வாத்து பந்தயம்
வாத்து பந்தயம் (Flying duck race)(இந்தோனேசிய: பாகு இடியாக்) என்பது மேற்கு சுமாத்திராவில் உள்ள பயகும்புவில் நடைபெறும் ஒரு பாரம்பரிய விளையாட்டுப் போட்டியாகும்.[1] இப்போட்டியில் வாத்துகள் குறிப்பிட்ட எல்லைக் கோட்டை நோக்கிப் பறக்கவிடப்படுகின்றன.[1]
முழுமையாகப் பறக்க முடியாத இளம் பெண் வாத்துகள் (4-6 மாத வயதுடையவை) இப்போட்டியில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வாத்துகளின் அலகுகளில் எண்கள் குறியிடப்படுகின்றன. இப்பந்தய தூரம் 600 முதல் 2,000 மீட்டர்கள் (2,000 முதல் 6,600 அடி) வரை இருக்கலாம்.[1] பந்தயங்கள் வாரந்தோறும்[2] வெவ்வேறு பகுதிகளில், தெருக்களில் அல்லது நெல் வயல்களில் நடத்தப்படுகின்றன.[1] இப்பந்தயத்தின் போது இசை மற்றும் அணிவகுப்பு நடவடிக்கைகளும் நடைபெறுகிறது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 TRAVEL / Fowl play in Payakumbuh: Duck racing is the unique sport of West Sumatra by Sue Nelson 21 February 1993
- ↑ Exploring West Sumatra, the Tour de Singkarak way by Syofiardi Bachyul Jb, The Jakarta Post July 28, 2013