வாரன் தெ லா ரூ
வாரன் தெ லா ரூ (Warren De la Rue) (15ஜனவரி 1815 - 19 ஏப்பிரல் 1889) ஒரு பிரித்தானிய வானியலாளரும் வேதியியலாளரும் ஆவார். இவர் வானியல் ஒளிப்படவியலில் ஆற்றிய முன்முனைவான பணிக்காகப் பெயர்பெற்றவர்.[1][2][3][4]
வாழ்க்கை
தொகுவாரன் குவர்ன்சேவில் பிறந்தார். இவரது தந்தையார் இலண்டனில் எழுதுபொருள் அங்காடியை நிறுவிய தாமசு தெ லா ரூ ஆவார். இவரது தாயார் வாரன் எனப்படும் ஜேன் ஆவார்.[5]
இவர் பாரீசு பார்பே கல்லூரியில் தன் கல்வியை முடித்த பிறகு தன் தந்தையாரின் வணிகத்தை மேற்கொண்டார். எனினும் ஓய்வு நேரத்தில் வேதியியல், மின்னியல் ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளார். இவர் இந்த தலைப்புகளில் பல ஆய்வுக் கட்டுரைகளை 1836 முதல் 1848 வரை வெளியிட்டுள்ளார்.[6]
இவர் 1840 இல் ஒரு வெற்றிடக் குழலில் பிளாட்டினம் கம்பிச் சுருளை வைத்து அதில் மின்சாரத்தைச் செலுத்தி முதல் உலக மின்விளக்கைக் கண்டுபிடித்துள்ளார்.[7][8][9]பிளாட்டினத்தின் உயர் உருகுநிலை அதை உயர் வெப்பநிலையில் இயக்க உதவும் என்பதும் வெற்றிடத்தில் வளிம மூலக்கூறுகள் மிக அருகியே இருப்பதால் வெற்றிடக் குழலின் பிளாட்டினத்துடன் வினைபுரிய இயலாதமைyaaல் அதன் வாழ்நாள் நீடிக்கும் என்பதும் இந்த வடிவமைப்பின் அறிவியல் அடிப்படையாக விளங்குகிறது. இது மிக திறம்பட்ட வடிவமைப்பு தான் என்றாலும் பிளாட்டினத்தின் உயர்விலையால் வணிகவியலாக பயன்படுத்த முடியாமற் போனது.[10]
ஜேம்சு நாசுமித்தால் வானியலுக்கு ஈர்க்கப்பட்ட இவர் 1850 இல் ஒரு 13 அங்குல தெறிப்புவகை தொலைநோக்கியைப் புனைந்துள்ளார். இது முதலில் கேனான்பரியிலும் பின்னர் மிடில்செக்சில் உள்ள கிரான்போர்டிலும் நிறுவப்பட்டது. இதைப் பயன்படுத்தி தனித்த அழகும் தெளிவும் உள்ள பல வான்பொருள்களின் வரைவுகளை உருவக்கினார்.[6]
வானியல் ஆராய்ச்சிக்கு இவர் ஆற்றிய முன்னோடிப் பணி ஒளிப்படக்கலையைப் பயன்படுத்தியதே எனலாம்.[11]
இவர் 1851 இல் இவரது கவனத்தை ஜார்ஜ் பிலிப்சு பாண்டு அந்த ஆண்டின் கண்காட்சியில் காட்டிய புதுவகை நிலாப்படம் தான் மிகவும் ஈர்த்துப் பெருங்கிளர்ச்சியை தூண்டியுள்ளது இவர் பின்னர் மிக வேகமான ஈரக் கொல்லோடியச் செயல்முறையைப் பின்பற்றி மிகத்தெளிவான நிலா வரையறுப்பு ஒளிப்படங்களை வெற்றிகரமாக எடுத்துள்ளார். இவரது நிலா ஒளிப்படங்களை.1865 இல் இலெவிசு மோரிசு உரூதர்பர்டு நிலாப்படங்கள் எடுக்கும் வரை எதுவும் விஞ்சிடவில்லை.[6]
இவர் 1854 இல் சூரிய இயற்பியலில் கவனத்தைத் திருப்பினார். சூரிய மேற்பரப்பின் நிலையை ஒளிப்படங்கள் வழியாக அன்றாடம் அறிய இவர் ஒளிச் சூரிய வரைகருவியை உருவாக்கிக் கிடைத்த அறிக்கையை 1859 இல் பிரித்தானியக் கழகத்துக்கும் இங்கிலாந்து வான்வரைபடம் எனும் தலைப்பில் இவர் தனது பெக்கேரிய விரிவுரைக்காகவும் (Phil. Trans. vol. clii. pp. 333–416 ) அனுப்பிவந்தார்.. இக்கருவியின் ஒழுகான செயலியக்கம் 1858 இல் இவரால் தொடங்கி வைக்கப்பட்டு,14 ஆண்டுகள் வரை தொடர்ந்தது; இது பின்னர் அரசு கிரீன்விச் நோக்கீட்டகத்தில் 1873 முதல் 1882 வரையிலும் தொடர்ந்து இக்கருவி இயங்கிவந்தது. இந்த ஆய்வில் 1862 முதல் 1866 வரையில் பெற்ற முடிவுகள் Researches on Solar Physics என்ற தலைப்பில் இரண்டு நினைவுவரைகளில் விவாதிக்கப்பட்டது. இவை இவரால் பேரா. பாபோர் சுட்டீவட்டுடனும் பெஞ்சமின் உலோவேயுடனும்இணைந்து Phil. Trans. (vol. clix. pp. 1–110, vol. clx. pp. 389–496) ஆகியவற்றில் வெளியிடபட்டது.[6]
இவர் சில அரிய நிலாப்படங்களை முதன்முதலாக எடுத்தமையால் "தெ லா ரூ" எனும் நிலாக் குழிப்பள்ளம் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டது.
இவர் 1860 ஜூலை 18 அன்று இசுப்பெயினில் ஏற்பட்டமுழு சூரிய ஒளிமறைப்பைப் பதிவு செய்ய தனது ஒளிச் சூரியவரைக் கருவியை இசுபெயினுக்கு கொண்டு சென்றார்.[12]
இந்தப் பயணம் முன்பே கூறிய பெக்கேரிய விரிவுரைக்கான கருப்பொருள் ஆனது. இந்த ஒளிப்படங்கள் சூரியனின் செந்தணல் வீச்சை ஐயத்துக்கு இடமின்றி ஒளிமறைப்பின்போது நிலா விளிம்புகளில் காட்டின. இவர் 1873 இல் இருந்து வானியலில் தன் முனைப்பான செயல்பாட்டை நிறுத்தினார். பிறகு தன் வானியல் கருவிகளை ஆக்சுபோர்டு பகலைக்கழக நோக்கீட்டகத்துக்கு அளித்துள்ளார். அதற்குப் பின்னரும் 1887 ஆம் ஆண்டில் அதே வான்காணகத்துக்கு தன் 13 அங்குல ஒளிமுறிவுவகைத் தொலைநோக்கியையும் கார்த்தே து சியுலில் நடந்த பன்னாட்டு ஒளிப்பட வானளக்கையில் நோக்கீட்டகம் பங்கேற்பதற்காக வழங்கியுள்ளார்.[6]
இவர் 1856 முதல் 1862 வரை முனைவர் மூல்லர் உடன் இணைந்து பல வேதியியல் ஆய்வுரைகளை வெளியிட்டுள்ளார், இவர் 1868 முதல் 1883 வரை 14,600 வெள்ளிக்குளோரைடு மின்கலங்கல் அமைந்த மின்கல அடுக்கைப் பயன்படுத்தி வளிமங்களில் மின்சாரத்தைச் செலுத்தி அவற்றின் மின் இயல்புகளை ஆய்வு செய்துள்ளார். இவர் 1862 இலும் 1864 முதல்1866 வரையும் இருமுறை வேதியியல் கழகத்திலும் அரசு வானியல் கழகத்திலும் தலைவராக இருந்துள்ளார். அரசு வானியல் கழகம் 1862 இல் தன் பொற்பதக்கத்தை இவருக்கு வழங்கியது. இவர் 1850 ஜூன் மாதத்தில் அர்சு கழகத்தின் ஆய்வுறுப்பினராகத் தேர்வானார் [13] அரசு கழகம் 1863 இல் கெக்கேரிய விரிவுரைத் தகைமையையும் 1864 இல் அரசு பதக்கத்தையும் இவருக்கு ." 1860 இல் நிகழ்ந்த முழு சூரிய ஒளிமறைப்பின்போது இவரெடுத்த நோக்கிடுகளுக்காகவும் அவற்றின் வானியல் சார்ந்த ஒளிப்படவியல் மேம்பாட்டுக்காகவும் " வழங்கியது.[6]
இவர் 1889 இல் இலண்டனில் இறந்தார். இவர் குவர்ன்சேவைச் சார்ந்த தாமசு பவுள்சு என்பவரின் மூன்றாம் மகளாகிய ஜியார்ஜியானாவை மணந்தார். இவர்களுக்கு நான்கு மகன்களும் ஒரு மகளும் உண்டு.
தகைமைகளும் விருதுகளும்
தொகு- அரசு வானியல் கழகப் பொற்பதக்கம், 1862.
- அரசு பதக்கம், அரசு கழகம், 1864.
- இலாலண்டு பரிசு, 1866.
- நிலாவின் தெ லா ரூ குழிப்பள்ளம் இவரது பெயர் இடப்பட்டுள்ளது.
- அரசாணைத் தளபதி (பிரான்சு).
- புனித மவுரிசு, புனித இலசாரசு ஆணைத் தளபதி (இத்தாலி).
- உரோசு பேரரசு ஆணை வீரர் (பிரேசில்).[14]
குறிப்புகள்
தொகு- ↑ Hartog, Philip Joseph (1897). "Rue, Warren de la". Dictionary of National Biography 49. London: Smith, Elder & Co. 387–389.
- ↑ "Warren De la Rue (obituary)". Monthly Notices of the Royal Astronomical Society (Royal Astronomical Society) 50 (4): 155–164. 1890. doi:10.1093/mnras/50.4.155. Bibcode: 1890MNRAS..50..155.. http://articles.adsabs.harvard.edu/full/1890MNRAS..50..155.. பார்த்த நாள்: 2 November 2015.
- ↑ Margaret Lindsay Huggins (1889). "Warren De La Rue (obituary)". The Observatory 12 (150): 244–250. Bibcode: 1889Obs....12..245H. http://articles.adsabs.harvard.edu//full/1889Obs....12R.243./0000244.000.html. பார்த்த நாள்: 2 November 2015.
- ↑ "Warren de la Rue". Nature 40 (1019): 26–28. 1889. doi:10.1038/040026a0. http://www.biodiversitylibrary.org/item/61657#page/68/mode/1up. பார்த்த நாள்: 19 November 2015.
- ↑ Hirshfeld, Alan W. (2009). "De la Rue, Warren". In Hockey, Thomas; Trimble, Virginia; Williams, Thomas R. (eds.). The Biographical Encyclopedia of Astronomers. New York: Springer Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-387-31022-0. பார்க்கப்பட்ட நாள் 22 August 2012.
- ↑ 6.0 6.1 6.2 6.3 6.4 6.5 ஒன்று அல்லது மேற்பட்ட முந்தைய வரிகள் தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: "De la Rue, Warren". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 7. (1911). Cambridge University Press. Footnotes:
- Monthly Notices Roy. Astr. Soc. 1. 155
- Journ. Chem. Soc. lvii. 441
- Nature, xl. 26
- தி டைம்ஸ் (22 April 1889)
- Royal Society, Catalogue of Scientific Papers.
- ↑ The Teleghraphic Journal and Electrical Review. 24. The Electrical review, ltd.. 26 April 1889. p. 483. https://books.google.com/books?id=hgwAAAAAMAAJ&pg=PA483.
- ↑ Kitsinelis, Spiros (1 November 2010). Light Sources: Technologies and Applications. Taylor & Francis US. p. 32. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4398-2079-7.
- ↑ Levy, Joel (1 March 2003). Really Useful: The Origins of Everyday Things. Firefly Books. p. 89. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-55297-622-7.
- ↑ Le Conte, David (2011). "Warren De La Rue–Pioneer astronomical photographer". The Antiquarian Astronomer (Society for the History of Astronomy) 5: 14–35. Bibcode: 2011AntAs...5...14L. http://articles.adsabs.harvard.edu/full/2011AntAs...5...14L. பார்த்த நாள்: 1 November 2015.
- ↑ Le Conte, David (2008). "Two Guernseymen and Two Eclipses". The Antiquarian Astronomer (Society for the History of Astronomy) 4: 55–68. Bibcode: 2008AntAs...4...55L. http://articles.adsabs.harvard.edu/full/2008AntAs...4...55L. பார்த்த நாள்: 2 November 2015.
- ↑ "Proceedings of the Royal Society of London, Volume 5, page 954". The Royal Society. பார்க்கப்பட்ட நாள் 22 September 2015.
- ↑ Burke, Sir Bernard The general armory of England, Scotland, Ireland, and wales, 1884
வெளி இணைப்புகள்
தொகு- வாரன் தெ லா ரூ எழுதிய அல்லது இவரைப்பற்றிய ஆக்கங்கள் விக்கிமூலத்தில்:
- பொதுவகத்தில் Warren De la Rue தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.