வலைவாசல்:புவியியல்/சிறப்புக் கட்டுரை/19
ஆப்கானித்தான் அல்லது ஆப்கனிசுத்தான் என்னும் நாட்டின் முழுப்பெயர் ஆப்கானித்தான் இசுலாமியக் குடியரசு ஆகும். இந்நாடு நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்ட நடு ஆசிய நாடாகும். இது சில நேரங்களில் மத்திய கிழக்கு நாடாகவும், தெற்காசியாவின் நாடாகவும் நோக்கப்படுவதுண்டு. மேற்கே, ஈரானை எல்லையாகக் கொண்டுள்ளது. தெற்கிலும் கிழக்கிலும் பாக்கிஸ்தானை எல்லையாக உடையது. வடக்கே துருக்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தாஜிக்ஸ்தான் என்ற நாடுகள் எல்லையாக அமைந்துள்ளன. கிழக்கில் சீனாவை எல்லையாகக் கொண்டுள்ளது. பாகித்தானுடனான இதன் எல்லையின் ஒரு பகுதி இந்தியாவால் உரிமை கோரப்படும் காசுமீரூடாகச் செல்கிறது. இந்தியாவை வர்த்தகம் ஆக்கிரமிப்பு போன்ற காரணங்களுக்காக மத்திய ஆசியாவுடன் இணைக்கும் பெருவழிப்பாதைகள் ஆப்கானித்தான் வழியேதான் செல்கின்றன. 1747 முதல் 1973 வரை ஆப்கானித்தான் ஒரு முடியாட்சி நாடாகவே இருந்தது; ஆயினும், சில படைத்துறை அதிகாரிகள் இந்நாட்டைக் கைப்பற்றிக் குடியரசாக அறிவித்தனர்.