வலைவாசல்:விக்கிப்பீடியா கட்டுரைப் போட்டி

தொகு  

போட்டி அறிவிப்பு


தமிழ்நாடு அரசு, 2010 சூன் 23 முதல் சூன் 27 வரை கோயம்புத்தூர் நகரில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையும் ஒன்பதாவது இணையத் தமிழ் இணைய மாநாட்டையும் நடத்துகிறது. இதனை ஒட்டித் தமிழ்நாட்டிலுள்ள கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்பில் தமிழ் விக்கிப்பீடியாவுக்குத் தகுந்த தகவல் பக்கங்களை (கட்டுரைகள்) எழுதும் போட்டி நடைபெற்றது. போட்டிக்கான கட்டுரைகளை அனுப்பும் காலம் மே 15, 2010 அன்று முடிந்தது.

இப்போட்டியில் கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம், விளையாட்டு, வேளாண்மை, சட்டம், கல்வியியல், இயங்குனர் மருத்துவம் (பிசியோ தெரப்பி), சித்த மருத்துவம், பல் மருத்துவம், செவிலியர், கால்நடை மருத்துவம், பலதொழில்நுட்பப் பயிலகம் முதலிய துறைகளைச் சேர்ந்த மாணவர்கள், பொதுமக்கள் பங்கு கொண்டனர். போட்டிக்கு வந்த தகவல் பக்கங்களில் தகுதியானவை தமிழ் விக்கிப்பீடியாவில் சேர்க்கப்படும். சிறந்த தகவல் பக்கங்களை எழுதியோருக்கு மதிப்பு மிகுந்த பரிசுகள் வழங்கப்பட உள்ளன. போட்டி முடிவுகளை இங்குக் காணலாம்.


தொகு  

போட்டி முடிவுகள்


தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைப் போட்டி 2010 முடிவுகளை இங்குக் காணலாம்.

தொகு  

ஒருங்கிணைப்புக் குழுக்கள்


இப்போட்டியை நடத்துவதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் ஓர் ஒருங்கிணைப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இக் குழுவில், தமிழ்நாடு அரசு தகவல் தொழில்நுட்பத்துறைச் செயலர் திரு. ப. வி. ச. டேவிதார், திரு. சந்தோஷ் பாபு, முனைவர். ந. அருள், முனைவர் ப. அர. நக்கீரன் ஆகியோர் உள்ளனர். போட்டிக்கான இணையத்தள அமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளில் திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

தொகு  

நடுவர்கள்


போட்டிக்கு வரும் கட்டுரைகளை மதிப்பீடு செய்வதற்காக குறிப்பிட்ட துறைகளில் உயர் தகுதிகள் கொண்ட நடுவர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் வாழும் பல்வேறு துறை அறிஞர்கள் இடம் பெற்றுள்ளனர்.

தொகு  

தமிழ் விக்கிப்பீடீயா


விக்கிப்பீடியா என்பது ஒரு கட்டற்ற கலைக்களஞ்சியத்தை உருவாக்கும் திட்டம். ஐக்கிய அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட விக்கிமீடியா பவுண்டேசன் எனப்படும் இலாபநோக்கற்ற அமைப்பினால் நிருவகிக்கப்படும் விக்கிப்பீடியா திட்டத்தில் 267 மொழிகளில் விக்கிப்பீடியாக்கள் செயற்படுத்தப்படுகின்றன. விக்கிப்பீடியாவில் எவரும் புதிய கட்டுரைகளை எழுதலாம், ஏற்கனவே இருக்கும் கட்டுரைகளில் தேவையான மாற்றங்களைச் செய்யலாம் என்பதே இத்திட்டத்தின் சிறப்பு ஆகும். இதனால், நாள்தோறும் அனைத்து மொழிகளிலும் ஆயிரக்கணக்கான கட்டுரைகள் எழுதப்படுவதுடன், அவற்றிலுள்ள தகவல்கள் தொடர்ந்து இற்றைப்படுத்தப்பட்டும் வருகின்றன. தற்போது எல்லா மொழி விக்கிப்பீடியாக்களிலும் மொத்தமாக 15 மில்லியன் கட்டுரைகளுக்கு மேல் எழுதப்பட்டுள்ளன. தமிழ் விக்கிப்பீடியா 2003 ஆம் ஆண்டில் தொடங்கியது. இன்று வரை தமிழ் விக்கிப்பீடியாவில் 21,700 க்கும் மேற்பட்ட கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
தொகு  

வேண்டுகோள்


உலகின் பல பகுதிகளில் உருவாகும் பல்துறை அறிவுத் திரள்களைத் தமிழில் தொகுத்தளிக்கும் முயற்சியில் தமிழ் விக்கிப்பீடியா சிறப்பாகப் பங்காற்றி வருகிறது. தமிழ் விக்கிப்பீடியாவின் வழியான தமிழ் மொழி வளர்ச்சிப் பயணத்தில், கட்டுரைப் போட்டி வழியாகப் பங்கேற்க வந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறோம். தாங்கள் அனைத்துத் துறைகளிலுமான அறிவுத் திரள்கள் குறித்து உரையாடும் போதும், பேசும் போதும் தமிழைப் பயன்படுத்தித் தமிழை முதன்மை மொழியாக்க முன் வர வேண்டும். அத்துடன் தாங்கள், இந்த போட்டிக் கட்டுரை ஒன்றுடன் நின்று விடாமல், தமிழ் விக்கிப்பீடியாவின் பயனர்களில் ஒருவராகத் தங்களைப் பதிவு செய்து கொண்டு, தங்கள் துறை சார்ந்த கட்டுரைகள், தங்கள் விருப்பமுள்ள பிற துறை சார்ந்த கட்டுரைகள் போன்றவற்றைத் தமிழ் விக்கிப்பீடியாவில் பதிவேற்றம் செய்து, தமிழ் மொழியிலான விக்கிப்பீடியாவினை முதன்மையாக்க தங்களின் தொடர் ஒத்துழைப்பை நாடுகிறோம்.