வாயில்லாம்குன்னு பகவதி கோயில்

கேரளத்தின் பாலக்காடு மாவட்டதில் உள்ள கோயில்

வாயில்லாம் குன்னு பகவதி கோயில் (Vayilyamkunnu Bhagavathi Temple) என்பது தென்னிந்திய மாநிலமான, கேரளத்தின், பாலக்காடு மாவட்டதில் அமைந்துள்ள ஒரு கோயில் ஆகும். இது பாலக்காட்டில் இருந்து 24 கி.மீ (15 மைல்) தொலைவில் செல்லப்பா தேரிக்கு செல்லும் வழியில் கேரளத்தின் வரலாற்று நிலமான வள்ளுவநாட்டின் கட்டம்பாழிபுரத்தில் அமைந்துள்ளது.

இக்கோயிலில் குடிகொண்டிருக்கும் தெய்வம், முன்னொரு காலத்தில் பன்னிரண்டு குழந்தைகளைப் பிரசவித்த 'பறட்சி' என்னும் அசாதாரணமான பெண்தான் என்று நம்பப்படுகிறது. ஆண்டுக்ககு ஒருமுறை இங்கு களமெழுது பட்டு என்னும் விழாவானது ஏழு நாட்கள் கொண்டாடப்படுகிறது.[1]

குறிப்புகள்

தொகு
  1. கேரளா ஒரு சுற்றுலா பார்வை, நூல், பக்கம்307, வி.கே.டி. பாலன், மதுரா வெளியீடு, 2005, சென்னை