வலைவாசல்:புவியியல்/உங்களுக்குத் தெரியுமா
- ... ஒன்சூ தீவு சப்பான் நாட்டின் மிகப்பெரியதும், உலகில் பரப்பளவின் படி ஏழாவது மிகப்பெரியதும், மக்கள் தொகையின் படி இரண்டாவது மிகப்பெரிய தீவும் ஆகும்.
- ... ஒருநிலக் கொள்கை என்பது உலகில் தற்போதுள்ள எல்லாக் கண்டங்களும் ஒரு காலத்தில் பாஞ்சியா என்னும் ஒரே தீவாக இருந்தது எனக்கூறும் கொள்கை.
- ... கடற் காயல் என்பது கடலிலிருந்து சிலவகையான தடுப்புகளால் பிரிக்கப்பட்டுள்ள தாழ்ந்த கடல் நீர் பரப்பு.
- ... காபோன் நாட்டின் ஓக்லோ என்ற இடத்தில் மாந்தர்களின் துணை ஏதுமில்லாமல் இயற்கையிலேயே தன்நேர்வாக யுரேனியம் அணு உலைகள் தொடங்கி மிக மிக நெடுங்காலமாக, அதாவது 600,000 ஆண்டுகள் முதல் 1,500,000 ஆண்டுகள் வரையும், இயங்கி வந்திருக்க வேண்டும் எனக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.
- ... அமெரிக்க ஐக்கிய நாடுகளின் நிலவியல் அளவீட்டு அமைப்பின் ஆய்வுகளின் படி ஆண்டொன்றுக்கு ஏறக்குறைய 60 குறிப்பிடத்தக்க நிலநடுக்கங்களும் 19 முக்கிய பெரிய நிலநடுக்கங்களும் ஏற்படுகின்றன
பயன்பாடு
தொகுஇந்த “உங்களுக்குத் தெரியுமா..” வின் துனைப் பகுப்புகள் {{Random subpage}} என்ற வார்ப்புருவின் மூலம் தன்னியக்கமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
DYK list
தொகுவலைவாசல்:புவியியல்/உங்களுக்குத் தெரியுமா/1
- ... மிலேட்டஸ் என்னுமிடத்தைச் சேர்ந்த அனக்சிமாண்டர் (கிமு 610 - கிமு 545) என்பவரே புவியியல் துறையை நிறுவியவர் என பிற்காலக் கிரேக்க அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
வலைவாசல்:புவியியல்/உங்களுக்குத் தெரியுமா/2
- ... ஆகாயகங்கை அருவி இந்தியாவின் தென் மாநிலமான தமிழ் நாட்டில், நாமக்கல்லுக்கு அருகில் உள்ள கொல்லி மலையில் அமைந்துள்ளது.
வலைவாசல்:புவியியல்/உங்களுக்குத் தெரியுமா/3
- ... ஒன்சூ தீவு சப்பான் நாட்டின் மிகப்பெரியதும், உலகில் பரப்பளவின் படி ஏழாவது மிகப்பெரியதும், மக்கள் தொகையின் படி இரண்டாவது மிகப்பெரிய தீவும் ஆகும்.
வலைவாசல்:புவியியல்/உங்களுக்குத் தெரியுமா/4
- ... எரிமலைக் கூம்பான அரராத் மலை துருக்கியில் உள்ள மிக உயரமான மலையாகும்.
வலைவாசல்:புவியியல்/உங்களுக்குத் தெரியுமா/5
- ... இந்தியாவின் சிதைந்த ஒரு நகரமான கோல்கொண்டா (கி.பி. 1364–1512) ஐதராபாத் நகருக்கு மேற்கே 11 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
வலைவாசல்:புவியியல்/உங்களுக்குத் தெரியுமா/6
- ... அய்யாவழி சமயத்தில் புனிதமானதாய் மதிக்கப்படும் மருந்துவாழ் மலை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரிய வகை மூலிகைச் செடிகள் பல நிறைந்த ஒரு மலையாகும்.
வலைவாசல்:புவியியல்/உங்களுக்குத் தெரியுமா/7
- ... பெரிப்ளசு என்பது கடல் வழிப்பயணம், கடல் வழிக்கையேடு, கடல் பயண விவரிப்பு என்னும் பொருள் தருகின்ற பண்டைய கிரேக்கச் சொல் ஆகும்.
வலைவாசல்:புவியியல்/உங்களுக்குத் தெரியுமா/8
- ... உலகின் மிகப் பெரிய தாவரவியற் உள்ளடக்கங்களைக் கொண்ட இங்கிலாந்திலுள்ள கியூ தாவரவியற் பூங்கா சுமார் 300 ஏக்கர் பரப்பளவுள்ளது.
வலைவாசல்:புவியியல்/உங்களுக்குத் தெரியுமா/9
- ... உலகில் பல்லுயிர் வளம் மிக்க எட்டு இடங்களில் மேற்குத் தொடர்ச்சி மலையும் ஒன்றாகும்.
வலைவாசல்:புவியியல்/உங்களுக்குத் தெரியுமா/10
- ... கழிமுகம், தெலுத்தாவின் வடிவத்தில் (முக்கோண வடிவம்) இருப்பதனாலேயே , அது ஆங்கிலத்தில் தெலுத்தா எனப் பெயர் பெற்றது.
வலைவாசல்:புவியியல்/உங்களுக்குத் தெரியுமா/11
- ... ஒரு ராட்சத எரிமலையின் வெடிப்பு குறைந்தது 1000 கன கிலோமீட்டர்களுக்கும் அதிகமாக இருக்கும்.
வலைவாசல்:புவியியல்/உங்களுக்குத் தெரியுமா/12
- ... நக்கிள்ஸ் மலைத்தொடர் இலங்கையின் எல்லாக் காலநிலை வலயங்களின் தன்மைகளையும் தன்னகத்தே ஒருங்கே கொண்ட மலைத்தொடர்.
வலைவாசல்:புவியியல்/உங்களுக்குத் தெரியுமா/13
- ... கர்நாடகத்தின் சோமநாதபுரத்திலுள்ள சிவசமுத்திரம் அருவி இந்தியாவின் இரண்டாவது பெரிய அருவியும் உலகின் பதினாறாவது பெரிய அருவியும் ஆகும்.
வலைவாசல்:புவியியல்/உங்களுக்குத் தெரியுமா/14
- ... ஒருநிலக் கொள்கை என்பது உலகில் தற்போதுள்ள எல்லாக் கண்டங்களும் ஒரு காலத்தில் பாஞ்சியா என்னும் ஒரே தீவாக இருந்தது எனக்கூறும் கொள்கை.
வலைவாசல்:புவியியல்/உங்களுக்குத் தெரியுமா/15
- ... சுராசிக் காலம் என்பது 20 கோடி ஆண்டுகளுக்கு முன்தொடங்கி 14.4 கோடி ஆண்டுகளுக்கு முன் வரையான தொன்மாகளின் (டைனாசோர்) வல்லாட்சிக் காலத்தை குறிக்கும்.
வலைவாசல்:புவியியல்/உங்களுக்குத் தெரியுமா/16
- ... சையது உசேன் மொகிசின் என்பவர் இந்திய வரைபடம் வரையப்பட்ட பெரிய இந்திய நெடுவரை வில் முறைக்கான பொறியியல் கருவிகளை வடிவமைத்தவர் ஆவார்.
வலைவாசல்:புவியியல்/உங்களுக்குத் தெரியுமா/17
- ... கடற் காயல் என்பது கடலிலிருந்து சிலவகையான தடுப்புகளால் பிரிக்கப்பட்டுள்ள தாழ்ந்த கடல் நீர் பரப்பு.
வலைவாசல்:புவியியல்/உங்களுக்குத் தெரியுமா/18
- ... புவியின் பரப்பின் மீது பொதுவான வடக்கு-தெற்காக, பசிபிக் பெருங்கடலின் மையத்தில் செல்லுமாறு கற்பனைசெய்யப்பட்டுள்ள பன்னாட்டு நாள் கோடு ஒவ்வொரு நாட்காட்டி நாளும் தொடங்கும் இடமாக வரையறுக்கப்படுகிறது.
வலைவாசல்:புவியியல்/உங்களுக்குத் தெரியுமா/19
- ... நிலநிரைக்கோடு என்பது புவியின் மேற்பரப்பில் உள்ள ஒரு புள்ளியின் அமைவிடத்தை கிழக்கு-மேற்காக குறிப்பதற்காக மேற்பரப்பில் வரையப்படுகின்ற கற்பனைக் கோடு.
வலைவாசல்:புவியியல்/உங்களுக்குத் தெரியுமா/20
- ... கொற்கை, புகார், எயிற்பட்டினம், நீர்ப்பெயற்று ஆகியவை சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நான்கு வங்கக்கடல் துறைமுகங்கள் ஆகும்.
வலைவாசல்:புவியியல்/உங்களுக்குத் தெரியுமா/21
- ... உரோமப் பேரரசின் பொம்பெயி நகரம் கிபி 79 ஆம் ஆண்டு வெசுவியசு எரிமலை வெடித்ததால் அழிந்து போனது.
வலைவாசல்:புவியியல்/உங்களுக்குத் தெரியுமா/22
- ... நகரும் கற்கள் என்பது கற்கள் அல்லது பாறைகள் மனிதனதோ அல்லது எந்தவொரு விலங்கினதோ தலையீடின்றி ஒரு நீண்ட நேரான பாதைக்குத் தடத்துடன் நகரும் ஒரு நிலவியல் தோற்றப்பாடு ஆகும்.
வலைவாசல்:புவியியல்/உங்களுக்குத் தெரியுமா/23
- ... தீபகற்ப இந்திய ஆறுகள் பெரும்பாலும் மேற்கிலிருந்து கிழக்காகவே ஓடுகின்றன. ஆனால் நர்மதை, தபதி, மாகி ஆகிய மூன்று ஆறுகளோ கிழக்கிலிருந்து மேற்காக ஓடுகின்றன.
வலைவாசல்:புவியியல்/உங்களுக்குத் தெரியுமா/24
- ... பனாமா கால்வாய் அமைக்கும் பணியில் மொத்தமாக 27,500 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
வலைவாசல்:புவியியல்/உங்களுக்குத் தெரியுமா/25
- ... நீர் நிலை ஒன்றுக்கான நீர் வடிந்துவந்து சேரக்கூடியவகையில் மழையையும் பனிப்பொழிவையும் பெறும் பிரதேசம் அதன் நீரேந்து பிரதேசம் எனப்படும்.
வலைவாசல்:புவியியல்/உங்களுக்குத் தெரியுமா/26
- ... 1811 இல் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கத்தினால் மிசிசிப்பி ஆறு சிறிது நேரம் பின்னோக்கிப் பாய்ந்தது.
வலைவாசல்:புவியியல்/உங்களுக்குத் தெரியுமா/27
- ... காபோன் நாட்டின் ஓக்லோ என்ற இடத்தில் மாந்தர்களின் துணை ஏதுமில்லாமல் இயற்கையிலேயே தன்நேர்வாக யுரேனியம் அணு உலைகள் தொடங்கி மிக மிக நெடுங்காலமாக, அதாவது 600,000 ஆண்டுகள் முதல் 1,500,000 ஆண்டுகள் வரையும், இயங்கி வந்திருக்க வேண்டும் எனக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.
வலைவாசல்:புவியியல்/உங்களுக்குத் தெரியுமா/28
- ... நீரானது, நீராவியுடன் சேர்ந்து, குறிப்பிட்ட இடைவெளிகளில் கிளர்ந்தெழுந்து, மேல்நோக்கி மிகவும் வேகத்துடன் வெளியேற்றப்படும் வெந்நீரூற்றுகள் உலகில் ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளன. இவற்றில் பாதிக்கு மேல் அமெரிக்கான் வயோமிங்கு என்னும் இடத்தில் உள்ள யெல்லோஸ்டோன் தேசியப் பூங்கால் இருக்கின்றன.
வலைவாசல்:புவியியல்/உங்களுக்குத் தெரியுமா/29
- ... சாவகத்தீவம் தான் உலகின் மிகவும் மக்கள் அடர்த்தி கூடிய தீவாகும்.
வலைவாசல்:புவியியல்/உங்களுக்குத் தெரியுமா/30
- ... மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர் கோண்டுவானா நிலப்பரப்பின் ஒரு பகுதி என புவியியல் வரலாறு கூறுகிறது.
வலைவாசல்:புவியியல்/உங்களுக்குத் தெரியுமா/31
- ... பைக்கால் ஏரி உலகின் மிக ஆழமான ஏரியாகும். உருசியாவின் தென் சைபீரியா மாகாணத்தில் அமையப்பெற்றுள்ள இந்த ஏரி பூமியினை சுற்றியுள்ள மொத்த நன்னீர் நிலைகளில் 20 சதவிகித நன்னீரினை தன்னகத்தே கொண்டுள்ளது.
வலைவாசல்:புவியியல்/உங்களுக்குத் தெரியுமா/32
- ... கொலம்பஸ் இறந்த வேளையிலும் தான் கண்டறிந்தது ஆசியாவின் கிழக்குக்கரை தான் என்று உறுதியாக நம்பினார்.
வலைவாசல்:புவியியல்/உங்களுக்குத் தெரியுமா/33
- ... இந்தியாவின் மலைத்தொடர்களில் மிகப்பழமையானது ஆரவல்லி மலைத்தொடர். இது ராஜஸ்தான், ஹரியானா, குசராத், பஞ்சாப், சிந்த் ஆகிய பகுதிகளின் ஊடே செல்கிறது.
வலைவாசல்:புவியியல்/உங்களுக்குத் தெரியுமா/34
- ... இந்தியாவில் இயக்கத்திலுள்ள ஒரே எரிமலை அந்தமான்-நிக்கோபர் தீவுகளுள் ஒன்றான பேரன் தீவிலுள்ள எரிமலையே.
வலைவாசல்:புவியியல்/உங்களுக்குத் தெரியுமா/35
- ... ஐசுலாந்து எரிமலை எய்யாபியாட்லயாகுட்டின் எரிமலை வெடிப்புமை எண் (எவெஎ) நான்கு. இந்தோனேசியாவில் இருக்கும் தம்போரா எரிமலையின் எரிமலை வெடிப்புமை எண் (எவெஎ) ஏழு. 1815-ல் தம்போரா வெடித்ததில் ஏறக்குறைய ஒரு இலட்சம் மக்கள் இறந்தனர்.
வலைவாசல்:புவியியல்/உங்களுக்குத் தெரியுமா/36
- ... ஜார்ஜ் எவரஸ்ட் என்ற வேல்சு நாட்டு நில அளவாளரின் நினைவாகவே எவரெஸ்ட் சிகரம் பெயரிடப்பட்டது.
வலைவாசல்:புவியியல்/உங்களுக்குத் தெரியுமா/37
- ... கரோன் ஆறு பிரான்சின் முதன்மையான ஆறுகளுள் ஒன்று. ஸ்பெயின் பகுதியிலுள்ள பிரெனே மலையில் இருந்து உருவாகி 647 கி.மீ. பாய்ந்து பொர்தோ நகரருகே அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கிறது.
வலைவாசல்:புவியியல்/உங்களுக்குத் தெரியுமா/38
- ... அமெரிக்க ஐக்கிய நாடுகளின் நிலவியல் அளவீட்டு அமைப்பின் ஆய்வுகளின் படி ஆண்டொன்றுக்கு ஏறக்குறைய 60 குறிப்பிடத்தக்க நிலநடுக்கங்களும் 19 முக்கிய பெரிய நிலநடுக்கங்களும் ஏற்படுகின்றன
வலைவாசல்:புவியியல்/உங்களுக்குத் தெரியுமா/39
- ... புவியில் உள்ள நன்னீரில் கிட்டத்தட்ட 70 வீதமானது அண்டார்க்டிக்காவில் உறைபனி நிலையில் உள்ளது.
வலைவாசல்:புவியியல்/உங்களுக்குத் தெரியுமா/40
- ... புவியியல் ஆள்கூற்று முறை என்பது புவியின் மீதுள்ள எந்தவொரு இடத்தையும் கோள ஆள்கூற்று முறையின் இரண்டு ஆள்கூறுகளைப் பயன்படுத்தி வெளிப்படுத்தும் ஒரு முறையாகும்.
முன்மொழிதல்
தொகுஇந்த பக்கத்தில் நீங்கள் சேர்க்க விரும்பும் படிமங்களை இங்கு முன்மொழியவும்.
- தற்போது எதுவும் இல்லை.