வளிமிதவைவாழிகள்
வளிமிதவைவாழிகள் அல்லது வளியலைவாழிகள் (Aeroplankton) என்பது காற்றில் உலாவும் அல்லது மிதக்கும் சிறுவுயிர்களைக் குறிப்பதாகும். இவை காற்றின் வேகத்தால் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இட்டுச்செல்லப்படுகிறது. இவைகளின் பண்புகள் பெருங்கடலில் வாழும் மிதவைவாழிகளை ஒத்திருக்கின்றன. இவ்வளிமிதவைவாழிகளைப் பற்றி படிக்கும் படிப்பிற்கு வளியுயிரியல் எனப்படுகிறது.
வளிமிதவைவாழிகள் என அழைக்கப்படும் பெரும்பாலன உயிர்கள் மிகவும் சிறியதாகவும் நுண்ணோக்கியால் மட்டுமே காணக்கூடியதாய் உள்ளது. இவைகளை பார்ப்பதை விட கடினமானது அவைகளைக் கண்டறிவதுதான். அறிவியலாளர்கள் இதைச் சேகரிக்க வலைகள், சில பொறிகள், விமானங்கள் மற்றும் குமிழிகள் ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றனர்.
உயிர்கள்
தொகுஅதிகப்படியான நுண்ணுயிரிகள், தீநுண்மங்கள், 1000த்திற்கும் அதிகமான பாக்டீரியாக்கள், 40000 த்திற்கும் மேற்பட்ட பூங்சைகள் மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட சிற்றினங்களுல் அடங்கிய பாசிகள், குறிப்பிடத்தக்க மலைப்பாசிகள், ஈரலுத்தாவரங்கள் எனப் பல உயிர்கள் இவ்வளிமிதவைவாழிகளில் காணப்படுகின்றன. இவைகளில் தாவரங்களின் வித்துக்கள், மகரந்தங்கள் மற்றும் காற்றினால் சிதறடிக்கப்பட்ட விதைகள் தன் வாழ்நாளில் பாதியை இவ்வளிமிதவைவாளிகளாகக் கழிக்கின்றன.
இவைகளில் மிக அதிகமான சிறு விலங்குகள், பூச்சிகள் மற்றும் சிலந்திகள் ஆகியன காற்றின் வேகத்தால் இழுத்துச்செல்லப்பட்டு அவை பலநூறு அடிகளுக்கப்பால் பறக்கச் செய்கிறது.
காற்றுமண்டலத்தில் அதிகப்படியான தத்துப்பூச்சிகள் காணப்படுகின்றன. பல சிலந்தி இனங்கள் காற்றை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி பல இடங்களை அடைவதற்குப் பயன்படுத்துகிறது.
நுண்ணுயிர்களில் பாக்டீரியா வகையைச் சார்ந்த மைக்ரோகாக்கசு, பாசில்லசு மற்றும் காரினிபாக்டீரியம் ஆகியனவும், பூங்சைகளில் அல்டேர்னேரியா, ஆச்பர்சில்லசு, ஆர்மோடெண்ட்ரான் மற்றும் பெனிசில்லியம் ஆகியன பூமியின் உயர்மட்ட பகுதிகளில் பரவிக்கிடக்கின்றன என்பது பல ஆய்வுகளின் மூலம் அறியப்பட்டுள்ளது.
உதாரணம்
தொகு2009 ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆய்வு மையம் மேற்கொண்ட குமிழி ஆய்வில் பூமியில் கண்டிறாத 3 வித்தியாசமான பாக்டீரியாக்களைக் கண்டறிந்ததாகவும் அதற்கு முறையே சேனிபாக்டர் ஆய்லி, பாசில்லசு இசுரோனென்சிச் மற்றும் பாசில்லசு ஆர்யபட்டா எனப் பெயரிட்டுள்ளனர். இவ்வுயிர்கள் புறவூதா நிறத்திற்கு அதிகப்படியான எதிர்ப்புத்திறன் அல்லது தாங்கவல்ல வலிமையைப் பெற்றுள்ளதாகவும் அறியப்பட்டுள்ளது.
இதனைப் பெற 26.7 மில்லியன் கன அடி அளவுள்ள குமிழியில் 459 கிலோ அறிவியல் இயந்திரங்களை 38 கிலோ திரவ நியான்களில் முக்கியபடி பயன்படுத்தப்பட்ட பொறிகளைக்கொண்டு வளிமண்டலத்தில் 20 முதல் 40 கிலோமீட்டர் உயரமுள்ள பகுதியில் உள்ள காற்றின் மாதிரிகள் பெறப்பட்டு ஆய்வுசெய்து அறிவிக்கப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- Fulton JD, 1966, Micro organisms of the upper atmosphere, Applied Microbiology, 14(2): 241 - 244
- H SINGH, Y CHEN, A STAUDT, D JACOB, D BLAKE, B HEIKES and J SNOW, 2001, Evidence from the Pacific troposphere for large global sources of oxygenated organic compounds, Nature 410, 1078-1081
- http://www.mathaba.net/news/?x=618711 பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம்