வான்முகில்

வான்முகில் என்பவர் சிறந்த தமிழ்க் கவிஞர் ஆவார். தமிழில் நிறைய கவிதைத் தொகுப்பு நூல்களை எழுதியுள்ளார். பொன்னடியான் அமைத்த தமிழ்க்கவிஞர் மண்றத்தின் செயல்முனைவாளர். கடற்கரை கவியரங்கம், மலைச்சாரல் கவியரங்கம் ஆகிய அமைப்புகள்லை இயக்கியவருள் ஒருவராவார்.

பிறப்பும் கல்வியும் தொகு

இவர் வே.சண்முக சுந்தரம்- விசாலாட்சி அம்மாளுக்கு மகனாக 05-01-1944 இல் பிறந்தார். இவர் இயற்பெயர் ச.ச.குமார் என்பது. இவரது துணைவியார் பெயர் காந்திமதி. இவரும் இலக்கிய ஆர்வம் உடையவர்.இளங்கலையில் விலங்கியல் பட்டம் பெற்ற இவர் தமிழ், ஆங்கிலப் புலமை பெற்றவர். தமிழில் கவிதை, கட்டுரை, நாடகங்கள் பலவும் எழுதியுள்ளார்.

எழுத்துப் பணிகள் தொகு

பொன்னடியானின், முல்லைச் சரம் எனும் இதழில் கவிதைகள் பல எழுதியுள்ளார். பல்கலைக்கழக கருத்தரங்குகளில் கலந்து ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார். இவர் கடற்கரை கவியரங்கம் எனும் அமைப்பை ஏற்படுத்தி, அதில் அரங்கேற்றிய கவிதைகளைத் தொகுத்து, அலைகள் ஆயிரம் எனும் பெயரில் வெளியிட்டார். உதகையில், மலைச்சாரல் கவியரங்கம் எனும் பெயரில் ஓர் அமைப்பைத் தொடங்கி 100 கவியரங்குகளை நடத்தினார்.

படைப்புகள் தொகு

  • கடற்கரைக் கவிதைகள்
  • பீம்புஸ்ஸி
  • தார்ப்பாலை
  • சிரிக்க வைக்கும் திப்பிலிராஜா கதைகள்
  • உலகக் கவிஞர்களின் வாழ்க்கைக் கதைகள்
  • பாரதிதாசனும் கிளாடுமெக்கேயும் 1,2
  • பழஞ்சீனக் கவிதைகள்
  • பாரதிதாசன் பரம்பரையில் மோகனரங்கன்.[1]

பெற்ற பரிசுகள் தொகு

1990 ஆம் ஆண்டு தமிழக அரசின், தமிழ்வளர்ச்சிக்கான சிறந்த நூலுக்கான மூன்றாம் பரிசை இவரது, தார்ப்பாலை கவிதைத் தொகுப்பு நூல் பெற்றுள்ளது.

உசாத்துணை தொகு

1) முகம் மாமணி," 100 சாதனையாளர்கள்" மணிவாசகர் பதிப்பகம் 1994.

  1. [www.marinabooks.com "வான்முகில் நூல்கள்"]. marinabooks.com. பார்க்கப்பட்ட நாள் 6 சூலை 2017. {{cite web}}: Check |url= value (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வான்முகில்&oldid=3741370" இலிருந்து மீள்விக்கப்பட்டது