வலைவாசல்:புவியியல்


Pangea animation 03.gif

புவியியல் என்பது புவி, அங்குள்ள நிலம், பல்வேறு அம்சங்கள், அதிலுள்ள உயிர் வகைகள் மற்றும் தோற்றப்பாடுகள் என்பவற்றை விளக்கும் ஒரு துறையாகும். இச்சொல்லை நேரடியாக மொழி பெயர்க்கும்போது அது புவியைப்பற்றி விளக்குவது அல்லது எழுதுவது என்பதைக் குறிக்கும். புவியியல் ஆய்வில் வரலாற்று ரீதியாக நான்கு மரபுகள் காணப்படுகின்றன.

1) இயற்கை மற்றும் மனிதத் தோற்றப்பாடுகள் தொடர்பிலான இடம்சார் பகுப்பாய்வு, இது பரம்பல் அடிப்படையிலான புவியியல் ஆய்வு.

2) நிலப்பரப்பு ஆய்வு, இது இடங்களும், நிலப்பகுதிகளும் தொடர்பானது.

3) மனிதனுக்கும், நிலத்துக்குமான தொடர்பு பற்றிய ஆய்வு.

4) புவி அறிவியல்கள் தொடர்பான ஆய்வு.

ஆனால், தற்காலப் புவியியல், எல்லாவற்றையும் ஒருங்கே தழுவிய ஒரு துறை. இது புவியையும் அதிலுள்ள எல்லா மனித மற்றும் இயற்கைச் சிக்கல்களையும் புரிந்துகொள்ள முயல்கிறது. எங்கெங்கே பொருள்கள் இருக்கின்றன என்பதை மட்டுமன்றி, அவை எவ்வாறு மாறுகின்றன, எப்படித் தற்போதைய நிலையை அடைந்தன என்பவற்றை அறிவது தற்காலப் புவியியலின் நோக்கமாகும். மனிதனுக்கும், இயற்பு அறிவியலுக்கும் இடையே உள்ள தொடர்பாக அமைவதால், புவியியல் துறையானது, மானிடப் புவியியல், இயற்கைப் புவியியல் என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

தொகு  

சிறப்புக் கட்டுரை

Aerial view of Nauru.jpg
நவூரு தெற்கு பசிபிக்கில் அமைந்துள்ள மைக்குரோனேசியத் தீவு நாடும், உலகின் மிகச்சிறிய குடியரசு நாடும் ஆகும். இதன் மொத்தப் பரப்பளவு 21 கிமீ². இந்நாட்டிற்கு அதிகாரபூர்வத் தலைநகர் எதுவும் இல்லை. இதன் நாடாளுமன்றம் யாரென் நகரில் உள்ளது. வத்திக்கானுக்கு அடுத்ததாக இரண்டாவது மிகக்குறைந்த மக்கள்தொகை கொண்ட நாடாகும். நவூரு மக்கள் ஐஜிபொங் என்ற பெண் தெய்வத்தை வழிபடும் பொலினேசிய மற்றும் மைக்குரோனேசிய கடற்பயணிகளின் வம்சாவழியினராவர். மரபுவழியாக நவூருவில் வாழ்ந்த 12 இனக்குழுக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த அந்நாட்டின் கொடியில் 12 நட்சத்திரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. நவுறுவில் நிலவுடைமை முறை சற்று வேறுபாடானது. தீவின் நிலங்கள் அனைத்தும் தனியார்களோ அல்லது குடும்பங்களோ சொந்தமாக வைத்துள்ளன. அரசாங்கமோ அல்லது அல்லது அரசுத் திணைக்களங்களோ எந்த நிலத்தையும் சொந்தமாக வைத்திருக்க முடியாது. நிலம் ஒன்றைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் அந்த நிலத்தின் சொந்தக்காரருடன் குத்தகை உடன்பாட்டில் மட்டுமே குறிப்பிட்ட நிலத்தைப் பெற்றுக் கொள்ளலாம். ஆத்திரேலியாவில் தஞ்சமடையும் அகதிகளுக்கான தடுப்பு முகாம் நிறுவப்பட்டதை அடுத்து, அதன் மூலம் ஆத்திரேலிய அரசின் பெருமளவு நிதியுதவி பெறப்படுகிறது.


தொகு  

சிறப்புப் படம்

பொத்துவில் மண்மலை
படிம உதவி: தாரிக் அஸீஸ்

இலங்கையின் கிழக்கே பொத்துவில் நகரின் அழகுக்கு அழகு சேர்ப்பதாய் இயற்கையாய் அமைந்துள்ள மண்ணாலான மலை போன்ற அமைப்பு பொத்துவில் மண்மலை ஆகும். இது பொத்துவிலின் கிழக்கே அமைந்துள்ள கடற்கரையை அண்டிய பகுதியில் அமைந்துள்ளது. இந்தியப் பெருங்கடல் ஆழிப் பேரலையின் போது, இந்த மண்மலை ஒரு தடைச்சுவராக செயற்பட்டு அப்பிரதேசத்தில் சூழ வாழ்ந்த மக்களை பாதுகாத்தது.

தொகு  

செய்திகளில் புவியியல்

Wikinews-logo.svg
தொகு  

புவியியலாளர்கள்‎

எச். என். ரிட்லி
சர் ஹென்றி நிக்கலஸ் ரிட்லி என்பவர் மலாயாவில் ரப்பர் மரங்களை அறிமுகப்படுத்தியவர். மலாயாவின் பொருளாதாரப் போக்கை மாற்றி அமைத்த பிரித்தானியத் தாவரவியலாளர். இவர் சிங்கப்பூர் தாவரப் பூங்காவின் முதல் தாவரவியலாளர் மற்றும் முதல் புவியியலாளராகவும் பணியாற்றியவர். இவர் பேராக், கோலாகங்சாரில் நட்டுவைத்த முதல் ரப்பர் மரம் 135 ஆண்டுகளாக இன்றும் இருக்கிறது. 1877 இல் அறிவியலில் ஆக்ஸ்பர்ட் பல்கலைக்கழகத்தில் இருந்து சிறப்புப் பட்டம் பெற்றார். அதே ஆண்டு பிரேசில் நாட்டிற்குச் சென்று தாவர ஆய்வுகளை மேற்கொண்டார். 1888ஆம் ஆண்டு சிங்கப்பூரின் தாவரவியல் பூங்காவிற்கு இயக்குநராக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு பணி புரியும் போது ரப்பர் மரங்களின் தாவரப் பயன்பாடுகள் மலாயா, சிங்கப்பூருக்கு பிரகாசமான எதிர்காலத்தைக் கொண்டு வரும் என்பதை உணர்ந்தார். ஆகவே, மலாயாத் தொடுவாய் நிலப்பகுதிகளில் ரப்பர் மரங்களை நட வேண்டும் என்று பிரசாரம் செய்தார்.


தொகு  

உங்களுக்குத் தெரியுமா...

Filos segundo logo (flipped).jpg
  • ... புவியின் பரப்பின் மீது பொதுவான வடக்கு-தெற்காக, பசிபிக் பெருங்கடலின் மையத்தில் செல்லுமாறு கற்பனைசெய்யப்பட்டுள்ள பன்னாட்டு நாள் கோடு ஒவ்வொரு நாட்காட்டி நாளும் தொடங்கும் இடமாக வரையறுக்கப்படுகிறது.
தொகு  

இதே மாதத்தில்

தொகு  

புவியியல் கண்டங்கள்

தொகு  

பகுப்புகள்

புவியியல் பகுப்புகள்

தொகு  

நீங்களும் பங்களிக்கலாம்

நீங்களும் பங்களிக்கலாம்
  • புவியியல் தொடர்பான கட்டுரைகளில் {{வலைவாசல்|புவியியல்}} வார்ப்புருவை இணைக்கலாம்.
  • புவியியல் தொடர்பான புதிய கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகளை மேம்படுத்தி உதவலாம்.
  • புவியியல் தொடர்பான படிமங்களை பதிவேற்றலாம்.
  • புவியியல் தேவைப்படும் கட்டுரைகள் பகுதியில் கோரப்பட்டுள்ள கட்டுரைகளை உருவாக்கலாம்.
தொகு  

விக்கித்திட்டங்கள்

தொகு  

தொடர்பான தலைப்புகள்

தொகு  

தொடர்புடைய வலைவாசல்கள்

தொகு  

பிற விக்கிமீடிய திட்டங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வலைவாசல்:புவியியல்&oldid=1570758" இருந்து மீள்விக்கப்பட்டது