வலைவாசல்:வைணவம்/சிறப்புக் கட்டுரை/6

பாஞ்சசன்யம்

பாஞ்சசன்யம் என்பது திருமாலுடைய சங்கின் பெயராகும். இந்த சங்கானது கடலில் கிடைக்கும் வலம்புரி சங்கின் வகையைச் சார்ந்தாக கருதப்பெறுகிறது. ஆழ்வார்களில் ஒருவரான பொய்கையாழ்வார் இந்த சங்கின் அம்சமாக கருதப்பெறுகிறார். இந்த சங்கு பாஞ்சன் என்ற அசுரனிடம் இருந்ததாகவும் திருமால் அவனை போரில் வென்று சங்கினை பெற்றுக்கொண்டதால் பாஞ்சசன்யம் என்று பெயர் வந்தது. பஞ்ச இந்திரியங்களை அடக்குவதைக் குறிக்கவும் இப்பெயர் வழங்கப்படலாயிற்று. தலைச்சங்காடு சிவத் தலத்தில் கடுந்தவம் புரிந்து திருமால் பாஞ்சசன்ய சங்கினை பெற்றதாக தலவரலாறு கூறுகிறது. இந்த சங்கானது உலக உயிர்களை காப்பதற்காக பெறப்பட்டதாகவும், திருமாலுக்கு சங்கினை வழங்கிய காரணத்தினால் சிவபெருமான் சங்காரண்யேஸ்வரர், சங்கவனநாதர் என்றும் அழைக்கப்பெறுகிறார்.