வலைவாசல்:துடுப்பாட்டம்/தகவல்கள்/9
மன்கட் என்பது துடுப்பாட்டத்தில் காத்திருக்கும் மட்டையாளரை ஓட்ட இழப்பு (run out) மூலம் வெளியேற்றும் முறை ஆகும். இதை முதன்முதலில் பயன்படுத்திய இந்தியப் பந்துவீச்சாளர் வினோ மன்கட் என்பவரின் பெயரால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. துடுப்பாட்ட விதிகளின்படி ஒரு பந்துவீச்சாளர் பந்தை வீசும் முன்பு காத்திருக்கும் மட்டையாளர் தனது வரைகோட்டை விட்டு நகர்ந்தால் அவரை ஓட்ட இழப்பு மூலம் வெளியேற்றலாம். அந்தப் பந்துவீச்சு நிறைவுகளில் ஒன்றாகக் கணக்கிடப்படாது.