வானவர் என்போர் வானுலகில் வாழ்பவர்கள் என நம்பப்படுகிறது. வானவர் யார் என உணர்ந்துகொள்வதற்கு வான், வானவன், வானுலகம் என்னும் கட்டுரைகளை ஒப்புநோக்கிக்கொள்வது இன்றியமையாதது.

சமயக் கோட்பாடுதொகு

சங்க இலக்கியக் குறிப்புகள்தொகு

 • இந்திரனை வானவர்கோன் என்கின்றனர். பஞ்சவன் எனப் போற்றப்படும் பாண்டிய மன்னன் ஒருவன் இந்த இந்திரனுக்கு உதவி இந்திரனது முத்தாரத்தைப் பரிசாகப் பெற்றான் என்பது ஒரு தொன்மக் கதை.
 • 'நீல வானத்தில் விரும்பி ஆடும் 'வானவ மகளிர்' போல மதுரைத் திருமண வீடுகளில் நடனமாடும் 'பாசிழை மகளிர்' மதுரைக்காஞ்சியில் குறிப்பிடப்பட்டுள்ளனர். [1]
 • வானவர், வானவர் தலைவன், வானவர்கோன், வானவர் மகளிர், வானவல்லி முதலான தொடர்கள் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்களில் வருகின்றன.
 • வானவரம்பன் எனப் பதிற்றுப்பத்தில் வரும் தொடரானது 'வானவர் அன்பன்' எனவும் பிரிக்கக்கூடிய பாங்கில் அமைந்துள்ளது. [2]

இங்கெல்லாம் வானுலக மாந்தர் பாவனை மாந்தர்களாகச் சுட்டப்பட்டுள்ளனர்.

அடிக்குறிப்புதொகு

 1. மணம் புணர்ந்து ஓங்கிய, அணங்குடை நல் இல்,
  ஆய் பொன் அவிர் தொடிப் பாசிழை மகளிர்
  ஒண் சுடர் விளக்கத்து, பலர் உடன் துவன்றி,
  நீல் நிற விசும்பில் அமர்ந்தனர் ஆடும்
  வானவ மகளிர் மான, (மதுரைக்காஞ்சி 579 முதல்)
 2. இமயவரம்பன் என்னும் தொடரும் அவ்வாறே 'இமையவர் அன்பன்' எனப் பிரிக்கக்கூடியதாக அமைந்துள்ளதை நினைவுகூரவேண்டிய நிலை உள்ளது.

பார்க்கதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வானவர்&oldid=1509370" இருந்து மீள்விக்கப்பட்டது