வளைய முடி (Bowline) என்பது கயிற்று முனையில் நிலைத்த தடம் ஒன்றை உருவாக்குவதற்கான பழங்காலத்தைச் சேர்ந்த ஆனால் எளிமையான ஒரு முடிச்சு ஆகும். இது இலகுவாகப் போடத்தக்கதும், அவிழ்க்கத்தக்கதுமாக இருப்பதுடன் கயிற்றின் வலிமையை அதிகம் குறைக்காத தன்மையும் கொண்டது. இதன் முக்கியமான குறைபாடு சுமை தாங்காதபோது முடிச்சு தளர்வடையும் போக்கு ஆகும். இதனைத் தடுப்பதற்காக யோசமைட் வளைய முடி முடிச்சு உருவாக்கப்பட்டுள்ளது.

வளைய முடி
வகைதட வகை
மூலம்பழங்காலம்
தொடர்புsheet bend, double bowline, water bowline, spanish bowline, triple bowline, bowline on a bight, running bowline, poldo tackle, Eskimo bowline, cowboy bowline
அவிழ்ப்புNon-jamming
பொதுப் பயன்பாடுMaking a fixed loop in the end of a line
எச்சரிக்கைWhile widely considered a reliable knot, when tied in certain materials or loading conditions it may not hold.
ABoK
  1. 1010, #1716

நெசவாளர் முடிச்சும் இந்த முடிச்சும் அமைப்பு அடிப்படையில் ஒத்தவை, ஆனால் வளைய முடி கயிற்றின் முனையில் தடத்துடன் இருக்கும், நெசவாளர் முடிச்சு இரண்டு கயிறுகளைத் தொடுக்கப் பயன்படுகின்றது. நெசவாளர் முடிச்சு, கராம்பு முடிச்சு என்பவற்றுடன் வளைய முடி முடிச்சும் மிகவும் இன்றியமையாத முடிச்சாகக் கருதப்படுகின்றது.[1]

பயன்பாடு

தொகு

கயிறுகளின் முனையில் தற்காலிகமாகத் தடமொன்றை விரைவாக உருவாக்குவதற்காகவே முக்கியமாகப் பயன்படுகின்றது. இது பொதுவாகச் சிறிய பாய்மரக் கப்பல்களில் பயன்படுகின்றது. வளைய முடி முடிச்சோடு கூடிய கயிறு அதன் 65% வலிமையைத் தக்கவைத்துக் கொள்கிறது.[2]

குறிப்புகள்

தொகு
  1. Cassidy 1985, The Klutz Book of Knots
  2. டேவ் ரிச்சார்ட்சு, தொழில்நுட்ப நெறியாளர், கார்டேச் நிறுவனம். "Knot Break Strength vs Rope Break Strength".{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)

இவற்றையும் பார்க்கவும்

தொகு

வெளியிணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வளைய_முடி&oldid=3970581" இலிருந்து மீள்விக்கப்பட்டது