வவுனியாப் பல்கலைக்கழகம்
வவுனியாப் பல்கலைக்கழகம் (University of Vavuniya; சுருக்கமாக UoV) என்பது இலங்கையின் வடக்கே வவுனியாவில் இயங்கும் ஒரு பொதுப் பல்கலைக்கழகம் ஆகும். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிய வவுனியா வளாகத்தைப் பல்கலைக்கழகமாகத் தரமுயர்த்தும் அறிவிப்பை இலங்கை அரசு 2021 யூன் மாதத்தில் அறிவித்தது.[1][2] அதிகாரபூர்வமாக இப்பல்கலைக்கழகம் 2021 ஆகத்து 1-இல் ஆரம்பமானது. இப்பல்கலைக்கழகத்தின் முதலாவது உபவேந்தராக பேராசிரியர் தம்பு மங்களேசுவரன் அன்றைய அரசுத்தலைவர் கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டார்.[3]
University of Vavuniya වවුනියා විශ්ව විද්යාලය | |
முந்தைய பெயர் | யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் |
---|---|
குறிக்கோளுரை | நன்றின்பால் உய்ப்பது அறிவு |
வகை | பொது |
உருவாக்கம் | 1 ஆகத்து 2021 |
Academic affiliation | பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு |
வேந்தர் | எஸ். மோகனதாஸ் |
துணை வேந்தர் | அருளம்பலம் அற்புதராஜா |
அமைவிடம் | , |
மொழி | தமிழ், சிங்களம், ஆங்கிலம் |
இணையதளம் | vau.ac.lk |
வரலாறு
தொகு1991 இல், பிரயோக கணிதமும் கணித்தலும், கணக்கியல், நிதித்துறை ஆகிய கற்கை நெறிகளுக்காக வவுனியா நகரில் வட மாகாண இணைப் பல்கலைக்கழகக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. 1997 மார்ச் 26 முதல் இக்கல்லூரியை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகமாக செயற்படுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.[4] 1997 ஏப்ரல் 1 முதல் இது வவுனியா வளாகமாக இயங்கத் தொடங்கியது. இங்கு முதலில் பிரயோக விஞ்ஞான பீடம்,வியாபார கற்கைகள் பீடம் ஆகிய பீடங்கள் அமைக்கப்பட்டன. 1998 அக்டோபர் மாதத்தில் இவ்விரு பீடங்களுக்கும் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்[5]. பிரயோக விஞ்ஞான பீடத்திலே 2006 ஆம் ஆண்டளவில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பக் கற்கைநெறியும் சேர்த்துக் கொள்ளப்பட்டது. அதன் பின்னர் 2020 ஜனவரி 29 ஆம் திகதி தொழிநுட்பக் கற்கைகள் பீடம் ஆரம்பிக்கப்பட்டது.[6]
இப்பல்கலைக்கழகம் வவுனியாவில் இருந்து 10 கிமீ தூரத்தில் வவுனியா-மன்னார் வீதியில் பம்பைமடு என்ற இடத்தில் அமைந்துள்ளது. 160 ஏக்கர் காணியில் இப்பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.[5]
அமைப்பு
தொகு- வியாபார கற்கைகள் பீடம் [2]
- நிதி மற்றும் கணக்கியல் துறை
- ஆங்கில மொழி கற்பித்தல் துறை
- கருத்திட்ட முகாமைத்துவத் துறை
- மனிதவள முகாமைததுவத் துறை
- சந்தைப்படுத்தல் முகாமைத்துவத் துறை
- வியாபாரப் பொருளியல் துறை
- முகாமைத்துவ மற்றும் தொழில் உரிமையாண்மைத் துறை
- பிரயோக விஞ்ஞானபீடம் [2]
- பௌதீக விஞ்ஞானத் துறை
- உயிர்-விஞ்ஞானத் துறை
- தொழில்நுட்பவியல் கற்கைகள் பீடம்
- தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பவியல் துறை [2]
துணைவேந்தர்கள்
தொகு- பேராசிரியர் அருளம்பலம் அற்புதராஜா (8 சூலை 2024 - இன்று)[7]
- பேராசிரியர் தம்பு மங்களேசுவரன் (1 ஆகத்து 2021 - 7 சூலை 2024)
மேற்கோள்கள்
தொகு- ↑ "New state university to be established from August". Adaderana. http://www.adaderana.lk/news/74522/new-state-university-to-be-established-from-august.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை" (PDF). Archived from the original (PDF) on 28 December 2022.
- ↑ "First Vice Chancellor of the 13th University of Sri Lanka named". Colombo Page. http://www.colombopage.com/archive_21A/Jul14_1626245411CH.php.
- ↑ "History". Jaffna, Sri Lanka: University of Jaffna. பார்க்கப்பட்ட நாள் 22 October 2017.
- ↑ 5.0 5.1 "History". Archived from the original on 2021-08-01. பார்க்கப்பட்ட நாள் 1 ஆகத்து 2021.
- ↑ Oviedo de Valeria, Jenny (1994-08-02). "chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/http://www.revista-educacion-matematica.org.mx/descargas/vol6/vol6-2/vol6-2-5.pdf". Educación matemática 6 (2): 73–86. doi:10.24844/em0602.06. பன்னாட்டுத் தர தொடர் எண்:2448-8089. http://dx.doi.org/10.24844/em0602.06.
- ↑ வவுனியா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் பதவியேற்பு!!, வவுனியா.நெட், 9 சூலை 2024