வஸ்தராஜபுரம் சாஸ்தா கோவில்

வஸ்தராஜபுரம் சாஸ்தா கோவில் தமிழ்நாடு, மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள வஸ்தராஜபுரம் என்ற சிறிய ஊரில் அமைந்துள்ள ஐயப்பன் கோயில். இங்கு அருள் பாலிக்கும் ஸ்ரீ தர்ம சாஸ்தா தனது இரு தேவியரான பூர்ணா புஷ்கலாம்பாளுடன் தனது பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர நாளன்று இக்கோவிலில் பூஜை, பஜனை மற்றும் பிரார்த்தனை எல்லாம் மிகச் சிறப்பாக நடந்து வருகிறது.

வரலாறு

தொகு

சுமார் 200 வருடங்களுக்கு முன்பு மயிலாடுதுறைக்கு அடுத்த குத்தாலத்தில் ராமச்சந்திர ஐயர் என்பவர் வாழ்ந்து வந்தார். தனது குல தெய்வமான வஸ்தராஜபுரம் ஐயனாரின் மீது அளவுகடந்த பக்தி கொண்ட அவருக்கு ஒருமுறை குடும்பத்தாருடன் மிகவும் அவசரான நிலையில் வெளியூர் செல்ல நேர்ந்தது. அப்படிக் கிளம்பிய அவர் வீட்டின் பின் புறக் கதவை மூடுவதற்கு மறந்துவிட்டார். வீட்டில் ஒருவரும் இல்லாத நிலையில் வீட்டுக் கதவும் திறந்தே இருந்தது.

ஒரு வாரம் கழித்து, ஒரு நாள் அப்பெரியவரின் கனவில் சாஸ்தா தோன்றி, "உன் வீட்டுக் கதவைத் திறந்தே வைத்துவிட்டு வந்திருக்கிறாயே, நானல்லவோ காவல் காத்துக் கொண்டிருக்கிறேன்" என்றார். திடுக்கிட்டு விழித்துக் கொண்ட பெரியவர் உடனடியாக வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போதுதான் "தான் பின்புறக் கதவை மூடாமலே வந்துவிட்ட விஷயம் தெரிந்தது. பேச நா எழாமல், தனது உடைமைகளைக் பாதுகாத்துக் கொடுத்த ஐயனாரைக் கண்ணீர் மல்க வணங்கினார்.

இவற்றையும் பார்க்கவும்

தொகு