வஸ்தோக் 3
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வஸ்தோக் 3 என்பது, சோவியத் விண்வெளித் திட்டத்தின் ஒரு பகுதியாகும். வஸ்தோக் 3, வஸ்தோக் 4 ஆகிய இரண்டும் ஒரு நாள் இடைவெளியில் ஏவப்பட்டன. ஒன்றுக்கு மேற்பட்ட மனிதரை ஏற்றிய விண்கலங்கள் ஒரே நேரத்தில் சுற்றுப்பாதையில் இருந்தது இதுவே முதல் முறை ஆகும். இத்தகைய ஒரு நிலைமையைக் கையாள்வது குறித்துக் கற்றுக்கொள்வதற்கு, சோவியத் விண்வெளித் திட்டக் கட்டுப்பாட்டாளர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது.
வஸ்தோக் 3 | |||||
---|---|---|---|---|---|
திட்டச் சின்னம் | |||||
திட்ட விபரம் | |||||
திட்டப்பெயர்: | வஸ்தோக் 3 | ||||
அழைப்புக்குறி: | Сокол (Sokol - "Falcon") | ||||
பயணக்குழு அளவு: | 1 | ||||
ஏவுதல்: | ஆகஸ்ட் 11, 1962 08:24 UTC Gagarin's Start | ||||
இறக்கம்: | ஆகஸ்ட் 15, 1962 06:52 UTC 42°2′N 75°45′E / 42.033°N 75.750°E | ||||
கால அளவு: | 3d/22:28 | ||||
சுற்றுக்களின் எண்ணிக்கை: | 64 | ||||
சேய்மைப்புள்ளி: | 218 கிமீ | ||||
அண்மைப்புள்ளி: | 166 கிமீ | ||||
காலம்: | 88.5 நிமிடங்கள் | ||||
சுற்றுப்பாதை சாய்வு: | 65.0° | ||||
திணிவு: | 4722 கிகி | ||||
தொடர்புள்ள திட்டங்கள் | |||||
|
வஸ்தோக் 3, அட்ரியன் நிக்கொலாயேவால் இயக்கப்பட்டது. வஸ்தோக் 4 விண்கலம், வஸ்தோக் 3 கலத்துக்கு அண்மையில் சுற்றுப்பாதையில் நுழைந்தபோது அதைக் கண்டு, நிக்கொலாயேவ் பூமிக்கு அறிவித்தார். இரு கலங்களிலும் இருந்த விண்வெளிவீரர்களும் வானொலி மூலம் தொடர்பு கொண்டனர். இதுவே இரு விண்கலங்களிடையே இடம்பெற்ற முதலாவது தொடர்பாகவும் அமைந்தது. நிக்கொலாயேவ் வஸ்தோக் 3 இலிருந்து எடுத்த நிகழ்படமே சுற்றுப்பாதையில் இருந்து பூமியை வண்ண நிகழ்படமாக எடுத்த முதல் நிகழ்வாகவும் அமைந்தது.