வாதநோய்க்காரணி
வாதநோய்க்காரணி (Rheumatoid factor; RF) என்பது முடக்குவாத நோயில் பொதுவாகக் காணப்படும் தன்னெதிர்ப்பு எதிர்ப்பான்களைக் (ஒரு உயிரினத்தின் சொந்த திசுக்களுக்கெதிரான எதிர்ப்பான்கள்) குறிக்கும்[1]. இவை, எதிர்ப்பான்-ஜி (IgG) யின் படிகவடிவமாகும் துண்டுடன் (Fc) இணையும் எதிர்ப்பான்களைக் குறிக்கும். வாதநோய்க்காரணியும், எதிர்ப்பான்-ஜி யும் இணைந்து உருவாக்கும் எதிர்ப்பி இணைவுகள் (Immune Complexes) நோய்நிகழ்முறைகளில் பங்களிக்கலாம்.
வாதநோய்க்காரணிகள் மீக்குளிர் கோளப்புரதங்களாகவும் (இரத்த மாதிரிகளை குளிரூட்டும்போது வீழ்படிவமாகும் எதிர்ப்பான்கள்) இருக்கலாம்; இவை, இரண்டாம்வகை [பல்லிணை எதிர்ப்பான்-ஜி (polyclonal IgG)-யுடன் இணையும் ஓரிணை எதிர்ப்பான்-எம் (monoclonal IgM)] அல்லது மூன்றாம்வகை (பல்லிணை எதிர்ப்பான்-ஜி யுடன் இணையும் பல்லிணை எதிர்ப்பான்-எம்) மீக்குளிர் கோளப்புரதங்களாக (cryoglobulins) இருக்கலாம்.
வாதநோய்க்காரணிகள் எதிர்ப்பான்களின் எந்தவொரு ஒரினவகையைச் சார்ந்ததாகவும் இருக்கலாம்: எதிர்ப்பான்-ஏ (IgA), எதிர்ப்பான்-ஜி, எதிர்ப்பான்-எம் (IgM)[2], எதிர்ப்பான்-ஈ (IgE),[3] எதிர்ப்பான்-டி (IgD)[4].
வெளியிணைப்புகள்
தொகு- MedlinePlus on RF
- Labtestsonline பரணிடப்பட்டது 2011-06-28 at the வந்தவழி இயந்திரம் page on RF
மேற்கோள்கள்
தொகு- ↑ "Rheumatoid Arthritis Symptoms". Archived from the original on 2012-07-01. பார்க்கப்பட்ட நாள் 2011-06-21.
- ↑ Hermann, E; Vogt, P; Müller, W (1986). "Rheumatoid factors of immunoglobulin classes IgA, IgG and IgM: Methods of determination and clinical value". Schweizerische medizinische Wochenschrift 116 (38): 1290–7. பப்மெட்:3775335.
- ↑ Herrmann, D; Jäger, L; Hein, G; Henzgen, M; Schlenvoigt, G (1991). "IgE rheumatoid factor. Occurrence and diagnostic importance in comparison with IgM rheumatoid factor and circulating immune complexes". Journal of investigational allergology & clinical immunology 1 (5): 302–7. பப்மெட்:1669588.
- ↑ Banchuin, N; Janyapoon, K; Sarntivijai, S; Parivisutt, L (1992). "Re-evaluation of ELISA and latex agglutination test for rheumatoid factor detection in the diagnosis of rheumatoid arthritis". Asian Pacific journal of allergy and immunology 10 (1): 47–54. பப்மெட்:1418183.