வவுனியா சிறப்புப் படைத்தலைமையகத் தாக்குதல்

வவுனியா சிறப்புப் படைத்தலைமையகத் தாக்குதல் என்பது 2008, செப்டம்பர் 9 செவ்வாய்க்கிழமை அதிகாலை 3:05 மணிக்கு வவுனியாவில் அமைந்திருந்த இலங்கை இராணுவப் படைத்தலைமையகத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகளும் வான்புலிகளும் இணைந்து நடத்திய தாக்குதலைக் குறிக்கும். இந்த தாக்குதலில் மொத்தம் 10 கரும்புலிகளும் புலிகளின் மூன்று வானூர்திகளும் பங்கேற்றன. இத்தாக்குதலின் போது அங்கிருந்த கண்காணிப்பு கதுவீ (ராடர்) முற்றாக அழிக்கப்பட்டதாகவும், வான்புலிகளின் வானூர்திகளும் தளத்தின் மீது தாக்குதல் நடத்திவிட்டு பாதுகாப்பாக திரும்பியுள்ளதாகவும் படைத்தளத்தின் மீது கேணல் கிட்டு பீரங்கி படைப்பிரிவினர் நடத்திய செறிவான ஆட்லறி தாக்குதலில் படையினருக்கு பேரழிவு ஏற்பட்டுள்ளது என்றும் விடுதலைப்புலிகள் தெரிவித்தனர்[1]. இந்த தாக்குதலில் ஈடுபட்ட பத்து கரும்புலிகளும் உயிரிழந்தனர்.

இலங்கை இராணுவ முகாமில் ராடர் தளத்தில் பணியாற்றிய இரு இந்தியர்கள் காயமடைந்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது[2].

இழப்புகள் தொகு

விடுதலைப் புலிகளின் தகவல்களின் படி இத்தாக்குதல்களில் இலங்கைப் படையினர் 20-க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டு பலர் படுகாயமடைந்தனர். வெடிபொருள் களஞ்சியங்களும் தொலைத்தொடர்புக் கோபுரமும் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப ஆய்வகமும் வானூர்தி எதிர்ப்பு ஆயுதமும் முற்றாக தாக்கி அழிக்கப்பட்டன. சிறிலங்கா படையினரின் வன்னித்தலைமையகமும் சிறப்புப்படையணியின் வன்னித்தலைமையகமும் பெரும் சிதைவுக்குள்ளாகின.

தமது தரப்பில் 10 படையினர் கொல்லப்பட்டதாகவும் விடுதலைப் புலிகளின் வானூர்தி ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் இலங்கை இராணுவம் அறிவித்தது[3].

உயிரிழந்த கரும்புலிகள் தொகு

  • கரும்புலி லெப்டினன்ட் கேணல் மதியழகி
  • கரும்புலி மேஜர் ஆனந்தி
  • கரும்புலி கப்டன் கனிமதி
  • கரும்புலி கப்டன் முத்துநகை
  • கரும்புலி கப்டன் அறிவுத்தமிழ்
  • கரும்புலி லெப்டினன்ட் கேணல் வினோதன்
  • கரும்புலி மேஜர் நிலாகரன்
  • கரும்புலி கப்டன் எழிலகன்
  • கரும்புலி கப்டன் அகிலன்

மேற்கோள்கள் தொகு

  1. வவுனியா தாக்குதலில் ராடர் தளம் முற்றாக தாக்கியழிப்பு; வானூர்திகள் பாதுகாப்பாக தளம் திரும்பின: விடுதலைப் புலிகள்
  2. Heavy losses in Sri Lanka clash
  3. "10 soldiers and equal number LTTE killed in fighting around Security Force complex in Vavuniya". Archived from the original on 2012-01-03. பார்க்கப்பட்ட நாள் 2008-09-10.

வெளி இணைப்புகள் தொகு