வலைவாசல்:விக்கிப்பீடியா கட்டுரைப் போட்டி/தமிழ் விக்கிப்பீடியா
விக்கிப்பீடியா என்பது ஒரு கட்டற்ற கலைக்களஞ்சியத்தை உருவாக்கும் திட்டம். ஐக்கிய அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட விக்கிமீடியா பவுண்டேசன் எனப்படும் இலாபநோக்கற்ற அமைப்பினால் நிருவகிக்கப்படும் விக்கிப்பீடியா திட்டத்தில் 267 மொழிகளில் விக்கிப்பீடியாக்கள் செயற்படுத்தப்படுகின்றன. விக்கிப்பீடியாவில் எவரும் புதிய கட்டுரைகளை எழுதலாம், ஏற்கனவே இருக்கும் கட்டுரைகளில் தேவையான மாற்றங்களைச் செய்யலாம் என்பதே இத்திட்டத்தின் சிறப்பு ஆகும். இதனால், நாள்தோறும் அனைத்து மொழிகளிலும் ஆயிரக்கணக்கான கட்டுரைகள் எழுதப்படுவதுடன், அவற்றிலுள்ள தகவல்கள் தொடர்ந்து இற்றைப்படுத்தப்பட்டும் வருகின்றன. தற்போது எல்லா மொழி விக்கிப்பீடியாக்களிலும் மொத்தமாக 15 மில்லியன் கட்டுரைகளுக்கு மேல் எழுதப்பட்டுள்ளன. தமிழ் விக்கிப்பீடியா 2003 ஆம் ஆண்டில் தொடங்கியது. இன்று வரை தமிழ் விக்கிப்பீடியாவில் 21,700 க்கும் மேற்பட்ட கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.