பெங்களூர்ப் பல்கலைக்கழகம்

(பெங்களூர் பல்கலைக்கழகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பெங்களூரு பல்கலைக்கழகம் (Bangalore University)கர்நாடகத்திலுள்ள பெங்களூருவில்] அமைந்துள்ளது. இது ஒரு பொது மாநிலப் பல்கலைக்கழகம் ஆகும். இந்தியாவிலுள்ள பழமையான பல்கலைக்கழகங்களுள் இதுவும் ஒன்று. இது 1886 இல் தொடங்கப்பட்டது. இந்திய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பின் (AIU) ஒரு பகுதியாகும். பல்கலைக்கழக மானியக் குழுவைச் (UGC) சார்ந்துள்ளது.

பெங்களூரு பல்கலைக்கழகம்
குறிக்கோளுரைJnaanam, Vijanana Sahitam
வகைபொது
உருவாக்கம்1886
வேந்தர்ஹான்ஸ்ராஜ் பரத்வாஜ்
(கர்நாடக ஆளுநர்கள்)
துணை வேந்தர்பி. திம்மே கௌடா
அமைவிடம்,
12°56′19.59″N 77°30′11.45″E / 12.9387750°N 77.5031806°E / 12.9387750; 77.5031806
வளாகம்நகர்ப்பகுதி
1,100 ஏக்கர்
சேர்ப்புபல்கலைக்கழக மானியக் குழு, NAAC, AIU
இணையதளம்www.bangaloreuniversity.ac.in

வரலாறு

தொகு

முதலில் "சென்ட்ரல் கல்லூரியாக" 1886இல் ஆங்கில அரசால் கட்டமைக்கப்பட்ட இப்பல்கலைக்கழகம், பல்கலைக்கழக மானியக் குழுவால் ஜூலை 10, 1964 அன்று "பெங்களூரு பல்கலைக்கழகம்" என்று பெயர் மாற்றப்பட்டது. மேற் படிப்பிற்கான கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் அப்போதைய மைசூர் மாநிலத்தின் கீழ் கொண்டு வருவதற்காக இம்மாற்றம் செய்யப்பட்டது. இப்பல்கலைக்கழகம் ஞானபாரதி வளாகத்திலிருந்து இயங்குகிறது.

"சென்ட்ரல் கல்லூரி" (1886 இல் தொடங்கப்பட்டது) மற்றும் பொறியியல் பல்கலைக்கழக விஸ்வேஸ்வரய்யா கல்லூரி (UVCE)(1912இல் தொடங்கப்பட்டது) இரண்டும் "பெங்களூரு பல்கலைக்கழகத்தில் உள்ளடக்கப்பட்டன. இந்தியாவிலேயே அதிகமான பிஎச்டி பட்டதாரிகளை உருவாக்கும் பல்கலைக்கழகம் இதுதான்[சான்று தேவை]. அதனாலேயே வெளிநாட்டவர்களிடம் பிரபலமடைந்துள்ளது இப் பல்கலைக்கழகம். இதன் மூலம் பல வெளிநாட்டு மாணவர்கள் இப்பல்கலைக்கழகத்தில் படித்து வருகின்றனர்.

வளாகம்

தொகு

இதற்கு இரண்டு வளாகங்கள் உள்ளன- நகர வளாகம் மற்றும் சென்ட்ரல் கல்லூரி வளாகம்- ஞான பாரதி வளாகம்.

நிர்வாகம்

தொகு

பி. திம்மே கௌடா இப்பல்கலைக்கழகத்தின் புதிய துணை-வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன் மங்களூர் பல்கலைக்கழகத்தில் வேதியியல் பேராசிரியராக இருந்தார். இதற்கு முன்னிருந்த துணை வேந்தர் டாக்டர். என். பிரபு தேவ் அக்டோபர் 12,2012 அன்று தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு கர்நாடக சுகாதார அமைப்பு குழுவின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரது பணி ஃபெப்ரவரி, 2013இல் முடிவடைவதாக இருந்தது.

தனிச்சிறப்புகள்

தொகு
  • 2001 இல் இப்பல்கலைக்கழகம் [[தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையினால் (NAAC)அங்கீகரிக்கப்பட்டு ஐந்து நட்சத்திர அந்தஸ்து பெற்றது. புதிய தரப்படுத்துதல் முறையின் கீழ் மறு-அங்கீகாரம் பெற்று அதன் கீழ் A தகுதியும் பெற்றது.
  • நோபல் பரிசு பெற்ற ச. வெ. இராமன், இந்திய அறிவியல் கழகத்தின்கீழ் வேலை செய்தபோது இப்பல்கலைக்கழகத்தினுடன் தொடர்பு கொண்டிருந்தார். நோபல் பரிசு கிடைக்கக் காரணமாக இருந்த கண்டுபிடிப்பை அவர் இந்தப் பல்கலைக்கழக வளாகத்தில் 1927 இல் வெளியிட்டார், 1930 இல் அவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
  • 2007 இல் நோபல் பரிசு பெற்ற லியோனிடு ஹுர்விக்ஸ் 1965 முதல் 1968 வரை இப்பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர்.
  • திருநங்கையருக்கு படிக்க இடம் கொடுத்த முதல் நிர்வாகமும் இதுதான்[சான்று தேவை]. ஒவ்வொரு துறையிலும் திருநங்கையருக்காக ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இன்றும் இப்பல்கலைக்கழகத்தின் நுழைவுப் படிவத்தில் "ஆண்", "பெண்", "மற்றையர்" என பால் குறிப்புகள் மூன்று உள்ளன.

உடன் இணைந்த கல்லூரிகள்

தொகு

பெங்களூரு பல்கலைக்கழகத்தின் கீழ் 70 அரசாங்கக் கல்லூரிகள், 52 உதவி பெறும் கல்லூரிகள், 11 உதவி பெறாத கல்லூரிகள் இடம் பெறுகின்றன.

அவற்றுள் குறிப்பிடத்தக்க சில:

  • நிர்வாக மேலாண்மை கல்லூரி, பெங்களூர்
  • பொறியியல் பல்கலைக்கழக விஸ்வேஸ்வரய்யா கல்லூரி
  • செயின்ட் ஜோசப் கல்லூரி, பெங்களூர்
  • மவுண்ட் கார்மல் கல்லூரி, பெங்களூர்
  • மேலாண்மை மற்றும் அறிவியல் ஆச்சார்யா நிறுவனம்
  • கிறிஸ்து ஜெயந்தி கல்லூரி
  • கார்டன் சிட்டி கல்லூரி, பெங்களூர்
  • தேசிய கல்லூரி, பெங்களூர்
  • பிரசிடென்சி கல்லூரி, பெங்களூர்
  • பெங்களூர் மேலாண்மை அகாடமி, பெங்களூர்
  • அறிவியல் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ், சிந்தாமணி-563125 என்ற பிரகதி கல்லூரி
  • சுவாமி விவேகானந்தா கிராம முதல் தர கல்லூரி, சந்தாபுரா, பெங்களூரு