வலைவாசல் பேச்சு:ஒங்கொங்
இக்கட்டுரை ஒங்கொங் விக்கித் திட்டத்தில் ஒரு பகுதியாகும். இது ஏற்கெனவே உருவாக்கப்பட்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், விரிவாக்கவும், சான்றுகள் சேர்க்கவும், புதிய கட்டுரைகளை உருவாக்கவும் போன்ற திட்டங்களை அடிப்படை நோக்காகக் கொண்டது. இதில் நீங்களும் பங்களிக்கலாம். |
|
- இன்றுதான் இப்பக்கத்தைப் பார்த்தேன். தமிழ் விக்கிப்பீடியாவின் முகப்பு (முதற் பக்கம்) போன்றே ஹொங்காங் நாட்டிற்கான வலைவாசல் பக்கம் அமைக்கப்பட்டிருப்பது சிறப்பாக இருக்கிறது. உண்மையில் நல்ல முயற்சி. உருவாக்கியவருக்கு என் வாழ்த்துக்கள்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 17:30, 7 பெப்ரவரி 2011 (UTC)
- வாழ்த்துக்களுக்கு நன்றி தேனி.எம்.சுப்பிரமணி! --HK Arun 17:33, 7 பெப்ரவரி 2011 (UTC)
- மூன்றாவது வரியின் இறுதியில் உள்ள ..சீனாவிடம் கையளித்தது. அதனைத் என்பது வரை கட்டுரையின் அகலம் இருப்பின் மிக நன்றாக இருக்கும். ஏனெனில், வழக்கமான கட்டுரை அகலத்தை மீறி அமைந்திருப்பது, பெரும்பாலான பயனருக்கு பக்கம் தோன்றியவுடனே, நல்ல தோற்றத்தைத் தராது. சீரிய பணி. வாழ்த்துக்கள். வணக்கம்.--தகவலுழவன் 00:29, 23 பெப்ரவரி 2011 (UTC)
- வணக்கம் தகவலுழவன். உங்கள் கூற்றுக்கிணங்க அகலத்தை தற்போது குறைத்துள்ளேன். (அதிகம் குறைத்தால் இடைவெளி கூடுதலாக இருக்கும்) வாழ்த்துக்கு நன்றிகள். --HK Arun 08:42, 24 பெப்ரவரி 2011 (UTC)
என்னால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விக்கிவாசலின் [பகுதியில்] கருத்திட்டு பின்னர் அழிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நான் விக்கிவாசல் என பெயரிட்டத்தற்கான காரணம் இங்கே இட்டுள்ளேன். நான் 2011ம் ஆண்டு ஹொங்கொங் தொடர்பான அனைத்துவிடயங்களையும் விக்கியில் எழுதவேண்டும் எனும் நோக்கில், அதற்கான ஒரு முகப்பாகவே இந்த விக்கிவாசலை உருவாக்கியுள்ளேன்.
இங்கே தமிழ் விக்கிப்பீடியாவில் திருத்தல் பணிகள் நிறையவே உள்ளன. விக்கிப்பீடியாவின் கொள்கையின் படி எந்தவொரு கட்டுரையையும் எவரும் திருத்தலாம் என்பதற்கு அமைய திருத்தப்பணிகளில் ஈடுபடுவதானால், கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளை திருத்தம் செய்தாலே ஒரு பாரிய பணியை செய்யமுடியும். எழுத்துப்பிழை திருத்தம் செய்வதானால் ஒரு நாளைக்கு ஒரு கட்டுரை எனும் அளவில் தொடரலாம். (என் கட்டுரைகளிலும் நிறைய எழுத்துப்பிழைகள் உள்ளன.) வலைவாசல்களில் திருத்தம் செய்வது என்றாலே; வலைவாசல்:அய்யாவழி, வலைவாசல்:கணிதம், வலைவாசல்:இந்தியா போன்றவற்றில் மொழிப்பெயர்த்தல், வார்ப்புரு வடிவமைத்தல் என பல பணிகள் இருக்கும் போது, என்னால் முழுமைப்படுத்தப்பட்டுள்ள விக்கிவாசலில் இவ்வாறான இடையூறுகள் ஏற்படுவதை நான் தேவையற்ற இடையூறுகளாகவே பார்க்கிறேன். --HK Arun 00:14, 28 பெப்ரவரி 2011 (UTC)