காக்னிசன்ட் தொழினுட்பத் தீர்வகம்

(காக்னிசன்ட் தொழில்நுட்ப தீர்வகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

காக்னிசன்ட் தொழினுட்பத் தீர்வகம் அல்லது காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் டீனெக், நியூ ஜெர்சியை தலைமையிடமாகக் கொண்ட ஒரு தகவல் தொழில்நுட்ப சேவை வழங்கும் நிறுவனமாகும். இந்நிறுவனம் சென்னையிலும் குறிப்பிடத்தக்க அளவில் செயற்பாடுகளை கொண்டுள்ளது

காக்னிசன்ட் தொழினுட்பத் தீர்வகம் Cognizant Technology Solutions
வகைபொது
நிறுவுகைகுமார் மகாதேவா, 1994
தலைமையகம் டீனெக், நியூ ஜெர்சி
முதன்மை நபர்கள் லக்ஷ்மி நாராயணன்,துணைத் தலைவர்

ஃபிரான்சிஸ்கோ டி'சூசா, முதன்மை செயல் அதிகாரி
சந்திர சேகரன், தலைவரும் மேலாண் இயக்குநரும்

கார்டன் கோபர்ன், செயல் துணைத்தலைவர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி
வருமானம்Increase 10.26 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (2014)[1]
இயக்க வருமானம்Increase 1.88 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (2014)[1]
நிகர வருமானம்Increase 1.43 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (2014)[1]
மொத்தச் சொத்துகள்Increase 11.71 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (2014)[1]
மொத்த பங்குத்தொகைIncrease 7.74 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (2014)[1]
பணியாளர்217,700 (March 31, 2015)[2]
இணையத்தளம்www.cognizant.com

சீன மொழி [1]

ஜப்பானிய மொழி [2]

காக்னிசன்ட் நிறுவனம் 2007 ஃபார்ச்சூன் இதழினால் தொடந்து ஐந்தாம் முறையாக வேகமாக வளரும் 100 நிறுவனங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது[3]. மேலும் காக்னிசன்ட் நிறுவனம் பிஸ்னர் வீக்கால் மிக வேகமாக வளரும் முதல் பத்து நிறுவனங்களின் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. காக்னிசன்ட் ஒட்டுமொத்த ஆலோசக நிறுவனங்களிலும் 2012க்கான தரப்பட்டியலில் 6ஆம் இடத்தை பிடித்திருந்தது.[4] 2011, செப்டம்பர் 31 அன்று 1,30,000 ஊழியர்களையும் 50 விநியோக மையங்களையும் கொண்டிருந்தது.[5]

வரலாறு

தொகு

இந்நிறுவனம் 1994ல் டன் & பிராட்ஸ்டிரீட் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தின் ஒரு அங்கமாக தொடங்கப்பட்டது. டன் & பிராட்ஸ்டிரீட் கார்ப்பரேஷன் முத்ல் தன் நிறுவனத்தின் 76% பங்கினையும், பின் மீதியுள்ள 24% பங்கினை சத்யம் நிறுவனத்திடம் இருந்து தன் இரண்டாம் வருடத்தில் பெற்றது.[6] குமார் மகாதேவா [7] என்ற அதன் தலைமை அதிகாரியின் கீழ் காக்னிசன்ட்,[8] டன் & பிராட்ஸ்டிரீட் கார்ப்பரேஷனிடம் இருந்து தனி நிறுவனமாக ஐக்கிய அமேரிக்காவில் செயல்பட தொடங்கியது. அதன்பின் குமார் மகாதேவா 2003ஆம் ஆண்டு தலைமை பொறுப்பை லட்சுமி நாராயணன் என்பவரிடம் ஒப்படைத்துவிட்டு ஓய்வு பெற்றார்.[9]

சேவைகள்

தொகு

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தை தலைமையகமாக கொண்டுள்ள போதும் பெரும்பாண்மையான காக்னிசன்ட் நிறுவன ஊழியர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் ஆவர். இந்தியாவில் சென்னை, பெங்களூர், கோயம்புத்தூர், ஹைதரபாத், கொல்கத்தா, மும்பை, புனே மற்றும் கொச்சியில் அலுவலகங்களை கொண்டுள்ளது. மேலும் சீனாவின் ஷாங்காய் நகரிலும் ஆம்ஸ்டர்டாமிலும் வளர்மையங்களை கொண்டுள்ளது.

காக்னிசன்ட் கீழ்க்கண்ட சேவைகளை வழங்குகிறது

நிதி நிலைமை

தொகு

காக்னிசன்ட் நிறுவனத்தின் வருவாய் 2006ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் முந்தைய ஆண்டை விட 65 சதவீதம் ஏற்றம் கண்டது. இந்நிறுவனம் 2006ஆம் ஆண்டை $1.424 பில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்டியது. காக்னிசன்ட் கடனில்லா இருப்புநிலை ஏட்டை கொண்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக அதன் வருவாய் வருடாந்திரமாக 40 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது[10].

போட்டியாளர்கள்

தொகு

இன்ஃபோசிஸ், சத்யம். சீமென்ஸ், விப்ரோ, அரிசன்ட் முதலிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் காக்னிசன்ட் நிறுவனத்திற்கு போட்டியாளர்களாக கருதப்படுகின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Cognizant Annual Report" (PDF). Cognizant. Archived from the original (PDF) on 2015-09-23. பார்க்கப்பட்ட நாள் 2015-10-01.
  2. "Company Overview". Cognizant. Archived from the original on 9 பிப்ரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 13 March 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Cognizant Signs A Five-Year, Multi-Million Dollar Agreement With Kimberly-Clark". Archived from the original on 2008-05-23. பார்க்கப்பட்ட நாள் 2008-06-20.
  4. http://www.vault.com/wps/portal/usa/rankings/individual?rankingId1=255&rankingId2=255&rankings=1&rankingYear=
  5. http://investors.cognizant.com/index.php?s=43&item=192&utm_source=Twitter&utm_medium=Twitter&utm_campaign=SM2011[தொடர்பிழந்த இணைப்பு]
  6. http://www.business-standard.com/india/news/cognizant-back-in-searchsatyam/353949/
  7. http://www.alumni.hbs.edu/bulletin/2003/september/mahadeva.html
  8. http://www.rediff.com/money/2003/dec/22cognizant.htm
  9. "Cognizant founder steps down". The Hindu Business Line. பார்க்கப்பட்ட நாள் 2010-09-27.
  10. The 'Four Horsemen' of Indian Stocks: Financial News - Yahoo! Finance

வெளி இணைப்புகள்

தொகு