வாசுதேவன் சிறீனிவாசு

இந்தியக் கணிதவியலாளர்

வாசுதேவன் சிறீனிவாசு (Vasudevan Srinivas) இந்தியாவைச் சேர்ந்த ஒரு கணிதவியலாளராவார். 1958 ஆம் ஆண்டு சூன் மாதம் 6 அன்று இவர் பிறந்தார். இயற்கணித வடிவவியலில் நிபுணத்துவம் பெற்றுள்ளார். மும்பையிலுள்ள டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தின் கணிதப் பள்ளியில் மூத்த பேராசிரியராக பணிபுரிகிறார். [1]

வாசுதேவன் சிறீனிவாசு
Vasudevan Srinivas
2009 ஆம் ஆண்டில் சிறீனிவாசு
பிறப்பு6 சூன் 1958
தேசியம்இந்தியா
துறைஇயற்கணித வடிவவியல் கணிதம்
பணியிடங்கள்டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகம்
கல்வி கற்ற இடங்கள்பெங்களூர்ப் பல்கலைக்கழகம்
சிக்காகோ பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்சிபென்சர் இயானே பிளாச்சு
முனைவர் பட்ட 
மாணவர்கள்
அமலேந்து கிருட்டிணா
விருதுகள்சாந்தி சுவரூப் பட்நாகர் விருது (2003)

சிறீனிவாசு பெங்களூர் பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் பட்டமும் சிக்காக்கோ பல்கலைக் கழகத்தில் 1978 ஆம் ஆண்டில் முதுநிலை அறிவியல் மற்றும் 1982 ஆம் ஆண்டில் முனைவர் பட்டங்களையும் பெற்றார். அமெரிக்க கணிதவியலாளர் சிபென்சர் பிளாச்சு வாசுதேவன் சீறீனிவாசுவின் முனைவர் பட்ட ஆராய்ச்சிக்கு மேற்பார்வையாளராக இருந்தார். வாசுதேவன் 1983 ஆம் ஆண்டு முதல் மும்பையின் டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தில் கல்வி கற்பித்தல் வாழ்க்கையை வருகைதரும் பேராசிரியராகத் தொடங்கினார்.

முக்கியமாக இயற்கணித வடிவவியலில் ஒற்றை இயற்கணித வகை சுழற்சிகளை ஆய்வு செய்வதில் சீறீனிவாசு நிபுணத்துவம் பெற்றவராக இருந்தார். பரிமாற்று இயற்கணித இடைமுகத்தின் திட்டவட்டமான தொகுதிகள், வகுப்பி வர்க்கக் குழுக்கள், தனித்துவமான காரணிமயமாக்கல் களங்கள் மற்றும் இல்பர்ட்டு செயல்பாடுகள் மற்றும் பெருக்கம் தொடர்பான ஆய்வுகளையும் இவர் மேற்கொண்டார்.

கணித அறிவியல் பிரிவில் இந்தியாவின் மிக உயர்ந்த அறிவியல் விருதான சாந்தி சுவரூப் பட்நாகர் விருது 2003 ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது. [2]

பிற விருதுகள் தொகு

  • 1987 ஆம் ஆண்டில் இளம் விஞ்ஞானிகளுக்கான இந்திய தேசிய அறிவியல் அகாதமி பதக்கம்
  • 1995 ஆம் ஆண்டுக்கான கணிதப் பிரிவுக்காக பி.என். பிர்லா அறிவியல் பரிசு
  • புதுதில்லி இந்திய தேசிய அறிவியல் அகாடமியின் உறுப்பினர்.
  • 2008 ஆம் ஆண்டு உலக அறிவியல் அகாதமி விருது. AS பரிசு. [3]
  • 2012 ஆம் ஆண்டு அமெரிக்க கணித சங்கத்தின் உறுப்பினர். [4]

மேற்கோள்கள் தொகு

  1. "Vasudevan Srinivas". Tata Institute of Fundamental Research. http://www.math.tifr.res.in/~srinivas/. பார்த்த நாள்: 29 June 2013. 
  2. "Indian Fellow: Vasudevan Srinivas". Indian National Science Academy இம் மூலத்தில் இருந்து 26 பிப்ரவரி 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140226040936/http://insaindia.org/detail.php?id=P09-1499. பார்த்த நாள்: 29 June 2013. 
  3. "Prizes and Awards". The World Academy of Sciences. 2016. http://twas.org/opportunities/prizes-and-awards. 
  4. List of Fellows of the American Mathematical Society, retrieved 2013-07-26.