வார்னர் பிரீமியர்
வார்னர் பிரீமியர் (ஆங்கில மொழி: Warner Premiere) என்பது 2006 முதல் 2013 வரை செயல்பட்ட அமெரிக்க நாட்டு வார்னர் புரோஸ். கோம் என்டர்டெயின்மென்ட்டின் நேரடி-காணொளி சேவை மற்றும் வார்னர் புரோஸ். நிறுவனத்தின் துணை நிறுவனமாகும்.
முன்னைய வகை | நேரடி-காணொளி என்ற முத்திரை வார்னர் புரோஸ். கோம் என்டர்டெயின்மென்டு |
---|---|
நிலை | வார்னர் புரோஸ். கோம் என்டர்டெயின்மென்டு, வார்னர் புரோஸ். இயங்குபடம் |
நிறுவுகை | 2006 |
செயலற்றது | 2013 |
தலைமையகம் | வார்னர் புரோஸ். இஸ்டுடியோஸ், பர்பேங்க், பர்பாங்க், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா |
தொழில்துறை | வீட்டு காணொளி |
உற்பத்திகள் | இயற்பியல் மற்றும் டிஜிட்டல் காணொளி வெளியீடுகள் |
தாய் நிறுவனம் | வார்னர் புரோஸ். கோம் என்டர்டெயின்மென்டு (வார்னர் புரோஸ்.) |
பிரிவுகள் | ரா பீட் வார்னர் பிரீமியர் டிஜிட்டல் |
இந்த நிறுவனத்தின் முத்திரை நேரடி வெளியீட்டிற்கு கூடுதலாக, வார்னரின் துணை நிறுவனங்களான டிசி காமிக்ஸ் மற்றும் வார்னர் புரோஸ். இயங்குபடம் போன்ற பல நேரடி-காணொளி இயங்குபடங்களுக்கு பயன்படுத்தப்பட்டது. வளர்ந்து வரும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை மற்றும் இலக்கமுறைப் பல்திறவாற்றல் வட்டு சந்தையில் ஒரு பெரிய சரிவு காரணமாக, ஆறு வருட செயல்பாட்டிற்குப் பிறகு வார்னர் பிரீமியரை மூடிவிட்டதாக வார்னர் பிரதர்ஸ் 2012 இல் அறிவித்தது.[1]