வல்லூரி சிறீனிவாச ராவ்
வல்லூரி சிறீனிவாச ராவ் (Valluri Srinivasa Rao) என்பவர் ஓர் இந்திய பாரம் தூக்கும் ஆண் விளையாட்டு வீரர் ஆவார். இவர் 1981 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20 ஆம் நாள் பிறந்தார். ஆந்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இவர் இந்திய இராணுவத்தின் மின்னணு மற்றும் இயந்திரவியல் படைப் பிரிவில் பணிபுரிகிறார்.
வாழ்க்கை
தொகு2003 ஆம் ஆண்டு அக்டோபர் 25 அன்று இந்தியாவின் ஐதராபாத்தில் நடைபெற்ற ஆப்ரோ-ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ராவ் ஆண்கள் 56 கி.கி எடைப்பிரிவில் பங்கேற்று வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றார் [1]. மலேசியா நாட்டின் பினாங்கு நகரில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள் 56 கி.கி எடைப்பிரிவில் பங்கேற்று போட்டியிட்ட இவர் தங்கப் பதக்கம் வென்றார்[2]. புது தில்லியில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள் 56 கி.கி எடைப்பிரிவிலும் இவர் போட்டியிட்டு வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார். 2010 ஆம் ஆண்டு அக்டோபர் 4 அன்று குவாங்சோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இதே பிரிவில் கலந்து கொண்ட ராவ் எட்டாவது இட்த்தைப் பிடித்தார் [3].
யாம்சேத்புரில் 2011 ஆம் ஆண்டு பிப்ரவரி 22 அன்று நடைபெற்ற 34 ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் ராவ் 56 கி.கி பாரம் தூக்கும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். இராணுவ விளையாட்டு கட்டுப்பாட்டு வாரியம் அணிக்காக இவர் அப்போட்டியில் விளையாடினார் [4].
மேற்கோள்கள்
தொகு- ↑ "India win 2 bronze in weightlifting". The Tribune. 26 October 2011. http://www.tribuneindia.com/2003/20031027/sports.htm#22. பார்த்த நாள்: 22 February 2011.
- ↑ "Results - 2009 Commonwealth Championships, Penang, Malaysia, (18–23 October 2009)". Indian Weightlifting Federation website.
- ↑ "Indian weightlifters fail to impress on Day One in Asian Games". என்டிடிவி. 13 November 2010 இம் மூலத்தில் இருந்து 16 நவம்பர் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101116090737/http://www.ndtv.com/article/sports/weightlifter-srinivasa-rao-wins-india-s-first-gold-66165. பார்த்த நாள்: 14 November 2010.
- ↑ "CWG bronze-medallist lifter strikes gold at National Games". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 22 February 2011. http://timesofindia.indiatimes.com/sports/events-tournaments/national-games-2011/CWG-bronze-medallist-lifter-strikes-gold-at-National-Games/articleshow/7548319.cms. பார்த்த நாள்: 22 February 2011.