நகரும் கற்கள்

நகரும் கற்கள் அல்லது அலையும் கற்கள் அல்லது நகரும் பாறைகள் (Sailing stones) என அழைக்கப்படுவது கற்கள் அல்லது பாறைகள் மனிதனதோ அல்லது எந்தவொரு விலங்கினதோ தலையீடின்றி ஒரு நீண்ட நேரான பாதைக்குத் தடத்துடன் நகரும் ஒரு நிலவியல் தோற்றப்பாடு ஆகும். இத்தகைய சம்பவங்கள் ரேஸ்ட்ராக் பிளாயா, சாவுப் பள்ளத்தாக்கு போன்ற இடங்களில் பதிவு செய்யப்பட்டு ஆராயப்பட்டு வருகின்றன. இத்தகைய இடங்களில் கற்கள் நகர்ந்ததற்குரிய சுவடுகளும் நகர்ந்த கற்களும் நிழற்படமாகப் பிடிக்கப்பட்டுள்ளன. கற்களை நகர்த்தும் விசை எதுவென்பது இதுவரை அறியப்படாத ஒன்றாக உள்ளது, எனினும் இதனைப் பற்றிய ஊகங்களும் கோட்பாடுகளும் உலாவுகின்றன.

ரேஸ்ட்ராக் பிளாயாவில் நகரும் பாறைகள்.

ஒவ்வொரு இரண்டு அல்லது மூன்று வருடத்திற்கு இவை நகர்கின்றன. கரடுமுரடான அடிப்பகுதியைக் கொண்ட கற்கள் வரிகள் கொண்ட சுவட்டை உருவாக்குகின்றன. சில சந்தர்ப்பங்களில் கற்கள் கவிழ்ந்து, அதன் வேறொரு முனை நிலத்தைத் தொட்டு அதன் தடப்பாதை திசைமாறுகின்றது. கற்களைப் பொறுத்து, சுவடுகள் திசையிலும் நீளத்திலும் வேறுபாடு கொண்டவையாக உள்ளன. ஒன்றாக புறப்படும் இரு கற்கள் சில குறிப்பிட்ட தூரம் வரை ஒரே திசையில் நகர்ந்து, பின்னர் இடம், வலம் எனத் திசை மாறுகின்றன, சிலவேளைகளில் வந்தவழியே திரும்பவும் நகர்தலும் உண்டு. இரு ஒரே அளவிலான கற்கள் வெவ்வேறு தூரத்தை அடைவதுண்டு.

விளக்கம் தொகு

 
சுவடுகள் சிலசமயங்களில் நேரானவை அல்ல.

பெரும்பாலான நகரும் கற்கள் பிளேயாவின் தெற்கு முனையில் அமைந்துள்ள 850 அடி (260மீ) உயர கரும் தொலமைற்றுக்களாலான குன்றுகளில் இருந்து உருவாகின்றன, ஆனால் சில ஊடுருவிய தீப்பாறைகள் அருகில் உள்ள சரிவில் தோன்றுகின்றன. பொதுவாக இச் சுவட்டுத்தடங்கள் பத்து தொடக்கம் 100 அடி நீளமாகவும் 12 அங்குலம் (8-30செ.மீ) அகலம் கொண்டதாகவும் ,சாதாரணமாக ஒரு அங்குலத்துக்கும் (2.5 செ.மீ) குறைவான ஆழமாகவும் காணப்படுகின்றது. கற்கள் அசைவதற்குத் தேவைப்படக்கூடிய சிறப்பான சூழ்நிலை எனக் கருதப்படுபவை:

  • ஈரப்பதமான ஆனால் நீரால் நிரம்பாத மேற்பரப்பு,
  • மெல்லிய களிமண் படலம்,
  • தொடக்க நிலை அசைவிற்கான விசையாக மிக்க வன்மையான காற்று,
  • கற்களைத் தொடர்ச்சியாக அசைப்பதற்கு வலிமை கொண்ட நிலையாக உள்ள தொடர்ச்சியான காற்று
"https://ta.wikipedia.org/w/index.php?title=நகரும்_கற்கள்&oldid=2744651" இலிருந்து மீள்விக்கப்பட்டது