வான் (சொல்விளக்கம்)
வான் என்னும் தமிழில் வானம் எனவும் வழங்கப்படும். வான் என்னும் சொல் பெயர்ச்சொல்லாகவும் உரிச்சொல்லாகவும் இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. பெயர்ச்சொல்லாகப் பயன்படுத்தப்படும்போது அது மழையைக் குறிக்கிறது. [1]
உரிச்சொல்லாகப் பயன்படுத்தப்படும்போது இது பண்பை உணர்த்தும் பெயரடையாக [2] வருகிறது. வான் என்னும் சொல் உணர்த்தும் பண்புப் பொருள்களை எடுத்துக்காட்டுகளூடன் இங்குக் காணலாம்.
வான் - உரிச்சொல்
தொகுபொருள் | மேற்கோள் (நூலின் பெயர் அடிக்குறிப்பாகத் தரப்பட்டுள்ளது) |
---|---|
உயர்வு | வான்கலம் [3] வான்கழல் [4] |
தலைக்கு மேல் உள்ள வெளியிடம் | வான்குரீஇக் கூடு [5] [6] |
மழைமேகம் | வான்கேழ் நிதியம் [7] வான்கொள் தூவல் [8] |
வெள்ளை நிறம் | வான்கோல் இலங்கு வளை [9] வான்சுதை வண்ணம் [10] |
வானுலகம் [11] | வான் சோறு கொண்டு தீம் பால் வேண்டும் முனித்தலைப் புதல்வர் தந்தை தனித் தலைப் பெருங் காடு முன்னிய பின்னே [12] |
ஒன்றுமில்லாத வெற்றிடம் | வான் தோய்வு அற்றே காமம் [13] |
இவற்றையெல்லாம் எண்ணிப்பார்த்து வானவன், வானவர், வானுலகம் முதனான சொற்களின் பொருளை உணர்ந்துகொள வேண்டும். தே < தேன் < தேவர் என்னும் சொல்லையும் இதனோடு ஒப்பிட்டு உணர்ந்துகொள்ள வேண்டும்.
பார்க்க
தொகுஅடிக்குறிப்பு
தொகு- ↑ வான் நின்று உலகம் வழங்கி வருதலால்
தான் அமிழ்தம் என்று உணரல் பாற்று (திருக்குறள்) - ↑ உரிச்சொல் கிளவி விரிக்கும் காலை,
இசையினும் குறிப்பினும் பண்பினும் தோன்றி,
பெயரினும் வினையினும் மெய் தடுமாறி (தொல்காப்பியம் 2-297) - ↑ பெரும்பாணாற்றுப்படை 477
- ↑ குறிஞ்சிப்பாட்டு 126
- ↑ தூக்கணாங்குருவிக் கூடு
- ↑ சிறுபஞ்சமூலம் 25
- ↑ சிறுபாணாற்றுப்படை 249
- ↑ அகநானூறு 133
- ↑ அகநானூறு 261
- ↑ திருக்குறள் 714
- ↑ இறந்தபின் வானுலகில் வாழ்கின்ற தந்தைக்கு மகன் அளிக்கும் சோறு
- ↑ புறநானூறு 250
- ↑ குறுந்தொகை 102