வலைவாசல்:மதுரை/முகவுரை
இந்தியாவின் மாநிலமான தமிழகத்தின் மாவட்டமான மதுரை மாவட்டத்தின் தலைநகராக உள்ள மதுரை உள்ளாட்சி அமைப்பில் ஒரு மாநகராட்சியாகும். தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமான மதுரை 1971 ஆம் ஆண்டு மே மாதம் முதல் தேதியிலிருந்து மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. அப்போது மொத்தம் 13 பஞ்சாயத்து பகுதிகளைச் சேர்ந்து மதுரை மாநகராட்சி உருவாக்கப்பட்டது. வைகை ஆற்றின் படுகையில் அமைந்துள்ள நகரமாகும். தமிழ் மொழியின் பிறப்பிடமாகவும் பாண்டியர்களின் கடைச்சங்கத் தலைநகராகவும் மதுரை கூறப்படுகின்றது. தென்னிந்திய திருத்தலங்களின் நுழைவு வாயிலாகவும், உலகப்புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் ஆலயம் அமைந்துள்ள இடமாக மதுரை விளங்குகின்றது.