வலைவாசல்:யாழ்ப்பாணம்/சிறப்புப் படம்/1
கூட்டுறவாளர் வீரசிங்கம் மண்டபம் (Co-operator Veerasingam Hall) அல்லது பொதுவாக வீரசிங்கம் மண்டபம் என்பது இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண நகரில் அமைந்துள்ள ஒரு பொது மண்டபம் ஆகும். யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் மாநாடுகள், மற்றும் கலாச்சார நிகழ்வுகள் இம்மண்டபத்திலேயே நடத்தப்படுகின்றன. யாழ்ப்பாண மாவட்டம் கூட்டுறவு நிலையத்தின் முதலாவது தலைவராகப் பணியாற்றிய வி. வீரசிங்கம் என்பவரின் நினைவாக இம்மண்டபத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டது. மானிப்பாய் இந்துக் கல்லூரி ஆசிரியரான வீரசிங்கம் வட்டுக்கோட்டை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.