வலைவாசல்:சைவம்/சைவ அடியார்/10

கண்டராதித்தர் இடைக்காலச் சோழ மன்னர்களில் முதலாம் பராந்தகனுக்குப் பின்னர் பட்டஞ் சூட்டிக்கொண்டவர். இவர் கி.பி 950 தொடக்கம் 955 வரையுமே சோழ நாட்டை ஆண்டார். சிவத்தொண்டில் காலம் கழித்தவர், சிவனடியாரான செம்பியன் மாதேவி என்பவரை மணந்து கொண்டார். மேலும் சிவன்மேல் கொண்ட பற்றினால் பன்னிரு திருமுறைகளில் இவருடைய பாடல்கள் இடம் பெற்றுள்ளன. கண்டன் கோவை, கண்டன் அலங்காரம் என்னும் நூல்களைப் பாடி ஒட்டக்கூத்தர் இவருக்குப் பெருமை சேர்த்துள்ளார்.