வலைவாசல்:விக்கிப்பீடியா கட்டுரைப் போட்டி/போட்டி விதிகள் சுருக்கம்
போட்டி விதிகள்:
- தகவல் பக்கங்கள் (கட்டுரைகள்) ஆதாரங்களின் அடிப்படையில் நடுநிலைமையுடன் அமையவேண்டும். இனம், சமயம், அரசியல், தனிநபர் குறை, வேறுபாடுகள் தொடர்பாக வெறுப்பைத் தூண்டாதவாறு, தமிழ் விக்கிப்பீடியாவுக்கு ஏற்றதாக அமைய வேண்டும்.
- தகவல் பக்கங்களில் உள்ள சொற்களின் எண்ணிக்கை 250 முதல் 500 வரை அமைய வேண்டும். (இரண்டு A4 தாள் பக்க அளவு)
- தகவல் பக்கங்கள் ஒருங்குறியில் (Unicode) அமைய வேண்டும். MS Latha, Lohit Tamil போன்ற எழுத்துருக்களைப் பயன்படுத்தலாம். ( தமிழ்த் தட்டச்சு உதவி பார்க்கவும். )
- தகவல் பக்கங்களை மே 15, 2010க்குள் நிறைவு செய்து .doc அல்லது .odt கோப்பு வடிவில் http://tamilint2010.tn.gov.in/ இணையத் தளத்தின் வழியாக அனுப்ப வேண்டும்.
- தகவல் பக்கங்களின் உரிமை போட்டி அமைப்பாளர்களையே சாரும்.
- மேலும் விபரங்களும், கூடுதல் விபரங்களுக்கான இணைப்புக்களும் இந்தப் பக்கத்தில் ( http://ta.wikipedia.org தளத்தில் ) தரப்பட்டுள்ளன. தகவல் பக்கங்களை எழுதும் முன் இங்குத் தரப்பட்டுள்ள விபரங்களை வாசித்துப் புரிந்துகொள்வது முக்கியம்.
- தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல் பக்கங்கள் உலகளாவிய தமிழ் விக்கிப்பீடியாவில் சேர்க்கப்படும்.
- தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது.