வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் பிரிவு

இலங்கையின் வவுனியா மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலாளர் பிரிவு

வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் பிரிவு இலங்கையின் வவுனியா மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். வவுனியா மாவட்டம் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தெற்கே வன்னியில் வடமாகாணத்தின் தெற்கு எல்லையில் அமைந்துள்ளது. வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 24 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.

ஆகிய இடங்கள் இப் பிரதேச செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. இப்பிரிவு தொடர்ச்சியான நிலப்பகுதியில் அமையாமல் பல்வேறு தொடர்பில்லாத துண்டுகளாக அமைந்துள்ளது. வவுனியா மாவட்டத்தில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளை இணைத்து இப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இப்பிரிவின் தெற்கிலும் கிழக்கிலும், அநுராதபுரம் மாவட்டமும்; வடக்கில் வவுனியா பிரதேச செயலாளர் பிரிவும்; மேற்கில் வவுனியா பிரதேச செயலாளர் பிரிவும், வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவும் எல்லைகளாக உள்ளன.

இப்பிரிவு 200 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இப்பிரிவே வவுனியா மாவட்டத்தின் மிகச் சிறிய பிரதேச செயலாளர் பிரிவு ஆகும்.[1].

குறிப்புக்கள்

தொகு
  1. புள்ளிவிபரத் தொகுப்பு 2007, தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம், இலங்கை

இவற்றையும் பார்க்கவும்

தொகு

வெளியிணைப்புக்கள்

தொகு