வாகதீச்வரி
வாகதீச்வரி கருநாடக இசையின் 34 வது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூர்ண மேள பத்ததியில் 34 வது இராகத்திற்கு போகாச்சாயாநாட என்று பெயர்.[1][2]
இலக்கணம்
தொகுஆரோகணம்: | ஸ ரி3 க3 ம1 ப த2 நி2 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி2 த2 ப ம1 க3 ரி3 ஸ |
சிறப்பு அம்சங்கள்
தொகு- ஷட்சுருதி ரிஷபம் கம்பிதமாக இசைக்கப்பட வேண்டும்.
- விவாதி மேளம் (பகை ஸ்வரங்களைக் கொண்ட மேளம்).
- இதன் மத்திமத்தை பிரதி மத்திமமாக மாற்றினால் இராகம் நாசிகாபூஷணி (70) ஆகும்.
- வாகதீச்வரி மேளத்தின் மத்திமத்தை கிரக பேதம் செய்தால் நாகாநந்தினி (30) மேளமும், தைவதத்தை கிரக பேதம் செய்தால் பவப்பிரியா (44) மேளமும் தோன்றுகிறன (மூர்ச்சனாகாரக மேளம்).
உருப்படிகள்
தொகுவகை | உருப்படி | இயற்றியவர் | தாளம் |
---|---|---|---|
கிருதி | பரமாதமுடு | தியாகராஜர் | ஆதி |
கிருதி | நாதானு சந்தான | கோடீஸ்வர ஐயர் | ஆதி |
கிருதி | வாகதீஸ்வரி | சுத்தானந்த பாரதியார் | ஜம்பை |
ஜன்ய இராகங்கள்
தொகுவாகதீச்வரியின் ஜன்ய இராகங்கள் இவை.