வாசுதேவபுரம் மகாவிஷ்ணு கோயில்

வாசுதேவபுரம் மகாவிஷ்ணு கோயில், இந்தியாவில் கேரள மாநிலத்தில் ஆலுவா (எர்ணாகுளம் மாவட்டம்) புறநகர்ப் பகுதியில் குன்னுகரா பஞ்சாயத்தில் கொச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து மேற்கே 9 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயிலாகும். இக்கோயில்மகரிஷி பரசுராமனால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது. விஷ்ணுவுடன் இங்கு மஹாலக்ஷ்மியின்உள்ளார்.

கோயில் வளாகம்

புராணம் தொகு

மகரிஷி பரசுராமர் மகாவிஷ்ணுவின் சிலையை, அவர் மகாலட்சுமி தேவியைத் தழுவிக் கொண்டிருக்கும் பிரதிஷ்டை செய்தார். குடமுழுக்கிற்குப் பிறகு மகரிஷி கோயில் பொறுப்புகளை சில உள்ளூர் பிராமணர்களிடம் ஒப்படைத்தார். மகாலட்சுமியின் அருளால் இந்த பிராமணர்கள் செல்வ வளம் பெற்றனர். ஆனால் பிற்காலத்தில் அவர்களே தம் மாறுபட்ட நடத்தையின் காரணமாக தம் வீழ்ச்சிக்கு வழிவகுத்தனர். கோயிலும் நாளடைவில் செல்வத்தையும் பெருமையையும் இழந்துவிட்டது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு குருவாயூரப்பனின் சிறந்த சீடரான வில்வமங்கலம் சுவாமிகள், கோயிலுக்குச் சென்று மகாவிஷ்ணுவின் சேவையில் ஈடுபட்டிருந்தபோது மகாலட்சுமியின் தரிசனம் அவருக்குக் கிடைத்தது.

இறைவனும், இறைவியும் இருந்த கோவியின் மோசமான நிலையைக் கண்டு சுவாமிகள் வருந்தி, அதற்கான காரணத்தை தேவியிடம் கேட்டறிந்தார். கோயிலின் அதிகாரிகளும் மக்களும் கோயில் சடங்குகளில் கவனம் செலுத்துவதில்லை என்றும், ஆதலால் தேவி இறைவனுக்கு சேவை செய்வதில் கவனமாக இருந்ததாகவும் கூறினாள். அதன் காரணமாக தேவியால் மக்களின் பிரார்த்தனைகளைக் கேட்க நேரமின்றிப் போனது.

அப்போது வில்வமங்கலம் சுவாமிகள் தேவியிடம், பக்தர்களின் பிரார்த்தனைகள் தீர்க்கப்படாவிட்டால், அவர்கள் கோயிலுக்குச் செல்வதை நிறுத்திவிட்டு நாத்திகர்களாக மாறுவர் என்றும், ஆதலால் பிரார்த்தனைகளைக் கேட்க சிறிது நேரம் ஒதுக்குமாறும் வேண்டினார். வேண்டுகோளைக் கேட்ட தேவி, வருடத்திற்கு ஒருமுறை பக்தர்களுக்கு தரிசனம் தருவதாக உறுதியளித்தார்.

அதனால் திருப்தியடையாத சுவாமிகள் மீண்டும் மஹாலக்ஷ்மியிடம், செல்வத்திற்கு கூடுதலாக புகழ், ஆரோக்கியம், அறிவு, வேலையில் வெற்றி, நல்ல மற்றும் நீடித்த திருமண வாழ்க்கை போன்ற பல்வேறு வேண்டுதல்களைத் தீர்த்துவைக்கும்படி கேட்டுக்கொண்டார். அவருடைய நேர்மையான வேண்டுகோளைக் கேட்ட தேவி வைசாக (ஏப்ரல் / மே) மாதத்தில் அக்ஷய திரிதியாவில் தொடங்கி 8 நாட்களுக்கு தனது பக்தர்களுக்கு அஷ்டலட்சுமிகளாக அதாவது வீரலட்சுமி, கஜலட்சுமி, சந்தானலட்சுமி, விஜயலட்சுமி, தானியலட்சுமி, ஆதிலட்சுமி, தனலட்சுமி மற்றும் மகாலட்சுமி என்ற 8 வெவ்வேறு வடிவங்களில் ஆசீர்வாதங்களைப் பொழிவதாகப் பதிலளித்தார்.

அதுமுதல் தாம்பூல சமர்ப்பணம் இந்த கோயிலில் ஒரு முக்கிய பங்குவகிக்க ஆரம்பித்தது. [1]

காணிக்கைகள் தொகு

அரிசி மற்றும் மஞ்சள் அளித்தல், திருவமுதம், மூணு உருளி நைவேத்யம், முழுக்காப்பு போன்றவை இக்கோயில் காணிக்கைகளாகும்.

மற்ற திருவிழாக்கள் தொகு

அஸ்வின மாத பௌர்ணமி, பௌர்ணமியில் நடைபெறும் முக்கிய விழாவாகும். பல வகையான அர்ச்சனைகளான லக்ஷ்மி ஸஹஸ்ரநாமம், கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி அஷ்டகம் போன்றவை இங்கு செய்யப்படுகின்றன. இவை அதிர்ஷ்டத்தைத் தருவதாக என்று மக்கள் நம்புகிறார்கள். அஸ்தமி ரோஹினி, திருவோணம், அட்சய திருதயி போன்றவை முக்கிய நாள்களாகும்.

மேற்கோள்கள் தொகு

  1. "Vasudevapuram Sree Mahavishnu Temple (വാസുദേവപുരം ശ്രീ മഹാവിഷ്ണു കോവില്‍) Vasudevapuram" (in அமெரிக்க ஆங்கிலம்). 2011-12-01. பார்க்கப்பட்ட நாள் 2020-03-12.