வாணி அம்மை (கதைமாந்தர்)

பொன்னியின் செல்வனில் வரும் கதாபாத்திரம்

வாணி அம்மை கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் வருகின்ற சேந்தன் அமுதனின் தாயார் ஆவார். மேலும் மந்தாகினியின் தங்கையாகவும், பூங்குழலியின் அத்தையாகவும் சித்தரிக்கப்படுகிறார். பிறவி ஊமையான வாணி அம்மை, தஞ்சைத் தனிக்குளத்தார் ஆலயத்துக்குப் மலர்க் கைங்கரியம் செய்யும் வேலையை செய்கிறார். வாணி அம்மையின் மகனான சேந்தன் அமுதனும் பூக்குடலை ஏடுத்து சிவகைங்கரியம் செய்யும் பக்திமானாக இருக்கிறான்.

வாணி அம்மை
பொன்னியின் செல்வனின் கதை மாந்தர்
முதல் தோற்றம் பொன்னியின் செல்வன்
உருவாக்கியவர் கல்கி
தகவல்
பட்டப்பெயர்(கள்)சின்ன ஊமைச்சி
தொழில்மலர்க் கைங்கரியம் செய்தல்
குடும்பம்சேந்தன் அமுதன் மந்தாகினி
குறிப்பிடத்தக்க பிறர்பூங்குழலி
மதம்சைவம்
தேசிய இனம்சோழ நாடு

பொன்னியின் செல்வனில்

தொகு

சகோதரிகளான மந்தாகினியும், வாணி அம்மையும் ஒத்த உருவம் உடையவர்களாக இருக்கிறார்கள். நந்தினி தேவியும் இவ்வாறு ஒத்த உருவத்துடன் இருப்பது பலருக்கும் வியப்பினை தருகிறது. செம்பியன் மாதேவியின் பிள்ளை இறந்து பிறந்ததாக கூறி, அதனை புதைப்பதற்கு வாணி அம்மையிடம் கூறிவிடுகின்றார்கள். அவள் புதைப்பதற்கு ஏற்பாடு செய்யும் போது, கருத்திருமன் தடுத்துவிடுகிறான். இவரும் ஐந்தாண்டுகள் வேறிடத்தில் வசிக்கின்றார்கள். [1] அதன் பின் கருத்திருமன் இல்லாமல் போகவே, மீண்டும் அரண்மனைக்கு வருகிறாள் வாணி அம்மை. செம்பியன் மாதேவிக்கு சேந்தன் அமுதன் தான் தன்னுடைய பிள்ளை என்று தெரிந்துவிடுகிறது. இருந்தும் வாணியம்மையே சேந்தன் அமுதனை வளர்த்துவருகிறார்.

நூல்கள்

தொகு

வாணி அம்மையை கதாபாத்திரமாக கொண்டு வெளிவந்துள்ள நூல்கள்.

மேற்கோள்கள்

தொகு

இவற்றையும் பார்க்கவும்

தொகு

சேந்தன் அமுதன்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாணி_அம்மை_(கதைமாந்தர்)&oldid=3532774" இலிருந்து மீள்விக்கப்பட்டது