வளர் புவியியல்
வளர் புவியியல் (development geography) என்பது புவியியலில் ஒரு பிரிவு ஆகும். இவ்வளர் புவியியல் வாழும் மனித இனத்தின் தரப்படுத்தப்பட்ட வாழ்க்கை முறை மற்றும் வாழ்க்கைத் தரத்தைச் சுட்டுகிறது. இங்கு வளர்ச்சி என்பது, தொடர்ந்து நிகழக்கூடிய மாற்றம் மனித வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கத்தைக் குறிக்கிறது. மாற்றத்திற்குட்பட்டுச் செல்லும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றும் வகையில் இவ்வளர் புவியியல் ஈடுபட்டுள்ளது.[1] இருப்பினும் வளர்ச்சி என்பது எப்பொழுதுமே நேர்மறையான நிகழ்வாக இருப்பதில்லை. கண்டர் பிராங்க் உலக பொருளாதார சக்தி பற்றி விமர்சனம் செய்யும் போது வளர் புவியியல் என்பது, வளர்ச்சியில் பின் தங்கியுள்ளதை வளர்ச்சிக்கு அழைத்துச் செல்கிறது என்கிறார். இது இவரது சார்ந்திருத்தல் கோட்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வளர் புவியியலில் வளர்ச்சி
தொகுவளர் புவியியலில், புவியியலாளர்கள் வளர்ச்சியின் தல பரப்பு வகையில் ஆழ்ந்த கவனம் செலுத்துகின்றனர். சமூக, அரசியல், பொருளாதாரக் காரணிகளால் எவ்வாறு வளர்ச்சியின் சிறப்பியல்களை அளவிட முடியும் என அறிய முயற்சிக்கின்றனர். பற்பல வளர்ச்சி நிலைகளில் புவியியல் காரணங்களையும், விளைவுகளையும் புரிந்து கொள்ள புவியியலாளர்கள் விழைகின்றனர். பொருளாதாரத்தில் நன்கு வளர்ச்சியடைந்த நாடுகளுடன் பொருளாதாரத்தில் குறைந்த அளவு வளர்ச்சியடைந்த நாடுகள் ஒப்பிடப்படுகின்றன.
வளர் புவியியலில் நிகழ்காலத் தேவைகள்
தொகுவடக்கு மற்றும் தெற்கு இத்தாலி நாடுகளுக்கு இடையேயான மெஜோஜியர்னோ போன்ற நாடுகளுக்குள் அதிகப்படியான மாறுபாடுகள் காணப்படுகின்றன. வளர் புவியியலில் வளர்ச்சி என்பது எதிர்கால சந்ததியினர் தங்களது சுய தேவையை எவ்வாறு எதிர்கொள்கின்றனர் என்பதை விடுத்து நிகழ்காலத் தேவைகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பதைப் புரிந்து கொள்ள முயற்சிப்பதில் நிலைநிறுத்தப்படுகிறது.
நிறையளவு சுட்டிக்காட்டிகள்
தொகுநிறையளவு சுட்டிக்காட்டிகள் என்பவை வளர்ச்சியை எண்ணிக்கை அடிப்படையில் குறிப்பிடுபவையாகும். இங்கு பொருளாதாரம் என்பது முதல் நிலைத் தொழிற்சாலைகளிலிருந்து கிடைக்கும் மொத்த தேசிய உற்பத்தியின் சதவீதம், மொத்த தேசிய உற்பத்தி/தனிநபர், வேலையின்மை விகிதம், ஆற்றல் சேமிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
ஒரு நாட்டிலிருந்து உற்பத்தி செய்யப்படும் அனைத்து பொருட்கள் மற்றும் சேவையின் மதிப்பை அளவிட மொத்த தேசிய உற்பத்தி/தனிநபர் பயன்படுகிறது. இதனைக் கொண்டு நாட்டின் பொருளாதார மற்றும் தொழில் வளர்ச்சி அளவிடப்படுகிறது. ஆயினும் மொத்த தேசிய உற்பத்தி/தனிநபரைப் பயன்படுத்துவதில் பல சிக்கல்கள் உள்ளன.
மேற்கோள்கள்
தொகு- ↑ Geography of global interactions பரணிடப்பட்டது 2008-05-28 at the வந்தவழி இயந்திரம்
குறிப்புகள்
தொகு- Allen J. Scott & Gioacchino Garofoli (2007) Development on the Ground. Routledge, London.
- Social and Spatial Inequalities பரணிடப்பட்டது 2018-03-29 at the வந்தவழி இயந்திரம்