வாத்துப் பாசி

வாத்துப் பாசி
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
W. Arrhiza
இருசொற் பெயரீடு
Wolffia Arrhiza
(L.) Horkel ex Wimm.

வகைப்பாடு தொகு

தாவரவியல் பெயர் : வுல்பியா அரிகீலா Wolffia arrhiza

குடும்பம் : லெம்னேசியீ (Lemmaceae)

இதரப் பெயர்கள் தொகு

  1. இலைப்பாசி
  2. வாத்துப்பாசி

அமைவு முறை தொகு

பூக்கும் தாவரங்களில் மிகச் சிறிய செடி வுல்பியா ஆகும். குளம், குட்டை போன்ற இடங்களில் மிதக்கும் சிறிய செடி ஆகும். இலை மிகச் சிறிய துனுக்கைப்போல் இருக்கும். இது 1 மி.மீ. முதல் 1.5மி.மீ விட்டம் கொண்டது. ஒவ்வொரு துனுக்கின் ஓரமும் சிறிதளவு மேலுக்கு மடிந்திருப்பதால் இவை அருகில் நெருங்கும்போது ஒன்றாக சேர்ந்து ஒரே பரப்பரப்பாக இருக்கும்.

விக்கி படங்கள் தொகு

 
மிகச் சிறிய தாவரம்
 
வுல்பியா அரிகீலா
 
பூக்கள் மற்றும் உள்ளுறுப்புகள்

பூக்கள் தொகு

செடி முழுவதும் ஒரு இலை மட்டுமே உடையது. இதற்கு வேர் கிடையாது. பூக்கள் உண்டாகிறது. அவை 0.7 மி.மீ. விட்டம் உடைய மிகச் சிறிய பூ ஆகும். பூக்களில் மிகச் சிறியதும் இதுவே. இலைகளின் விளிம்பின் அடிப்பாகத்தில் இருக்கும் இடுக்கிலிருந்து பூ தோன்றும் மடல் போன்ற ஓர் உறுப்பினுள் ஒன்று அல்லது இரண்டு கேசரங்களும் ஒரு சூலகமும் இருக்கும். ஒவ்டிவாரு கேசரமும் ஓர் ஆண் பூ சூலகம் பெண் பூ ஒரு மடலுக்குள் இருக்கும். [1] இலைப்பாசி பூக்கும் தாவரங்களில் மிகச் சிறிய செடிகளைக் கொண்ட லெம்னேசி குடும்பத்தைச் சேர்ந்தது. இதில் 30 இனங்களும், 4 சாதிகளும் உள்ளன. இலைபாசியை மீன்களும், வாத்து முதலிய நீர்ப்பறவைகளும் உணவாக கொளளும். இதனால் இதற்கு வாத்துப்பாசி என்றும் அழைப்பர் மீன் தொட்டிகளிலும் வளர்ப்பதுண்டு.

காணப்படும் பகுதிகள் தொகு

வுல்பியாவில் 10 முதல் 12 இனச் செடிகள் உள்ளன. இவைகளை ஐரோப்பா, தெற்கு ஆசியா, பிரேசில், ஜாவா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் நீர் நிலைகளில் வளர்கின்றன.

மேற்கோள் தொகு

| 1 || சிறியதும் - பெரியதும் [1] || அறிவியல் வெளியீடு || ஜூன் 2001

  1. சிறிதும் - பெரியதும். அறிவியல் வெளியீடு. http://books.google.com/books/about/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF.html?id=vKXyPAAACAAJ. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாத்துப்_பாசி&oldid=3909393" இலிருந்து மீள்விக்கப்பட்டது