நாசிகாபூஷணி
நாசிகாபூஷணி கருநாடக இசையின் 70 வது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூர்ண மேள பத்ததியில் 70 வது இராகத்தின் பெயர் நாஸாமணி.
இலக்கணம்
தொகுஆரோகணம்: | ஸ ரி3 க3 ம2 ப த2 நி2 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி2 த2 ப ம2 க3 ரி3 ஸ |
- ஆதித்ய என்றழைக்கப்படும் 12வது சக்கரத்தில் 4வது மேளம்.
- இந்த இராகத்தில் ஷட்ஜம், ஷட்சுருதி ரிஷபம்(ரி3), அந்தர காந்தாரம்(க3), பிரதி மத்திமம்(ம2), பஞ்சமம், சதுசுருதி தைவதம்(த2), கைசிகி நிஷாதம்(நி2) ஆகிய சுரங்கள் வருகிறன.
சிறப்பு அம்சங்கள்
தொகு- விவாதி மேளம் (பகை சுரங்களைக் கொண்ட மேளம்).
- இதன் மத்திமத்தை சுத்த மத்திமமாக மாற்றினால் இராகம் வாகதீச்வரி (34) ஆகும்.
- நாசிகாபூஷணி மேளத்தின் தைவதத்தை கிரக பேதம் செய்தால் ஷட்விதமார்க்கிணி (46) மேளம் தோன்றுகிறது (மூர்ச்சனாகாரக மேளம்).
உருப்படிகள்
தொகு- கிருதி : மாரவைரி ரமணி, தியாகராஜர், ரூபகம்
- கிருதி : தந்தருள் அய்யா, கோடீஸ்வர ஐயர், மிஸ்ர சாபு
- கிருதி : ஸ்ரீ ரமா ஸரஸ்வதி, முத்துசுவாமி தீட்சிதர், ஆதி