வவுனியா பிரதேச செயலாளர் பிரிவு
இலங்கையின் வவுனியா மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலாளர் பிரிவு
வவுனியா பிரதேச செயலாளர் பிரிவு இலங்கையின் வவுனியா மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். வவுனியா மாவட்டம் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தெற்கே வன்னியில் வடமாகாணத்தின் தெற்கு எல்லையில் அமைந்துள்ளது. வவுனியா பிரதேச செயலாளர் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 43 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.
- ஆறுமுகத்தான்புதுக்குளம்,
- ஆசிகுளம்,
- ஈச்சங்குளம்,
- இளமருதங்குளம்,
- கள்ளிக்குளம்,
- கல்மடு,
- கந்தபுரம்,
- காதர்சின்னக்குளம்,
- கூமங்குளம்,
- மகாறம்பைக்குளம்,
- மகிழங்குளம்,
- மாளிகை,
- மாரக்காரன்பளை,
- மருதமடு,
- மருதங்குளம்,
- மூன்றுமுறிப்பு,
- நெளுக்குளம்,
- நொச்சிமோட்டை,
- ஓமந்தை,
- பாலமோட்டை,
- பம்பைமடு,
- பண்டாரிக்குளம்,
- பன்றிக்கெய்தகுளம்,
- பட்டாணிச்சிப்புளியங்குளம்,
- பூவரசங்குளம்,
- புதுக்குளம்,
- ராஜேந்திரன்குளம்,
- இறம்பைக்குளம்,
- சாலம்பைக்குளம்,
- சமளங்குளம்,
- சாஸ்திரிகூளாங்குளம்,
- செக்கடிப்புலவு,
- சேமமடு,
- தாண்டிக்குளம்,
- வைரவப்புளியங்குளம்,
- வவுனியா நகரம்,
- வேளாங்குளம்,
- வெளிக்குளம்
- தோணிக்கல்,
- கோவில்குளம்
ஆகிய இடங்கள் இப் பிரதேச செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. இப்பிரிவின் தெற்கில், வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவும், மேற்கில் மன்னார் மாவட்டமும், வடக்கில் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவும், கிழக்கில் வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் பிரிவும்,எல்லைகளாக உள்ளன. இது அநுராதபுரம் மாவட்டத்துடனும் எல்லைகளைக் கொண்டுள்ளது.
இப்பிரிவு 614 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது[1].