வான் உச்சி தொலைநோக்கி

வான் உச்சி தொலைநோக்கி (zenith telescope) என்பது தொலைநோக்கியின் ஒரு வகையாகும். நேராக வான் உச்சியை நோக்கியோ அல்லது வான் உச்சிக்கு அருகிலோ பார்க்க உதவும் வகையில் இத் தொலைநோக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, நட்சத்திரங்களின் நிலையைத் துல்லியமாக நோக்கிடவும், பொதுவாக தொலைநோக்கிகளை எளிமையாக நிறுவிடவும் அல்லது இரண்டிற்கும் உதவுகிறது.

வான் உச்சி தொலைநோக்கி
1898 ல் உருவாக்கப்பட்ட வானியல்சார் மற்றும் வான் உச்சி தொலைநோக்கி

செம்மையான (classic) வான் உச்சி தொலைநோக்கியானது மட்டமாக்கும் திருகுகளைக்கொண்டு நிறுத்தப்பட்ட கிடை-குத்துத் அச்சமைப்பினைக் (altazimuth mount) கொண்டுள்ளது. தொலைநோக்கியானது மிகவும் துல்லியமான நிலைகளையும், கண்ணருகு வில்லையுடன் (eyepiece) இணைக்கப்பட்ட திருகு அளவியும் கொண்டது.[1] வான் உச்சி தூரங்களிலுள்ள சிறிய மாற்றங்களை அளக்கவும், வானியல் சார் அட்சரேகைகளைக் கண்டறியவும் உதவுகிறது.

மான்யுமெண்ட் டு தி கிரேட் ஃபையர் ஆஃப் லண்டன் (Monument to the Great Fire of London) என்ற இடத்திலுள்ள வான் உச்சி தொலைநோக்கிகளும், 1980 ல் வடதுருவத்தில் நிறுவப்பட்ட மிகவும் துல்லியமான வான் உச்சி தொலைநோக்கிகளும் சில வான் உச்சி தொலைநோக்கிகளின் வகைகள் ஆகும். நாசா சுற்றுப்பாதை சிதைபொருள் வானாய்வக (NASA Orbital Debris Observatory) வான் உச்சி தொலைநோக்கி மற்றும் 6 மீட்டர் விட்டம் கொண்ட பெரிய வான் உச்சி தொலைநோக்கி (Large Zenith Telescope) ஆகியவை வான் உச்சி தொலைநோக்கிகளுக்கு சில உதாரணங்கள். இவ்வகை தொலைநோக்கிகளில் திரவ ஆடிகள் பயன்படுத்தப்படுகின்றது.[2]

மேலும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1911encyclopedia.org,Geodesy பரணிடப்பட்டது சூலை 25, 2008 at the வந்தவழி இயந்திரம்
  2. Cabanac, Rémi A.; Borra, Ermanno F.; Beauchemin, Mario (1998). "A Search for Peculiar Objects with the NASA Orbital Debris Observatory 3 Meter Liquid Mirror Telescope". The Astrophysical Journal 509: 309. doi:10.1086/306488. Bibcode: 1998astro.ph..4267C. 

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வான்_உச்சி_தொலைநோக்கி&oldid=3454056" இலிருந்து மீள்விக்கப்பட்டது