வலைவாசல்:தமிழிலக்கியம்/சிறப்புக் கட்டுரை/22
தமிழ்க் கலைக்களஞ்சியங்கள் எனப்படுபவை தமிழ் மொழியில் அமைந்த கலைக்களஞ்சியங்கள் ஆகும். 20 ம் நூற்றாண்டில்யே தமிழில் கலைக்களஞ்சியங்கள் தோன்றின. பல்துறைத் தகவல்களைத் தொகுக்கும் பொதுக் கலைக்களஞ்சியங்களும், துறைசார் கலைக்களஞ்சியங்களும் தமிழில் உண்டு. தற்போது இணையத்திலும் தமிழ்க் கலைக்களஞ்சியங்கள் உள்ளன.
தமிழ் மொழி நீண்ட எழுதப்பட்ட இலக்கண, இலக்கிய மரபைக் கொண்டது. தொல்காப்பியம், திருக்குறள், திருமந்திரம் போன்ற தமிழ் ஆக்கங்கள் பல வகைச் செய்திகளைக் கூறுகின்றன. ஆனால் அவற்றின் முதன்மை உள்ளடக்கமாக ஒரு குறிப்பிட்ட துறையே (இலக்கணம், அறம், சைவ சித்தாந்தம்) உள்ளது. தமிழ்ச் சமூகம் நுட்ப வளர்ச்சியில் முதன்மைப் பெற்று இருந்த காலங்கள் உள்ளன. ஆனால் அந்த நுட்பங்கள் தமிழில் எழுதிப் பகிரப்படவில்லை. தமிழ் மொழி மரபில் இது ஒரு பெரும் குறைபாடு ஆகும். இதனால் பல வகைச் செய்திகளை, குறிப்பாக அறிவியல், தொழில்நுட்பம், சமூகம் தொடர்பான தகவல்களைத் தொகுத்து தரும் கலைக்களஞ்சியங்கள் தமிழ் மொழியில் 20 ம் நூற்றாண்டு வரை தோன்றவில்லை.