வலைவாசல்:தமிழர்/உங்களுக்குத் தெரியுமா/1
- குமார் மகாதேவா என்பவர் காக்னிசன்ட் தொழில்நுட்ப தீர்வகத்தை தொடங்கிய ஈழத்தமிழர் ஆவார்.
- இரண்டாம் சங்கிலி அல்லது ஒன்பதாம் செகராசசேகரன் (படம்) யாழ்ப்பாண அரசின் கடைசி அரசன்.
- வெள்ளணி விழா என்பது சங்ககாலம் தொட்டே வழங்கி வரும் தமிழ் மன்னர்களின் முடிசூட்டு விழாவாகும்.
- சங்ககாலத்து சிறுநில மன்னர்களான சீறூர் மன்னர்கள், பெருநில வேந்தர்கள் பெண் கேட்டு வந்தாலும் தன் குல முறைமை கருதி பெண் தருவதில்லை.