மிகுந்த வேதனைக்குள்ளானார். இறுதியில், தமது ஆசிரியரிடத்தில், சல்லேகனை எனும் உண்ணாநோன்பிருந்து உயிர்விடும் வழக்கத்தை மேற்கொள்ள அனுமதி கேட்டார். எனினும், அதற்கு அனுமதி மறுத்த இவரது ஆசிரியர், துறவு வாழ்விலிருந்து விலகி, அந்நோயைக் குணப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். அந்நோயைக் குணப்படுத்திக்கொண்டபின், மீண்டும் துறவியான சமந்தபத்திரர் பெரும் சமண ஆச்சாரியராக உருவெடுத்தார்.
7 கட்டுரை
தொகுநேமிசந்திரர் சமணத்தின் திகம்பர சமயப் பிரிவின் அறிஞராவார். இவர் திரவியசங்கிரகம், கோமத்சாரம், சீவகாண்டம், கர்மகாண்டம், திரிலோகசாரம், லப்திசாரம் மற்றும் கச்சபனசாரம் போன்ற சமணத் தத்துவ நூல்களை இயற்றியுள்ளார். திகம்பர சமண ஆச்சாரியர் நேமிசந்திரர் கிபி 10-ஆம் நூற்றாண்டில் புகழுடன் விளங்கியவர். பொதுவாக இவரைச் சித்தாந்தச் சக்கரவர்த்தி என்றே அழைப்பர்.
இவர் சவுந்தரய்யாவின் ஆன்மீக குருவாக விளங்கியதோடு இவர்களின் தொடர்புகள் பற்றி, கர்நாடகாவின் சிமோகோ மாவட்டத்த்தின், நகர் தாலுக்காவில் உள்ள பத்மாவதி கோயில் கல்வெட்டுக் குறிப்புகள் மூலம் அறியக்கூடியதாயுள்ளது.
8 கட்டுரை
தொகுவலைவாசல்:சமணம்/சமண அறிஞர்/8 வலைவாசல்:சமணம்/சமண அறிஞர்/8
9 கட்டுரை
தொகுவலைவாசல்:சமணம்/சமண அறிஞர்/9 வலைவாசல்:சமணம்/சமண அறிஞர்/9
10 கட்டுரை
தொகுவலைவாசல்:சமணம்/சமண அறிஞர்/10 வலைவாசல்:சமணம்/சமண அறிஞர்/10
11 கட்டுரை
தொகுவலைவாசல்:சமணம்/சமண அறிஞர்/11 வலைவாசல்:சமணம்/சமண அறிஞர்/11
12 கட்டுரை
தொகுவலைவாசல்:சமணம்/சமண அறிஞர்/12 வலைவாசல்:சமணம்/சமண அறிஞர்/12
13 கட்டுரை
தொகுவலைவாசல்:சமணம்/சமண அறிஞர்/13 வலைவாசல்:சமணம்/சமண அறிஞர்/13
14 கட்டுரை
தொகுவலைவாசல்:சமணம்/சமண அறிஞர்/14 வலைவாசல்:சமணம்/சமண அறிஞர்/14
15 கட்டுரை
தொகுவலைவாசல்:சமணம்/சமண அறிஞர்/15 வலைவாசல்:சமணம்/சமண அறிஞர்/15
16 கட்டுரை
தொகுவலைவாசல்:சமணம்/சமண அறிஞர்/16 வலைவாசல்:சமணம்/சமண அறிஞர்/16
17 கட்டுரை
தொகுவலைவாசல்:சமணம்/சமண அறிஞர்/17 வலைவாசல்:சமணம்/சமண அறிஞர்/17
18 கட்டுரை
தொகுவலைவாசல்:சமணம்/சமண அறிஞர்/18 வலைவாசல்:சமணம்/சமண அறிஞர்/18
19 கட்டுரை
தொகுவலைவாசல்:சமணம்/சமண அறிஞர்/19 வலைவாசல்:சமணம்/சமண அறிஞர்/19
20 கட்டுரை
தொகுவலைவாசல்:சமணம்/சமண அறிஞர்/20 வலைவாசல்:சமணம்/சமண அறிஞர்/20
21 கட்டுரை
தொகுவலைவாசல்:சமணம்/சமண அறிஞர்/21 வலைவாசல்:சமணம்/சமண அறிஞர்/21
22 கட்டுரை
தொகுவலைவாசல்:சமணம்/சமண அறிஞர்/22 வலைவாசல்:சமணம்/சமண அறிஞர்/22
23 கட்டுரை
தொகுவலைவாசல்:சமணம்/சமண அறிஞர்/23 வலைவாசல்:சமணம்/சமண அறிஞர்/23
24 கட்டுரை
தொகுவலைவாசல்:சமணம்/சமண அறிஞர்/24 வலைவாசல்:சமணம்/சமண அறிஞர்/24
25 கட்டுரை
தொகுவலைவாசல்:சமணம்/சமண அறிஞர்/25 வலைவாசல்:சமணம்/சமண அறிஞர்/25
26 கட்டுரை
தொகுவலைவாசல்:சமணம்/சமண அறிஞர்/26 வலைவாசல்:சமணம்/சமண அறிஞர்/26
27 கட்டுரை
தொகுவலைவாசல்:சமணம்/சமண அறிஞர்/27 வலைவாசல்:சமணம்/சமண அறிஞர்/27
28 கட்டுரை
தொகுவலைவாசல்:சமணம்/சமண அறிஞர்/28 வலைவாசல்:சமணம்/சமண அறிஞர்/28
29 கட்டுரை
தொகுவலைவாசல்:சமணம்/சமண அறிஞர்/29 வலைவாசல்:சமணம்/சமண அறிஞர்/29