பல் மருத்துவம்

பல்மருத்துவம் (dentistry) என்பது, பல் உள்ளிட்ட, வாய்ப்புறம் சார்ந்த நலன் மற்றும் நோய்கள், உடல் நலனுக்கும், வாய்ப்பகுதிக்குமான இத்தகைய தொடர்புகள் பற்றிய மருத்துவ அறிவியலாகும். இது பற்கள், பல்தாங்கு பகுதிகள், தாடை மற்றும் உள்ள பிற மென்திசுக்களின் பிரச்சனைகளைத் தவிர்க்கவும், சிகிச்சை அளிக்கவும் செய்கிறது.[1] பல்மருத்துவத் தொழிலை மேற்கொண்டு உள்ளவர்கள் பல்மருத்துவர் எனப்படுவர்.

பல் மருத்துவர் ஒருவரும் அவரது உதவியாளரும் ஒரு நோயாளிக்கு அறுவைச் சிகிச்சை செய்கின்றனர்.

அறுவை மருத்துவம்தொகு

பல்மருத்துவம், வாய்க்குழி தொடர்பாகப் பல செயல்முறைகளை உள்ளடக்கியுள்ளது. பொதுவான மருத்துவ முறைகள் பற்சொத்தைக்கான சிகிச்சையாகப் பற்கள் மீதான அறுவை மருத்துவத்தை உள்ளடக்குகிறது. சிதைவடைந்த பற்கள், பல் உலோகப்பூச்சு, பல் கூட்டுப்பொருள், பல் போசலின் என்பவற்றுள் ஒன்றால் நிரப்பப்படுகின்றன. வாய் மற்றும் முகஎலும்பு அறுவை மருத்துவம் பல் அறுவை மருத்துவத்தின் சிறப்பு வடிவமாகும். பல் மருத்துவர்கள் மருந்துகள், எக்ஸ்-கதிர்ச் சிகிச்சை போன்றவற்றை நோயாளருக்குக் கொடுக்க முடியும். பல பல் நோய்களும் வழக்கத்துக்கு மாறான தன்மைகளும், பிற தொகுதிகள், நரம்பு போன்றவற்றில் இருக்கக்கூடிய நோய்களைக் குறிப்பனவாகவும் இருக்கக்கூடும்.

வரலாறுதொகு

பல்மருத்துவம் பற்றிய குறிப்புகள் வரலாற்றுக்கு முந்தய காலத்தில் இருந்தே பல நாகரிங்களில் இடம்பெற்றுள்ளது. கி.மு.5௦௦௦ ஆண்டு சமயத்தில் பல்புழு பற்றி சுமேரிய நாகரிகக் குறிப்புகள் தெரிவிகின்றன. கி.மு.26௦௦ காலத்தில் வாழ்ந்த ஹெசி ரே என்பவர் இதுவரை அறியப்பட்ட முதல் பல்மருத்துவராக உள்ளார். அகழ்வாய்வில் கண்டறியப்பட்ட அவரது கல்லறையில் ‘பல் மற்றும் மருத்துவம் செய்தவர்களில் மிகச் சிறந்தவர்’ என்ற வாசகம் உள்ளது. கி.மு.1700-1550 காலத்திய எகிப்தியரான எபர்ஸ் பேப்பிராஸ் என்பவர் பல் நோய்கள் மற்றும் அதற்கான சிகிச்சைகள் பற்றிய குறிப்புகளை எழுதிஉள்ளார். கி.மு.1௦௦-இல் ரோமைச் சேர்ந்த செல்சஸ் என்பவர் பல்மருத்துவ சிகிச்சை பற்றிய விரிவான குறிப்புகளை எழுதி உள்ளார். சீனர்களின் குறிப்புகள் வெள்ளிக்கலவை பல்அடைக்கப் பயன்பட்டதை உணர்த்துகின்றன.

ஐரோப்பாவில் ரோமானிய ஆட்சிக் காலத்திற்குப் பிறகு அனைத்து மருத்துவம் மற்றும் அறுவைசிகிச்சைகளும் தேவாலயங்களில் உள்ள பாதிரியார்களால் மட்டுமே மேற்கொள்ளப்பட்டன. அவர்களுக்கு முகச்சவரம் செய்ய வந்தவர்கள் அவர்களுக்கு இச்செயல்பாடுகளில் துணை செய்தனர். கி.பி.1163 இல் வெளியிடப்பட்ட தேவாலயக் குழும அறிக்கையானது, தேவாலயங்களில் ரத்தம் சிந்துவதை தடை செய்யும் பொருட்டு, அறுவைசிகிச்சைகளை தேவாலயங்களில் மேற்கொள்வதை தடை செய்தது. இறுதியில் அறுவைசிகிச்சை பற்றிய சிறிதேனும் அறிவு கொண்ட சவரம் செய்பவர்களால் அது மேற்கொள்ளப்பட்டது. இவர்கள் காலப்போக்கில் தங்களை அறுவைசிகிச்சைமருத்துவராக வெளிப்படுத்திக் கொண்டார்கள்.

இதனைத் தொடர்ந்து, இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி அறுவைசிகிச்சை மேற்கொள்வதற்கான ஆணையைப் பிறப்பித்தார். இதன் விளைவாக ‘ராயல் காலேஜ் ஆப் சர்ஜன்ஸ்’ உருவானது. 153௦ ஆம் ஆண்டு ஆர்ட்ஷ்னி புச்லெய்ன் என்பவர் ஜெர்மானிய மொழியில் ‘அனைத்து வகை பல் நோய் மற்றும் நலக்குறைவுக்கான சிறிய மருத்துவப் புத்தகம்’ ஒன்றை வெளியிட்டார். அறுவைமருத்துவத்தின் தந்தையாக அறியப்படும் ஆம்ப்ரோஸ் பார், தனது நூலில் பல்நீக்கம், தாடை முறிவு ஆகியவற்றைப் பற்றி பல குறிப்புகளைக் கூறியுள்ளார். 16 ஆம் நூற்றாண்டில் நவீன பல்மருத்துவத்தின் தந்தையாக அறியப்படும் பிரான்சைச் சார்ந்த பியேரே பௌச்சர்ட் பல்மருத்துவத்தின் அனைத்து மருத்துவ முறைகளையும் உள்ளடக்கிய ஒரு நூலினை வெளியிட்டார். இது பல்மருத்துவ சிகிச்சைகளை அதுவரை இணைந்திருந்த அறுவைமருத்துவதிலிருந்து பிரித்து வெளியிடப்பட்டிருந்தது.

1771 இல் நவீன அறுவைமருத்துவத்தின் தந்தை என அறியப்படும் ஜான் ஹன்டர், தனது ‘மனித பல்லின் இயற்கை வரலாறு’ என்ற நூலில் பல்லின் கூறமைப்புகளை விளக்கயுள்ளார். இவர் பற்களை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மாற்றுப்பதிப்பதில் (transplantation) முன்னோடியாகத் திகழ்ந்தார். இது வெற்றி பெறாத சூழலிலும், இதுவே ஒரு மனிதத் திசுவை மற்றொரு மனிதனுக்குப் பதிக்கும் முதல் முன்னோடி சிகிச்சை முறையாக இருந்தது. 16 ஆம் நூற்றாண்டின் இறுதியில் அமெரிக்காவில் கைவினைஞர்களால் பல்மருத்துவம் பின்பற்றப்பட்டது. இவர்களில் ஒருவரான ஐசக் கிரீன்வுட் அமெரிக்காவில் பிறந்த முதல் பல்மருத்துவராகக் கருதப்படுகிறார். இவரது மகன்களில் ஒருவரான ஜான் க்ரீன்வுட், ஜார்ஜ் வாஷிங்டனின் பல் மருத்துவராக இருந்துள்ளார். இவர் காலால் சுழலும் உளியினை, பற்சிதைவினை நீக்க முதலில் வடிவமைத்தார். ஜேம்ஸ் மோரிசன் இவ்வகை காலால் சுழலும் உளிக்கு முதலில் காப்புரிமை பெற்று அதனை வர்த்தக அளவில் கொண்டு வந்தார்.

1844 இல் அமெரிக்காவின் பல் மருத்துவரான ஹோர்ஸ் வெல்ஸ் என்பவர் நைட்ரஸ் ஆக்சைடின் மயக்கநிலைப் பண்புகள் பற்றி முதலில் கண்டறிந்தார். இருப்பினும் பல் நீக்கத்தின் அவரது சோதனை, பொதுமக்கள் முன் நிகழ்த்தப்படும் போது தோல்வியைத் தழுவியது. இதனைத் தொடர்ந்து வில்லியம் தாமஸ் கிரீன் மார்டன் என்பவர் ஈதர்-ன் மயக்கப்பண்புகள் பற்றி 1846 இல் வெளிப்படுத்தினார். இருப்பினும் முதல் மயக்கமருந்தினைக் கண்டறிந்ததற்கான அங்கீகாரம் ஹோர்ஸ் வெல்லுக்கே பின்னர் வழங்கப்பட்டது.

போன்சி என்பவர் முதல் வெண்மண் பாகைகளை (porcelain crown) உருவாக்கினார். இது அதுவரை புழக்கத்தில் இருந்த பல்மருத்துவதில் புதிய அழகுணர்வைச் சேர்த்தது. சாமுவேல் ஸ்டாக்சன் இதனை வர்த்தக அளவில் பிரபலப்படுத்தினார். அமெரிக்காவின் மில்லர், பற்சிதைவானது பாக்டீரியாக்களின் செயலினால் உருவாகிறது எனக் கண்டறிந்தார். அதுவரையிலும் இது புழுக்களாலும், உடலின் திரவச் சீரின்மையாலும் நிகழ்கிறது என பல நம்பிக்கைகள் இருந்தன. 184௦ ல் உலகின் முதல் பல்மருத்துவக்கல்லூரியான பல்டிமோர் கல்லூரி உருவாக்கப்பட்டது.

1895 ல் ரான்ட்ஜென் கண்டுபிடித்த x கதிர் மருத்துவத்துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. எட்மண்ட் கேல்ஸ் என்பவர் 1896 ல் முதல் பல் ஊடுகதிர் படத்தை எடுத்தார்.

பல் சீரமைப்புத் துறைக்குப் பெரும் பங்காற்றிய ஆங்ள், அத்துறையை பல் மருத்துவத்தின் முதல் தனிப்பிரிவாக உருவாக்கினார். அவர் முதல் பல் சீரமைப்புக்கான கல்லூரியை 19௦௦ ல் நிறுவினார். முதல் பல்சீரமைப்பிறகான தனி இதழையும் (அமெரிக்கன் ஆர்தொடாண்டிஸ்ட், 1907) நிறுவினார். 188௦ களில் பிதுக்கு குழாய்கள் அறிமுகத்திற்குப் பிறகு அதுவரை திரவமாகவும், பொடியாகவும் இருந்தவை, பற்பசைகளாக வெளிவர ஆரம்பித்தன. இதனைத் தொடர்ந்து 1938 ல் அறிமுகமான நைலான் தூரிகைகளும் பல் சுகாதாரத்தை பெரிதும் மேம்படுத்தின.

 
தொடக்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட பல் மருத்துவ இருக்கை- பயனியர் மேற்கு அருங்காட்சியகம், சம்ராக், டெக்சாசு

சிறப்பு பல் மருத்துவ பிரிவுகள்தொகு

1. பொது பல் சுகாதாரம் (Dental public health) :- வாய்வழி சுகாதார தொடர்புடைய நோய் தொற்று மற்றும் சமூக சுகாதார கொள்கைகளை ஆய்வு

2. பல் காப்பு மருத்துவம் (Conservative dentistry and endodontics) :- பல் மற்றும் வேர் கால்வாயை பாதிக்காதவாறு, பல் வடிவம் மற்றும் செயல்பாட்டை மீண்டும் உருவாக்கும் விதமாக பற்களைப் பாதிக்கக்கூடிய பல்சொத்தை மற்றும் பல்சொத்தை அல்லாத சிராய்ப்பு புண்களை குணப்படுத்தி பற்களை பழைய நிலைக்கு கொண்டு வருதல். இந்த சிறப்பு பட்டம் இந்தியாவில் வழங்கப்படுகிறது.

3பற்கூழ் நோய் மருத்துவம் (Endodontics) (also called endodontology) :- வேர் கால்வாய் சிகிச்சை மற்றும் பல் கூழ் மற்றும் நீர், சீழ்கட்டித் திசுக்களின் நோய்களைப் பற்றிய ஆய்வு

4பல் தடய ஆய்வியல் (Forensic odontology):- சட்டத்தில் பல் ஆதாரங்களை சேகரித்து பயன்படுத்துதல். இந்த துறையில் அனுபவம் அல்லது பயிற்சியுடன் எந்த பல்மருத்துவரும் இதை செய்யலாம். தடய பல்மருத்துவரின் செயல்பாடு முதன்மையாக ஆவணங்கள் மற்றும் அடையாளத்தின் சரிபார்த்தல் ஆகும்

5 முதியோர் பல் மருத்துவம் (Geriatric dentistry or Geriodontics) :- வயது முதிர்வின் காரணமாக முதியவர்களுக்கு ஏற்படும் வயது தொடர்பான நோய்களுக்கான நோயறிதல், தடுப்பு மற்றும் சிகிச்சைகளை பிற சுகாதார நிபுணர்களுடன் சேர்ந்து சம்பந்தப்பட்ட முதியருக்கு பல் பராமரிப்பு சிகிச்சை அளித்தல்

6 முக வாய் எலும்பு நோய்க்குறியியல் (Oral and maxillofacial pathology):- ஆய்வு நோய் கண்டறிதல், வாய் மற்றும் முக வாய் எலும்பு நோய்களுக்கான சிகிச்சை

7 வாய் எலும்பு கதிரியக்கவியல் (Oral and maxillofacial radiology) :- கதிரியக்கம் மூலமாக வாய் மற்றும் முக எலும்புகளில் நோய்களின் ஆய்வு

8 வாய் எலும்பு அறுவை சிகிட்சை (Oral and maxillofacial surgery):- தாடை, வாய் மற்றும் முக மாற்று அறுவை ,நீக்குதல் மற்றும் கிசிச்சை அளித்தல்[nb 1]

9 வாய் சார்ந்த உயிரியல் (oral Biology):- மண்டைமுகத் தசை மற்றும் வாய் உயிரியல் ஆராய்ச்சி

10 பல் மாற்று அருவை சிகிச்சை (Oral Implantology):- பல் நீக்க சிகிச்சை, நீக்கப்பட்ட பல்லை மாற்றும் கலை

11 வாய் மருத்துவம் (Oral medicine):- வாய்வழி சளி நோய்களின் நோயறிதல் மற்றும் மருத்துவ மதிப்பீடு

12 பற்கள் சீரமைப்பு இயல் (Orthodontics and dentofacial orthopedics):- பல் வரிசை சீராக்கம் மற்றும் முக சீரமைப்பு சிகிச்சை

13 குழந்தை பல் மருத்துவம் (Pediatric dentistry):- குழந்தைகளின் பற்களுக்கான சிறப்பு மருத்துவம்

14 பல்லைச் சுற்றிய திசு ஆய்வு (Periodontology):- பல்சூழ் திசுக்களைப் பற்றியும் அவற்றுக்கான சிகிச்சை முறைகள் மற்றும் பல் மாற்று அறுவைசிகிச்சைகளின் போது இத்திசுக்களுக்கான பராமரிப்பு.

15 செயற்கைபல் இயல் (prosthondontics):- பொய்ப்பல், செயற்கைப்பல் நடுதல். காதுகள், கண்கள், மூக்கு போன்ற விடுபட்ட முக உறுப்புகளை ஒழுங்குபடுத்துதல்

16 சிறப்புத் தேவையுடையோருக்கான பல் மருத்துவம் (Special needs dentistry):- வளர்ச்சி மற்றும் பெறப்பட்ட குறைபாடுகள் உள்ளவர்களுக்கு பல்மருத்துவம்.

17 கால்நடைப்பல் மருத்துவம் (Veterinary dentistry):- கால்நடை விலங்குகளின் பல் சிகிச்சைகள் மற்றும் பராமரிப்பு [2][3]

இவற்றையும் பார்க்கதொகு

பல் வகைகள் பல் குறியீட்டு முறைகள்


மேற்கோள்கள்தொகு

  1. "Glossary of Dental Clinical and Administrative Terms". American Dental Association. 2016-03-06 அன்று மூலம் பரணிடப்பட்டது. 1 பெப்ரவரி 2014 அன்று பார்க்கப்பட்டது.
  2. "AVDC Home". Avdc.org. 29 November 2009. 18 April 2010 அன்று பார்க்கப்பட்டது.
  3. "EVDC web site". Evdc.info. 5 செப்டம்பர் 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. 18 April 2010 அன்று பார்க்கப்பட்டது.


பிழை காட்டு: <ref> tags exist for a group named "nb", but no corresponding <references group="nb"/> tag was found

"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்_மருத்துவம்&oldid=3562066" இருந்து மீள்விக்கப்பட்டது